உலகெங்கும் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து தமது
வெளிநாட்டுச் செலவாணியை நான்கு ரில்லியன்களாக உயர்த்திய சீனா தனது
தேவையைப் பூர்த்தி செய்ய முக்கியமான ஒன்றை இறக்குமதி செய்ய வேண்டிய
கட்டத்தில் இருக்கின்றது. சீனாவில் ஏற்பட்டுள்ள பெண்களுக்கான தட்டுபாட்டைப்
போக்க சீன இளைஞர்கள் தமக்கான மணமகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய
வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றர்.
ஒரு சீன இளைஞன் உள்
நாட்டில் ஒரு மணமகளைத் திருமணம் செய்ய அறுபத்து நான்காயிரம் அமெரிக்க
டொலர்கள் பெறுமதியான பணத்தைச் செலவிட வேண்டி இருக்கின்றது. இதே வேளை
வியட்நாமில் இருந்து ஒரு மணமகளை இறக்குமதி செய்வதற்கு திருமணத் தரகருக்கு
இருபதினாயிரம் அமெரிக்க டொலர்களிலும் குறைவான பணத்தைச் கொடுத்தால் போதும்.
அத்துடன் மணமகள் தனக்குப் பிடிக்கவில்லை என்று மணமகனை விட்டு ஓடினால்
மணமகன் கொடுத்த பணம் மீளளிப்புச் செய்யப்படும் என்ற உத்தரவாதமும் அதாவது
money-back guaranteeயும் உண்டு. பல தரகர்கள் பணம் வாங்கி மோசடி செய்த
படியால் இந்த கொடுத்த பணம் மீளளிப்புச் செய்யப்படும் என்ற உத்தரவாதம்
இப்போது வழங்கப்படுகின்றது .
1970களிற்குப் பின்னர் பல சீனர்கள்
தமக்கு ஆண்பிள்ளை ஒன்று மட்டும் போதும் என்ற நிலையில் இருந்தனர். இதனால் பல
சீன நகரங்களில் 150 ஆண்களுக்கு நூறு பெண்கள் என்ற நிலை இப்போது
உருவாகியுள்ளது. 2020-ம் ஆண்டு பெண்களுக்கான பற்றாக் குறை தேசிய அளவில் 20
விழுக்காடு குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஆண்களை
ஆண்கள் திருமணம் செய்யும் தொகை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சீன மணமகளைப் பிடிக்க இருபதினாயிரம்
டொலர்கள் தேவைப்பட்டது. இப்போது அது மூன்று மடங்கிற்கு மேலாகிவிட்டது. 2020
ஆண்டு எப்படி இருக்கும் என்ற அச்சமும் சீன ஆண்களைத் ஆட்டிப்படைக்கின்றது.
மணமகள்
தட்டுப்பாடினால் பல சீனக் கிராமங்கள் பிரமச்சாரிகளின் கிராமங்களாக மாறி
ஒழுக்கக் கேடுகள் அதிகரிக்கின்றன. இப்படி ஆயிரக்கணக்கான பிரம்மச்சாரிக்
கிராமங்கள் சீனாவில் இருக்கின்றன. 2006-ம் ஆண்டு எடுக்கப்பட்ட
கணக்கெடுப்பின்படி 28 வயதிற்கும் 49 வயதிற்கும் இடைப்பட்ட
பிரம்மச்சாரிகளில் 97 விழுக்காட்டினர் உயர் பள்ளிப்படிப்புப்
படிக்காதவர்கள் என அறியப்பட்டது. நல்ல கல்வி கற்று நல்ல தொழிலில்
இல்லாதவர்களுக்கு மணமகள் தேடுவது இயலாத காரியம் என்பதை இது
சுட்டிக்காட்டுகின்றது.
சீனாவின் இந்தப் பிரச்சனைக்கு மூலகாரணம்
பெண் சிசுக் கொலைகளே. முதலில் பிறந்த பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
பின்னர் கருவிலேயே பெண் பிள்ளை என்பத அறியும் வசதி வந்த பின்னர் அவர்கள்
கொல்லப்பட்டனர்.
Saturday, 10 January 2015
Monday, 5 January 2015
2015இலும் கலங்கப் போகும் உலகம்
மோசமான பொருளாதாரம், சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர், காசா இரத்தக் களரி, அடங்க மறுக்கும் பலஸ்த்தீனம், ஆதிக்க வெறி கொண்ட இஸ்ரேல், உக்ரேனில் வல்லரசுகளின் முறுகல் நிலை, தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் மோதல் நிலை, தொடரும் படைக்கலன்கள் பெருக்கும் போட்டி ஆகியவற்றுடன் 2014-ம் ஆண்டு முடிவடைந்தது. இவை மட்டுமல்ல இன்னும் பல பிரச்சனைகள் 2014-ம் ஆண்டில் இருந்து 2015 ஆண்டிற்கு முதிசமாகக் கிடைத்துள்ளன. ஆனாலும் ஓர் ஒளிக் கீற்றாக குறைவடைந்த எரிபொருள் விலை தோன்றியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல உலகெங்கும் புவிசார் அரசியலிலும் 2015-ம் ஆண்டில் பெரும் மாற்றத்தை எரிபொருள் விலையே ஏற்படுத்தப் போகின்றது. 2015-ம் ஆண்டு பல நாடுகள் குடிவரவிற்கு எதிரான கடுமையான நிலைப்பாடுகளைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்கும்.
