சீனாவில் இருந்து 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து 2015-ம் ஆண்டு ஜூலை வரையிலான ஓராண்டு காலத்தில் 610 பில்லியன் டொலர்கள் பெறுமதியான மூலதனங்கள் வெளியேறின. பின்னர் 2015 ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 141.66 பில்லியன் டொலர்கள் பெறுமதியான மூலதனம் சீனாவில் இருந்து வெளியேறியது. நான்கு ரில்லியன் டொலர்களாக இருந்த சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இப்போது 3.6 ஆகக் குறைந்து விட்டது. நாட்டை விட்டு மூலதனங்கள் வெளியேறுவதால் ஏற்பட்ட நிதிப் பற்றாக் குறையைத் தவிர்க்க சீன மைய வங்கி தனது வட்டி விழுக்காட்டை 2014 நவம்பரில் இருந்து எட்டு மாதங்களில் ஐந்து தடவைகள் குறைத்துள்ளது.
சீனாவின் சொத்துக் கரைகின்றது
சீனாவின் பெரும் சொத்தாக இருக்கும் அதன் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு தொடர்பான தகவல்களும் நம்பகத் தகுந்ததாக இல்லை. அத்துடன் அதில் பெரும் பகுதி திரவத்தன்மை குறைந்த நீண்டகால முதலீடுகளில் முதலிடப்பட்டுளது. இதனால் சீனப் பொருளாதாரக் கப்பலில் ஓட்டை விழும் போது உடனடியாக அதை அடைக்கக் கூடிய நிலையில் சீனா இல்லை. 3.6 ரில்லியன் டொலர்களில் 667 பில்லியன்கள் மட்டுமே தேவை ஏற்படும் போது பாவிக்கக் கூடிய நிலையில் இருக்கின்றது. ஏற்றுமதியை ஒட்டி வளர்ந்து கொண்டிருந்த சீனப் பொருளாதாரம் 2008-ம் ஆண்டின் பின்னர் ஏற்றுமதி பெருமளவு வீழ்ச்சியைக் கண்டது. இதனால் ஏற்பட்ட உள்ளூர் உற்பத்தி வீழ்ச்சியை நிரப்ப சீன அரசு பெருமளவு முதலீடுகளைச் செய்தது. பிக்கிங் பல்கலைக்கழகத்தின் அரசியற்பொருளாதாரப் பேராசிரியர் கிறிஸ்டபர் பொல்டிங்கின் கருத்துப்படி சீனாவின் முதலீட்டுக் கூட்டுறவு வங்கி தனது மூலதனத்தை சீன மைய வங்கியிடமிருந்து அமெரிக்கக் கடன் முறிகளாகவே கடன் பெற்றது. இதனால் சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இருபது முதல் இருபத்தைந்து வீழ்ச்சியடைந்திருக்கலாம் என்கின்றார் அப்பேராசிரியர். ஆனால் உள்ளூரில் செய்யப்பட்ட பல முதலீடுகள் இலாபத் திறன் குறைந்தவனவாகவே இருந்தன. சீனாவில் வெற்றுக் கட்டிடங்கள் மைல்கணக்கில் நீண்டு இருக்கின்றன. அது போலவே பயன்படுத்தப்படாத பல புதிய விமான நிலையங்கள் பெருந்தெருக்கள் பல இருக்கின்றன.
தனது பெருமளவு ஏற்றுமதியால் கிடைத்த மிகையான அமெரிக்க டொலர்களை அமெரிக்காவின் கடன் முறிகளை வாங்குவதிலும் சீனா ஆபிரிக்க நாடுகளில் விவசாயங்களை வாங்குவதிலும் பாக்கிஸ்த்தானிலும் இலங்கையிலும் துறைமுகங்களைக் கட்டுவதிலும் நியூசிலாந்தில் பாற்பண்ணைகளை வாங்குவதிலும் கனடாவில் எரிபொருள் நிறுவனங்களை வாங்குவதிலும் ஐஸ்லாந்தின் வடதுருவப் பிரதேசத்தில் பனிப்பாறைகளை ஆய்வு செய்வதிலும் செலவழித்தது. அத்துடன் புதிய அபிவிருந்தி வங்கி, ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி எனப் பன்னாட்டு வங்கிகளையும் ஆரம்பித்தது. மேலும் பட்டுப்பாதை, புதியபட்டுப்பாதை, பட்டுப்பதையை ஒட்டிய பொருளாதார வலயம் எனவும் பெரும் நிதிகளை முதலீடு செய்தது.
சீனாவால் உலத்தில் காசுத் தட்டுப்பாடு ஏற்படுமா?