2015இல் இலங்கை - கடன் பட்டார் நெஞ்சம் போல்.....
2015-ம் ஆண்டின் ஆரம்பத்தில் உலகச் செய்திகளில் அதிகம் அடிபடும் நாடாக இலங்கையே இருக்கும். 2016-ம் ஆண்டு இறுதியில் நடக்க வேண்டிய குடியரசுத் தலைவர் தேர்தல் அட்டமத்துச் சனிக்கு அஞ்சி 2015 ஜனவரி - 8-ம் திகதி நடக்கின்றது. வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலை பொருளாதாரத்தில் செயற்பட இன்னும் ஓர் ஆண்டாவது எடுக்கும். அப்போது பொருட்கள் விலைகள் குறைந்து மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய மாற்றங்கள் ஏற்படும். இப்போது வாக்காளர்கள் இருக்கும் நிலையிலும் பார்க்க 2016 இறுதியில் அவர்களில் நிலை நன்றாக இருக்கும் வாய்ப்புக்கள் அதிகம். அட்டமத்துச் சனியால் தெண்டங்கள் மிக உண்டாகும், திரவியம் நாசமாகும், கொண்டதோர் குடும்பம் வேறாகும், பண்டுள தேசம் விட்டுப் பரதேசம் போவான் ஏன் எனச் சொல்வர் சோதிடர். இலங்கையில் பெரும் குழப்பங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இலங்கையில் படைத்துறை, நிர்வாகத் துறை, நீதித் துறை ஆகியவை பெரும் சவால்களை எதிர் நோக்குகின்றன. இவை எப்படிச் செயற்படப் போகின்றன என்பதில் லங்கா மாதாவின் எதிர்காலம் தங்கியுள்ளது. கடன்பட்டார் நெஞ்சம் போல்!!!!!!
2015இல் இந்தியா - என்ன தவம் செய்தனை மோடி பாபா
இந்திய வாக்காளர்களுக்கும் தலைமை அமைச்சருக்கும் இடையிலான தேன் நிலவு 2014-ம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டது. நரேந்திர மோடிக்கு எரிபொருள் விலை வீழ்ச்சி பெரும் வரப்பிரசாதமாகும். எரிபொருள் விலை ஓர் அமெரிக்க டொலர் குறைந்தால் அது இந்தியாவிற்கு ஆண்டு ஒன்றிற்கு ஒரு பில்லியன் வெளிநாட்டுச் செலவாணியை மீதமாக்கும். தற்போது ஆசியாவில் உறுதி மிக்க நாணயங்களுள் இந்திய ரூபாவும் ஒன்றாகும். 2015இல் விலைவாசி வீழ்ச்சியும் உயர் நிலையில் உள்ள வட்டி விழுக்காடும் இந்தியாவிற்குத் தேவையான வெளி நாட்டு முதலீட்டைக் கொண்டுவரும். இதனால் இந்தியாவின் வெளிநாட்டுச் செல்வாணி நிலைமை மேம்படும். ஆனால் மோடியின் கால்கள் இந்துத்துவா என்னும் உரலுடன் கட்டப் பட்டுள்ளது. அதை இழுத்துக் கொண்டு இரு மரங்களாக வழி மறித்து நிற்கும் மதவாதம், பேரின வாதம் ஆகியவற்றை முறித்து வீழ்த்திக் கொண்டு கோகுலத்துக் கண்ணன் போல் மோடி தவழ்ந்து செல்ல வேண்டும். மோடியின் தவழ்தலுக்கு மேலும் இரண்டு மரங்கள் தடையாக உள்ளன. ஒன்று மாநிலங்கள் அவை என்ற ராஜ்ஜ சபா. மற்றது காங்கிரசுக் கட்சி பதவியில் அமர்த்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீ. 2015-ம் ஆண்டு ஐந்து விழுக்காடு மட்டும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இதை ஏழுக்கு மேல் உயர்த்தாவிடில் மோடியின் அரசுக்குப் பெரும் நெருக்கடிகள் உருவாகும்
2015இல் ஆசியா - கை கோர் அம்மா கை கோர்
ஆசிய நாடுகளுக்குத் தலைமை தாங்க வேண்டிய சீனா ஆசிய நாடுகளுக்கு தலையிடியாக அமைந்துவிட்டது. எல்லா அயல் நாடுகளுடனும் சீனா எல்லைப் பிரச்சனையைக் கொண்டுள்ளது. தென் சீனக் கடலையும் கிழக்குச் சீனக் கடலையும் சீனா குழப்ப அதில் அமெரிக்கா மீன் பிடிக்க முயல்கின்றது. உலகிலேயே தனித்த வல்லரசான சீனாவுடன் ஒரளவிற்கு நட்பு நடாக இருக்கும் வட கொரியா அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்க சீனா மேலும் தனிமைப்படும் என சீன ஆட்சியாளர்கள் அறிவர். சீனாவிற்கு எதிராக ஜப்பானும் ஐக்கிய அமெரிக்காவும் இந்தியா, தென் கொரியா, அவுஸ்த்திரேலியா, நியூசிலாந்து, பில்ப்பைன்ஸ் உட்படப் பல நாடுகளை இணைத்த பெரும் கூட்டணியை அமைக்க முயல்கின்றன. 2015-ம் ஆண்டு ஜப்பான் தனது அரசியல் யாப்பை மாற்றி பாதுகாப்புப் படையாக இருக்கும் தனது படைத்துறையை தாக்குதல் படையாகவும் மாற்றும் சாத்தியம் இருகின்றது. இதனால் ஜப்பான் சீனாவிற்கு இடையில் ஒரு படைவலுப் போட்டி உருவாகலாம். தனது பொருளாதாரத்தை மீள் சம நிலைப்படுத்த வேண்டிய சீனாவிற்கும் முப்பது ஆண்டுகளாக போதிய வளர்ச்சியின்றித் தவிக்கும் ஜப்பானிற்கும் இது உகந்தது அல்ல. இதைத் தவிர்க்க ஆசிய நாடுகள் எல்லாவற்றுடனும் சீனா கைகோர்த்து பொருளாதரவளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டில் பன்னாட்டு நாணய நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் சவால் விடுக்கக் கூடிய வகையில் சீனா பல நாடுகளுக்கு கடன் கொடுக்கக் கூடிய நிலை உண்டு. இதை வைத்து சீனா பல நாடுகளை தனது வலயத்தினுள் கொண்டுவரலாம். சீனவிடமிருக்கும் நான்கு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை தனது உலக ஆதிக்கத்தை விரிவு படுத்த சீனா பாவிக்கலாம். பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா, ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு உலக அளவிலான நிதி வழங்கலில் ஆதிக்கம் செலுத்த முற்படுவதற்கான வாய்ப்பும் 2015இல் உருவாகலாம். உள்நாட்டில் அரசக் கட்டமைப்பில் பின்னிப் பிணைந்திருக்கும் ஊழலை ஒழித்துக்கட்ட முடியாத நிலை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் பொதுவான நிலையாக 2015இலும் தொடரும். 2014-ம் ஆண்டு ஹொங் கொங்கில் சீனாவால் அடக்கப்பட்ட மக்களாட்சி வேண்டிச் செய்யப்பட்ட எழுச்சி முறியடிக்கப்பட்டது. ஆனால் அடக்கப்படவில்லை. 2015 ஹொங் கொங்கில் மட்டுமல்ல சீனா முழுவதும் மக்களாட்சிக்கான கோரிக்கை வலுப்பெறும். பொருளாததரத் திறனை வளர்க்க சீனா தனது அரச முதலாளித்துவத்தில் சில விட்டுக் கொடுப்புக்களை பொது முதலாளித்துவத்திற்கு விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் மேற்குல ஊடகங்களுக்கு எதிரான சீன அரசின் கடுமையான நிலைப்பாடு 2015-ம் ஆண்டு மேலும் மோசமடையலாம். சீனாமீதான பொதுவுடமைக் கட்சியின் பிடி தளர்வடைவதை இப்போது உள்ள கட்சித் தலைமையோ அல்லது ஆட்சித் தலைமையோ விரும்பவில்லை. இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு 2015-ம் ஆண்டு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வளர்ச்சியடையும். இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய ஆசியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது தொடர்பான முரண்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். இரண்டு நாடுகளினதும் கேந்திரோபாய நோக்கங்கள் இன்னும் ஒத்திசைக்கவில்லை.
ஐரோப்பிய ஒன்றியம் - சிக்கனம் சின்னாபின்னமாக்கும்
ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார ரீதியில் மேலும் பிரச்சனைகளை 2015-ம் ஆண்டும் எதிர் கொள்ள வேண்டும். விலைவாசி வீழ்ச்சி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஒரு பிரச்சனையாக அமைந்துள்ளது. எரிபொருள் விலை வீழ்ச்சி மேலும் விலைவாசி வீழ்ச்சியைத் தூண்டும். பிரித்தானியா, போலாந்து, டென்மார்க், பின்லாந்து, போர்த்துக்கல், எஸ்தோனியா ஆகிய நாடுகளில் 2015-ம் ஆண்டு தேர்தல்கள் நடக்க விருக்கின்றன. சுவீடனில் பொதுவுடமைவாதம் எழுச்சியுறுமா என்ற கேள்வியும் உண்டு. கிரேக்கத்தில் தொடரும் பொருளாதாரப் பிரச்சனையும் இங்கிலாந்தில் எழுச்சியுறும் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியும் ஐரோப்பிய ஒன்றியம் பிளவு படுமா என்ற ஐயத்தை எழுப்புகின்றன. தற்போது ஆட்சியில் இருக்கும் பழமைவாதக் கட்சி தான் 2015-ல் நடக்கவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடருவதா இல்லையா என்பதைப் பற்றித் தீர்மானிக்க ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்படும் என அறிவித்துள்ளார். தொழிற்கட்சி தாம் வெற்றி பெற்றால் அப்படி ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடக்க மாட்டாது எனச் சொல்கின்றது. 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் 18 நாடுகள் தமக்கென ஒரு பொது நாணயமாக யூரோவை உருவாக்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த யூரோ வலய நாடுகளே அதிகப் பொருளாதார நெருக்கடிக்குள் இருந்தன. இந்த யூரோ நாணயக் கூட்டமைப்பில் இருந்து விலகக் கூடிய ஒரு நாடாக இத்தாலி இருக்கின்றது. ஏதாவது ஒரு நாடு யூரோக் கட்டமைப்பில் இருந்து வெளியேறினால் மற்ற நாடுகள் பல பிரச்சனையை எதிர் நோக்கும். யூரோ வலய நாடுகளின் அரசுகள் தமது செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என பெரிய அண்ணன் ஜேர்மனி மிரட்டுகிறார். இந்தச் சிக்கன நடவடிக்கைகள் நிர்ப்பந்தம் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளில் மேலும் சிக்கல்களை 2015இல் உருவாக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தற்போது இரசியாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
இரசியா - புட்டீனின் பற்களுக்கு ஆபத்து
1991இல் பொருளாதார நெருக்கடியால் சோவியத் ஒன்றியம் சிதைவடைந்த பின்னர் தனித்து விடப்பட்ட இரசியா 1998மீண்டும் ஒரு நிதி நெருக்கடியைச் சந்தித்தது. பின்னர் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பாலும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த விளடிமீர் புட்டீனின் கண்டிப்பான நிர்வாகத்தாலும் இரசியா தனது பொருளாதாரத்தைச் சீர் செய்து கொண்டது. விளடிமீர் புட்டீன் மீண்டும் சோவியத் ஒன்றியம் போல் ஒரு பேரரசைக் கட்டி எழுப்ப முயன்றார். ஐரோப்பிய ஒன்றியத்தை மேற்கு ஐரோப்பிய நாடுகள் கட்டி எழுப்புவது போல் தானும் யூரோ ஏசியன் ஒன்றியம் என்னும் பெயரில் ஒரு நாடுகளின் கூட்டமைப்பைக் கட்ட முயல்கின்றார். இந்த இரு ஒன்றியங்களின் விரிவாக்கம் உக்ரேனை யார் இணைப்பது என்பதில் போட்டியை உருவாக்கியது. 2015-ம் ஆண்டு புட்டீனின் பற்களைப் புடுங்க மேற்கு நாடுகள் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கலாம். oligarchs எனப்படும் இரசியாவின் சிலராண்மைப் பெரும் செல்வந்தர்கள் புட்டீனுக்கு எதிரான நடவடிக்கைகளில் 2015-ம் ஆண்டு இறங்குவார்கள்.
போராளி அமைப்புக்கள் புனிதமடையுமா?
இந்த நூற்றாண்டில் உலக அரங்கில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை உலகெங்கும் உள்ள போராளி அமைப்புக்களே. பல நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளில் இவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. 2015-ம் ஆண்டில் அதிகமாகச் செய்திகளில் அடிபடும் அமைப்பாக தலிபான் திகழும் என எதிர்பார்க்கலாம். வெளி நாட்டுப் படைகள் மீண்டும் ஆப்கானிஸ்த்தானிற்கு வரும் ஆனால் எப்போ வரும் என்ற கேள்விக்கு இப்போது விடை கூற முடியாது. ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் இசுலாமிய அரசு என்னும் அமைப்பு பலத்த ஆளணி இழப்புக்களை 2015-ம் ஆண்டு சந்திக்கும். எகித்துடன் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால் ஹமாஸ் அமைப்பு 2015-இல் மேலும் வலுவடையும். ஹிஸ்புல்லா அமைப்பும் பல இழப்புக்களைச் சந்திக்கும். 2015-இல் தனது மக்களுக்கு நன்மை செய்யும் அமைப்பாக குர்திஷ் மக்களின் பெஷ்மேர்கா அமைப்பு திகழும். ஆனால் மேற்கு நாடுகள் குர்திஷ் மக்களின் முதுகில் மீண்டும் குத்தாமல் இருக்க அவர்கள் மிகவும் தந்திரமாகச் செயற்பட வேண்டும். நைஜீரியாவில் செயற்படும் பொக்கோகரம், சோமாலியாவில் செயற்படும் அல் ஷபாப் ஆகிய அல் கெய்தாவின் துணை அமைப்புக்களும் பல ஆளணி இழப்புக்களைச் சந்திக்கும். பொக்கோகரம் செயலிழக்கச் செய்யப்படலாம். பாக்கிஸ்த்தானில் பல தீவிரவாதிகள் கொல்லப்படுவர். லக்சத் இ தொய்பர் போன்ற இந்திய எதிர்ப்பு அமைப்புக்கள் வலுவிழக்கும். பாக்கிஸ்த்தானில் இருந்து பல போராளிகள் ஆப்கானிஸ்த்தானிற்குத் தப்பிச் செல்வர். ஆளில்லாப் போர்விமானத் தாக்குதல்கள் தொடர்ந்தும் தீவிரமடையும்.
மத்திய கிழக்கு - Sykes-Picot கிழித்த கோடு அழிக்கப்படுமா?
முதலாம் உலகப் போரின் பின்னர் இனி ஒரு இசுலாமியப் பேரரசு உருவாகக் கூடாது என்ற நோக்கத்துடன் பிரான்ஸும் ஐக்கிய இராச்சியமும் ஒன்றிணைந்து மத்திய கிழக்கில் சிரியா, ஈராக், லிபியா, லெபனான் போன்ற நாடுகளின் எல்லைகளை வகுத்துக் கொண்டன. Sykes-Picot எல்லைகள் எனப்படும் கோடுகளை ஏற்கனவே 2014-ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் இசுலாமிய அரசு என்னும் அமைப்பும் குர்திஷ் மக்களின் பெஷ்மேர்கா அமைப்பும் அழித்து விட்டன. துருக்கி வேறு ஒரு புறம் ஈராக்கின் சில பிரதேசங்கள் தன்னுடன் இணைக்கப்பட வேண்டும் என அடம்பிடிக்கின்றது. சிரிய உள்நாட்டுப் போர் முடியும் அறிகுறிகள் 2015இலும் இல்லை. பஷார் அசாத்தையும் அசைக்க முடியாது. ஈரானின் அணுக் குண்டுத் தயாரிப்பு முயற்ச்சி தொடர்ப்பாக P5+1எனப்படும் ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் ஈரானுடன் நடாத்தி வரும் பேச்சு வார்த்தை இதுவரை ஏமாற்றம் தரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. 2015இல் இந்த இழுபறி நிலைக்கு ஒரு முடிவு வந்தே ஆகவேண்டும். பேச்சு வார்த்தை சுமூகமாக முடிவடைய வேண்டும் அல்லது முறிவடைய வேண்டும். ஐக்கிய அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி தொடர்பாகச் செய்யப்படும் உடன்பாடு மத்திய கிழக்கின் சமநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இரசியாவை அடக்கி கியூபாவை அடக்கியதாக அமெரிக்கா உறுதியாக நம்பினால் அதே நடவடிக்கையை ஈரானுடனும் மேற்கொள்ள அமெரிக்கா உந்தப்படலாம். சீனாவைப் பொறுத்தவரை ஈரானுக்காக அது ஐக்கிய அமெரிக்காவைப் பகைக்காது. பாலஸ்த்தீனத்தை ஒரு முழுமையான நாடாக ஐக்கிய அமெரிக்கா அனுமதிக்கவில்லை. இதனால் மத்திய கிழக்கில் அமைதிக்கான வாய்ப்புக்கள் இல்லை. 2015-ம் ஆண்டு துனிசியா தனக்கே உரிய பாணியில் ஒரு மக்களாட்சி நாடாகும் முயற்ச்சியில் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும். சவுதி அரேபியா பெண்கள் உரிமை விவகாரத்தில் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டி வரும். பாஹ்ரேனில் ஏற்கனவே அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம் பிரிவு தளம் அமைத்து வளைகுடா, மத்திய தரைக்கடல் போன்றவற்ற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றது. அங்கு ஐக்கிய இராச்சியமும் தளம் அமைத்துள்ளது அரபு வசந்தம் அடக்கப்பட்ட பஹ்ரேனில் சிறுபான்மையினரான சிய முசுலிம்கள் மக்களாட்சி தேவை என வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களது போராட்டம் அங்கு தீவிரமடையலாம். ஐக்கிய இராச்சியப் படைகளும் பஹ்ரேலின் தளம் அமைத்தமை ஈரான் மீதான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்கா - தேறுதலும் தேர்தலும்
2015-ம் ஆண்டு பொருளாதார ரீதியில் பெரும் வளர்ச்சியை ஐக்கிய அமெரிக்கா எட்டும். அதுவே மற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும். அமெரிக்காவின் கிழக்கு நோக்கிய நகர்வு 2014இல் மத்திய கிழக்கிலும் உக்ரேனிலும் தடைபட்டது. உக்ரேனை முழுமையாக அமெரிக்காவால் பாதுகாக்க முடியாது. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தெரிவு செய்வதில் 2015-ம் ஆண்டு அமெரிக்கா அல்லோல்கல்லோலப்படும். பராக் ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சியினர் ஹிலரி கிளிண்டனைத் தெரிவு செய்யும் வாய்ப்புக்களே மிக அதிகம்.
படைத்துறை - போட்டிகளும் இழப்புக்களும்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அடங்கிப் போயிருந்த படைவலு பெருக்கும் போட்டி 2015-ம் ஆண்டு மீண்டும் தீவிரமடையும். மேற்கில் இரசியாவும் கிழக்கில் ஜப்பானும் இதில் அதிக அக்கறைகாட்டும். இணையவெளியில் பல தாக்குதல்கள் நடை பெறும். ஆங்காங்கு நடக்கும் சிறு மோதல்களால் பல படையினர் 2015இல் இறப்பார்கள். மேலும் நவீனமயப்படுத்தப்பட்ட படைக்கலன்கள் உருவாக்கப்படும். அவற்றைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு போர் முனைகள் உருவாக்கப்படும். ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறும் படையினர் மத்திய கிழக்கு நோக்கி நகரலாம். நேட்டோப் படையினர் தொடர்ந்து களமுனை அனுபவம் பெற்றுக் கொண்டிருக்க எங்காவது போர் புரிந்து கொண்டே இருக்க வேண்டும்.
2015-இல் சிறு பொருளாதார மேம்பாடு தவிர வேறு எந்த நல்ல மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

Tuesday, 30 December 2014
இனக்கொலையாளிகளுக்கு வாக்களிக்கச் சொல்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மைத்திரிபால சிரிசேனவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அவர்களின் எஜமானர்களால் செய்யப்பட்டது. அதை வாலாட்டிக் கொண்டு த.தே. கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டு விட்டது.
எஸ் டபிளியூ ஆர் பண்டாரநாயக்க
1956 பட்டிப்பளைப்(கல்லோயா) படுகொலை இக்கினியாகலை என்ற இடத்தில் கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான கரும்புத் தொழிலகத்தில் வேலைசெய்துவந்த நூற்று ஐம்பது (150)
தமிழ் தொழிலாளர்கள் சிங்களவர்களால் கூறிய ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும் கொள்ளப் பட்டனர். அரைகுறை உயிருடன் இருந்தவர்களும் இறந்தவர்களும் எரியும் தீயில் தூக்கி வீசப் பட்டார்கள். இப்படுகொலையே இங்கினியாகலைப் படுகொலை எனகுறிப்பிடப்படுகிறது.இதுவே இலங்கை வரலாற்றில் முதன்முதலாக தமிழர்கள் பெருந்தொகையாகக் கொல்லப்பட்ட சம்பவமாகும்.
ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது செய்த படுகொலைகள்:
1983 வெலிகடைச் சிறைச்சாலைப் படுகொலை
1984 ஒதியமலைப் படுகொலை
1984 ஒதியமலைப் படுகொலை
1985 வல்வை நூலகப் படுகொலை
1985 வட்டக்கண்டல் படுகொலை
1985 வட்டக்கண்டல் படுகொலை
1985 குமுதினிப் படு
1985 மண்டைதீவில் குருநகர் மீனவர் படுகொலை
1986 அம்பாறை உடும்பன் குளம் படுகொலை
1986 தண்டுவான் படுகொலை
1986 தண்டுவான் படுகொலை
1987 கொக்கட்டிச் சோலை படுகொலை
1990 வீரமுனைப் படுகொலை
1990 சத்துருக் கொண்டான் படுகொலை
1993 கிளாலிப் பயணிகள் படுகொலை
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆட்சியில் இருக்கும் போது செய்த படுகொலைகள்:
1995 நாகர்கோவில் சிறுவர் படுகொலை
1995 நவாலி தேவாலயப்படுகொலை
1997 களுத்துறை சிறைச்சாலைப் படுகொலை
2000 பிந்துணுவேவா படுகொலை
இனக்கொலைப் போரை வழிநடத்தியவர் சரத் பொன்சேக்கா.
மைத்திரிபால சிரிசேன இறுதிப் போரின்போது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். போரின் கடைசி மூன்று நாட்களில் பாதூகாப்பு அமைச்சர் பொறுப்பிலும் இருந்த மஹிந்த ராஜபக்ச ஜோர்தான் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதனால் போரை முடித்து வைத்தவன் நான் எனப் பெருமை அடித்துக் கொள்கின்றார் மைத்திரிபால சிரிசேன. அதனால் சரணடையைச் சென்றவர்களைக் கொன்ற பொறுப்பு மைத்திரிபால சிரிசேனாவினுடையது. இலங்கைப் படையினர் அப்பாவிகளைக் கொல்லவில்லை பயங்கரவாதிகளைத்தான் கொன்றது என மஹிந்த சொல்வதை மைத்திரி மறுப்பாரா?
இந்த நான்கு கொலையாளிகளின் கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்கின்றது.
மைத்திரிபால சிரிசேனவிற்குவாக்களிக்கும்படி அறிக்கை விட்ட கூட்டமைப்பு கொடுக்கும் காரணங்கள் எதுவும் தமிழ் மக்கள் நலன் சார்ந்தவையாக இல்லை. அது இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நிலையில் இருந்து மாறி சிங்கள தேசக் கூட்டமைப்பாக மாறிவிட்டது.
த. தே. கூட்டமைப்பு மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவு கொடுப்பதற்கு காட்டும் காரணங்கள்:
1. நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதாம்.
ஐயாக்களே கொழும்பில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தமிழ் மக்கள் மீது சர்வாதிகார ஆட்சியைத் தான் நடாத்துவர்கள். 1970இல் இருந்து நீங்கள் அதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
2. நிறைவேற்று அதிகாரமுள்ள குடியரசுத் தலைவரின் கீழ் நீதித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் நீதித்துறை என்றும் தமிழர்களுக்கு எதிராகத் தான் இருக்கும். கொதிதாரில் குழந்தையையும் வேதியனையும் போட்டுக் கொன்றவர்களை இலங்கையின் நீதித் துறை தண்டிக்கவில்லை. அப்போது நிறைவேற்று அதிகாரமுள்ளவர்கள் இருக்கவில்லை. நிறைவேற்று அதிகாரமுள்ள ஆட்சி முறைமையை மைத்திரிபால நீக்குவது நிச்சயமா? அகற்றியபின் இனக்கொலையாளிகளைத் தண்டிப்பார்களா? சிறைக்குள் வைத்து கொல்லப்பட்ட தமிழர்களை உங்களால் நீதி மன்றம் கொ்ண்டு செல்ல முடியுமா?
3. ராஜபக்ச அரசால் நமது பாராளுமன்றம் மதிப்பிழந்துள்ளது.
எப்போது இருந்து ஐயா இலங்கைப் பாராளமன்றம் உங்களுடையதானது? தமிழர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு சட்டத்தையும் தன் வரலாற்றில் நிறைவேற்றாத இலங்கைப் பாராளமன்றம் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன? அது நிறைவேற்றிய 13வது திருத்தத்திற்கு என்ன நடக்கிறது?
4. 17வது திருத்தத்தின் பின்னர் அரச நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு சுயாதீன நியமனங்கள் நேர்மையாக இல்லை.
17வது திருத்தத்தின் முன்னர் உள்ள நீதித் துறைதான் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது செய்யப் பட்ட கொலைகளை நியாயப்படுத்தியது. செம்மணிக் கொலையாளிகளைத் தண்டிக்காமல் விட்டது. பல்வேறு இனக்கலவரங்கள் செய்த எவரையும் தண்டிக்காமல் விட்டது.
5. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் எதேச்சதிகாரமானது
முன்பு தலைமை அமைச்சர் நாட்டை ஆண்டபோது எல்லாம் நல்லபடியாக நடந்ததா? பாருங்களய்யா இந்தப் பட்டியலை:
உங்கள் அறிக்கை இப்படி முடிகிறது:-
கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையச் செயற்படுகின்றது எனச் சொல்கின்றார்கள். இந்தியா தமிழர்களுக்கு என்ன செய்தது?
தமிழர்களுக்கு படைக்கலன்களைக் கொடுத்து சிங்களவர்களுடன் மோதவிட்டுத் தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டது. தமிழர்களைப் படைகலன்களை ஒப்படையுங்கள் உங்கள் பாதுகாப்புக்கு நாம் உத்தரவாதம் எனச் சொல்லிவிட்டுப் பின்னர் சிங்களவர்களுக்குப் படைக்கலன்களும் பயிற்ச்சிகளும், உளவுத் தகவல்களும் கொடுத்து இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொல்ல வழிவகுத்தது.
இந்திய வல்லாதிக்கம் ஈழமண்ணில் மன்னிக்கவும் மறக்கவும் முடியாத குற்றங்களையும் தமிழினப் படுகொலையினையும் செய்துள்ளது. இதில் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய முக்கியமான இரண்டு படுகொலைகளை கூறலாம்.
1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21, 22, ஆகிய திகதிகளில் இந்திய இராணுவத்தால் யாழ் போதனா வைத்திய சாலையில் படுகொலை
1987 ஒக்டோபர் 24-ம் நாள் இந்திய இராணுவத்தின் அட்டூழியத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொக்குவில் இந்துக்கல்லூரியில் தஞ்சமடைந்தனர். அத்துடன் தங்களை இடம்பெயர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தும் நோக்குடன் பாடசாலையின் முக்கிய இடங்களில் வெள்ளைக்கொடியைப் பறக்கவிட்டிருந்தனர். யாழ் நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக்கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலைக் கட்டடங்களின் மீது பீரங்கித்தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த இருபத்தாறு பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். படுகாயமடைந்தவர்களில் பதின்நான்கு பேர் மருத்துவ வசதிகளற்று மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும், மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இச் சம்பவத்தில் யாழ் பல்கலைக்கழக கல்வியற்துறைப் பீடாதிபதி பேராசிரியர் சந்திரசேகரம உட்பட மொத்தம் நாற்பது பேர் உயிரிழந்ததுடன், எண்பது பேர் படுகாயமடைந்தனர்.

டி. எஸ் சேனநாயக்க
கிழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல் ஓயாத் திட்டத்தை
ஆரம்பித்தார். இது ஈழத் தமிழர் வரலாற்றில் முதலாவது பெரிய நில
அபகரிப்பாகும்.
ஜோன் கொத்தலாவல சிங்களத்திற்கும் தமிழிற்கும் சம அந்தஸ்த்து வழங்கப்படும் என்று கொக்குவிலில் பிரகடனப்படுத்தினார். பின்னர் அதை நிறைவேற்றவில்லை.
நேரு கொத்லாவல ஒப்பத்தந்தின் மூலம் மலையகத்தில் இருந்து தமிழர்கள்
வெளியேற்றப்பட்டனர். இலங்கையில் குடியுரிமை பெறத் தகமையற்ற தமிழர்களுக்கு
இந்தியா குடியுரிமை வழங்க மறுத்தது
India agreed to the repatriation of any Indian Tamil who wanted
Indian citizenship. But India refused to automatically provide Indian
citizenship to those who did not qualify for Ceylon citizenship
1956-இல் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன் என்ற பரப்புரையால் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வாக்கு வேட்டையாடி ஆட்சிக்கு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா தமிழர்களின் தீவிர எதிர்ப்பினால் தந்தை செல்வாவுடன் பண்டா-செல்வா ஒப்பந்தம் செய்து கொண்டார். பின்னர் பிக்குகளினதும் ஜே ஆர் ஜயவர்தனவினதும் கடும் எதிர்ப்பால் அதைக் கைவிட்டார்
சிறிமாவும் தந்தை செல்வாவும் இணைந்து ஆட்சி அமைக்க ஆளுனர் அனுமதி அளிக்கவில்லை.
பண்டா-செல்வா ஒப்பந்த அடிப்படையில் சிறிமாவும் தந்தை
செல்வாவுக் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். 1960 ஜூலைதேர்தலில்
சிறிமாவின் சுதந்திரக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி
பெற்றதால். தந்தை செல்வாவிற்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை சிறிமா
காற்றில் பறக்க விட்டார்.
1961இல் தமிழ் மக்கள் சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிராக பெரும்
கிளர்ச்சி செய்தனர். வடக்குக் கிழக்கில் அரசு செயற்பட முடியாத நிலை
ஏற்பட்டது. தபால் சேவை இல்லாமையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழர்கள்
தமது தபால் சேவையை ஆரம்பித்தனர். தமக்கெனத் தபால் முத்திரைகளை அடித்தனர்.
அடுத்த கட்டம் தமிழர்களுக்கு என நாணயம் அச்சிட திட்டமிடப்பட்டது.