சீனாவின் வெளிநாட்டுக் கையிருப்பு குறைந்து கொண்டு போவது உலக அரங்கில் ஒரு நாணயத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தைக் கூட உருவாக்கியுள்ளது. Quantitative Easing எனப்படும் நாணயங்களுக்கான அளவுசார் தளர்ச்சி இனி quantitative tightening என்னும் அளவுசார் இறுக்கம் என ஆகிவிடுமா என எண்ணத் தோன்றுகின்றது.
கடந்த ஓராண்டு காலமாகச் சீனப் பொருளாதரத்தின் நகர்வுகள் இப்படி இருந்தன:
சீனப் பங்குகள் 12 மாதத்தில் 150விழுக்காடு விலை அதிகரிப்படைந்தன. பின்னர் 30 விழுக்காடு வீழ்ச்சியைக்கண்டன. சீனா தனது நாட்டின் 97 விழுக்காடான பங்குகளின் விற்பனையைத் தடை செய்தது. சீனா 1.2 ரில்லியன் டொலர்களை பெரிய பங்குகளின் விலைகள் சரியாமல் இருக்கச் செலவிட்டது. சீனா தனது பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறைவதாக அறிவித்தது. சீன நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. சீனா தனது நாணயத்தின் பெறுமதியைத் தக்க வைக்க பெருமளவு செலவு செய்தது. இந்தக் காட்சித் தொடர் சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைக் காட்டியது. ஏற்கனவே சீனாவின் உள்ளூர் சிறு முதலீட்டாளர்கள் சீனப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து இழப்பைச் சந்தித்துள்ளனர்.
சீனாவில் இருந்து மூலதனம் பெருமளவில் வெளியேறுவதற்கான காரணங்கள்:
1. நம்பிக்கை இழந்த வெளிநாட்டு நிறுவனங்கள்
சீன அரசு அதனது நாணயத்தின் பெறுமதியையும் அதன் பொருளாதார வளர்ச்சியையும் தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் நம்பிக்கை இழந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தமது முதலீடுகளை விற்று விட்டு சீனாவில் இருந்து வெளியேறுகின்றன. தென் கொரியா உட்படப் பல ஆசிய நாடுகள் தமது பங்குச் சந்தை விலையை நிலைப்படுத்த என நிதியங்களை உருவாக்கியுள்ளன. பங்குச் சந்தை விலைச் சரிவைச் சந்திக்கும் போது அந்த நிதியங்கள் பங்குகளை வாங்கும். விலை ஏறும் போது விற்கும். இப்படி ஒரு நிதியம் சீனாவில் இல்லாதது சீனாவில் முதலீடு செய்பவர்களைத் தயங்க வைக்கின்றது.
2. சீன நாணயம் மேலும் மதிப்பிழக்கலாம் என்ற அச்சம்.
றென்மின்பி என்றும் யூவான் என்றும் அழைக்கப்படும் சீன நாணயத்திண் பெறுமதியை முன்னர் அதன் மைய வங்கி நாள் தோறும் காலை 9.15இற்கு நிர்ணயித்து வந்தது. இதை நடுப்புள்ளி என்பர் பின்னர் நாணயம் சந்தையில் நடுப்புள்ளியில் இருந்து இரண்டு விழுக்காட்டிலும் பார்க்க கூட ஏற்றவோ இறக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. இப்போது இது கைவிடப்பட்டு நாணயச் சந்தைதான் நாணயத்தின் பெறுமதியை நிர்ணயம் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி சீனாவின் நடுப்புள்ளியை சீன மையவங்கி தான் விரும்பியபடி தினம் தோறும் தீர்மானிக்காமல் முதல் நாள் சந்தை மூடப்படும்போது என்ன பெறுமதியில் றென்மின்பி இருந்ததோ அதே அடுத்தநாள் நடுப்புள்ளிப் பெறுமதியாக்கப்படும். இது சீன நாணயத்தின் பெறுமதியில் அதன் மையவங்கியின் தலையீட்டைக் குறைக்கின்றது. இந்த முடிவால் சீன நாணயத்தின் பெறுமதி குறையலாம் என்ற அச்சம் பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. இதனால் அவர்கள் சீனாவில் தாம் செய்த முதலீடுகளை சீன நாணயத்தின் பெறுமதி மேலும் வீச்சியடையும் முன்னர் அதை விற்றுக் கொண்டு அமெரிக்க டொலர்களாக மாற்ற முயல்கின்றனர்.