1965-இல் நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியும் அறுதிப்
பெரும்பான்மையுடன் வெற்றி பெறவில்லை. தமிழரசுக் கட்சி ஆதரிப்பவர் மட்டுமே
ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை. டட்லி செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டது.
வடக்குக் கிழக்கில் மாவட்ட சபை அமைப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டது.
சிங்களவர்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. அரசில் இருந்து தமிழரசுக்
கட்சி வெளியேறியது.
1970இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சிறிமா
புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றினார். தமிழர்களின் கோரிக்கைகள் எதுவும்
அதில் உள்ளடக்கபடவில்லை. தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அது
நிறைவேற்றப்பட்டது. பல்கலைக்கழக அனுமதியில் தமிழர்களின் எண்ணிக்கையைக்
குறைக்க தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழாராய்ச்சி மாநாடு
குழப்பப்பட்டு பார்வையாளராக வந்த பதினொரு பேர் கொல்லப்பட்டானர். தமிழ்
இளைஞர்கள் தீவிரவாதிகளாக்கப்பட்டனர்.
1977இல் ஆட்சிக்கு 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஜே ஆர்
பெரும் இனக்கலவரத்துடன் தனது ஆட்சியை ஆரம்பித்தார். போர் என்றால் போர்.
சமாதானம் என்றால் சமாதானம் என்னும் கூச்சலுடன் பெரும் இனக்கொலை நடந்தது.
உங்கள் அறிக்கை இப்படி முடிகிறது:-
- எனவே சர்வாதிகாரத்திலிருந்து நமது நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவும், நமது உன்னத விழுமியங்களான சமத்துவம், நீதி, தன்மானம், சுதந்திரம் என்பவற்றை மீளப் பெறுவதற்காகவும் நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ அரசை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும்.
கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையச் செயற்படுகின்றது எனச் சொல்கின்றார்கள். இந்தியா தமிழர்களுக்கு என்ன செய்தது?
தமிழர்களுக்கு படைக்கலன்களைக் கொடுத்து சிங்களவர்களுடன் மோதவிட்டுத் தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டது. தமிழர்களைப் படைகலன்களை ஒப்படையுங்கள் உங்கள் பாதுகாப்புக்கு நாம் உத்தரவாதம் எனச் சொல்லிவிட்டுப் பின்னர் சிங்களவர்களுக்குப் படைக்கலன்களும் பயிற்ச்சிகளும், உளவுத் தகவல்களும் கொடுத்து இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொல்ல வழிவகுத்தது.
இந்திய வல்லாதிக்கம் ஈழமண்ணில் மன்னிக்கவும் மறக்கவும் முடியாத குற்றங்களையும் தமிழினப் படுகொலையினையும் செய்துள்ளது. இதில் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய முக்கியமான இரண்டு படுகொலைகளை கூறலாம்.
1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21, 22, ஆகிய திகதிகளில் இந்திய இராணுவத்தால் யாழ் போதனா வைத்திய சாலையில் படுகொலை
1987 ஒக்டோபர் 24-ம் நாள் இந்திய இராணுவத்தின் அட்டூழியத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொக்குவில் இந்துக்கல்லூரியில் தஞ்சமடைந்தனர். அத்துடன் தங்களை இடம்பெயர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தும் நோக்குடன் பாடசாலையின் முக்கிய இடங்களில் வெள்ளைக்கொடியைப் பறக்கவிட்டிருந்தனர். யாழ் நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக்கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலைக் கட்டடங்களின் மீது பீரங்கித்தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த இருபத்தாறு பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். படுகாயமடைந்தவர்களில் பதின்நான்கு பேர் மருத்துவ வசதிகளற்று மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும், மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இச் சம்பவத்தில் யாழ் பல்கலைக்கழக கல்வியற்துறைப் பீடாதிபதி பேராசிரியர் சந்திரசேகரம உட்பட மொத்தம் நாற்பது பேர் உயிரிழந்ததுடன், எண்பது பேர் படுகாயமடைந்தனர்.
Sunday, 28 December 2014
இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக அமையும் ஈரானின் தற்கொலை விமானங்கள்
ஈரான் தான் உருவாக்கிய ஆளில்லா தற்கொலை விமானங்களை வெற்றீகரமாகப் பரிசோதித்துள்ளது. அண்மைக் காலங்களாக ஈரான் தனது ஆளில்லாப் போர் விமானத் தொழில் நுட்பத்தை பெரும் வளர்த்து வருகின்றது. ஈரான் உருவாக்கியுள்ள ஆளில்லாத் தற்கொலை விமானங்கள் நடமாடும் குண்டுகள் ("mobile bombs") என படைத்துறை நிபுணர்கள் விபரித்துள்ளனர். இவற்றால் தரை, வான் மற்றும் கடலில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த முடியும்.
2011-ம் ஆண்டு ஈரானில் உளவு பார்க்கப் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா வேவு விமானமான RQ-170 ஈரானில் விழுந்ததைத் தொடர்ந்து ஈரானின் ஆளில்லாப் போர் விமானத் தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது. ஈரானில் விழுந்த ஆளில்லாப் போர் விமானம் தொடர்பான் முந்தைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்.
ஈரான் அமெரிக்காவின் ஆளில்லா வேவு விமானமான RQ-170ஐத் தழுவி உருவாக