3 ஏறு முகமாக நிற்கும் அமெரிக்க டொலர்
அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. அங்கு வேலையற்றோர் தொகை வீழ்ச்சியடையும் அதேவேளை ஊதியம் உயர்வடையாமல் இருக்கின்றது. இது போன்ற காரணிகளால் அமெரிக்க டொலரின் மதிப்பு இனி ஏற்றத்தையே அடைந்து கொண்டிருக்கும் எனப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள் அதனால் அவர்கள் சீனாவில் முதலிடுவதிலும் பார்க்க அமெரிக்காவில் முதலீடு செய்ய விரும்புகின்றார்கள்.
4. வளர்ச்சி வேகம் குறையும் சீனப் பொருளாதாரம்.
சீன 2015-ம் ஆண்டிற்கான தனது பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 7.5விழுக்காட்டில் இருந்து 7.4 விழுக்காடாகக் குறைத்துள்ளது. 2015 ஓகஸ்ட் மாதத்திற்கான சீனாவின் முதலீட்டு அதிகரிப்பும்(10.9%) தொழிற்சாலைகளின் உற்பத்தியும்(6.4%) ஏதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே அமைந்திருந்தன. சீனாவின் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி (Purchasing Managers’ Index) ஜுலை மாதம் 50ஆக இருந்து ஓகஸ்ட் மாதம் 49.7 ஏழாகக் குறைந்துள்ளது. இந்தப் புள்ளிவிபரங்கள் வெளிவந்த பின்னர் 2015 செப்டம்பர் மாதம் 14-ம் திகதி சீனப் பங்குச் சந்தையும் வீழ்ச்சியைக் கண்டது. சீன உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை பெரிய அளவில் குறைக்கின்றார்கள். இதனால் சீனாவில் இலாபத் திறன் குறைகின்றது. பொருளாதாரத்தில் இலாபத் திறன் குறையும் போது முதலீடுகளுக்கான கவர்ச்சி குறைகின்றது. பொருளாதாரப் புள்ளி விபரங்கள் மோசமாக இருப்பதால் சீன அரசு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஊட்ட எடுத்த முயற்ச்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. ஏற்கனவே சீனாவின் புள்ளி விபரங்கள் மிகைப்படுத்தப் பட்டவை என்ற கருத்துப் பரவலாக நிலவுகின்றது.
5. சீனாவில் இருந்து வெளியேறும் செல்வந்தர்கள்
சீனச் செல்வந்தர்கள் தமது நாட்டில் இருந்து பெருமளவில் வெளியேறுவது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 14 ஆண்டுகளில் 91000 செல்வந்தர்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில் ஒருவரின் சொத்து ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் டொலர்களாகும். இவர்கள் தமது சீன முதலீட்டை வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். சீன ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி விலைகளை கூட்டிக் காட்டி அதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இந்த நாட்டை விட்டு வெளியேறும் செல்வந்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர். சீனச் செல்வந்தர்கள் தமது நாட்டில் இருந்து பெருமளவில் வெளியேறுவது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 14 ஆண்டுகளில் 91000 செல்வந்தர்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில் ஒருவரின் சொத்து ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் டொலர்களாகும். இவர்கள் தமது சீன முதலீட்டை வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். சீன ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி விலைகளை கூட்டிக் காட்டி அதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இந்த நாட்டை விட்டு வெளியேறும் செல்வந்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர். சீனாவில் இருந்து ஒருவரி ஐம்பதியானையிரம் டொலர்களை மட்டுமே வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 200-ம் ஆண்டிற்கும் 2014-ம் ஆண்டிற்கும் இடையில் சீனாவில் இருந்து 3.7 ரில்லியன் டொலர்கள் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டின் உலகப் பொருளாதார வீழ்ச்சி சீனாவைப் பெருமளவு பாதித்த 2011-ம் ஆண்டு மட்டும் 600பில்லியன் டொலர்கள் சீனாவில் இருந்து கடத்தப்பட்டுள்ளன.
ஏற்றுமதியிலும் உள்ளூர் முதலீட்டிலும் தனது பொருளாதாரத்தை வளர்த்து வந்த சீனா இப்போது உள்நாட்டுக் கொள்வனவை அதிகரித்து அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முயல்கின்றது. தனிநபர் வருமானம் குறைவாக உள்ளதும் இப்போதும் ஒரு வளர்முக நாடாகவும் இருக்கும் சீனாவில் இது மிகவும் சிரமமான காரியம். ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறையப் போகின்றது என்ற எண்ணத்தில் அங்கிருந்து மூலதனம் வெளியேறும் போது நாணயத்தின் பெறுமதி மேலும் மோசமகக் குறைவடையும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment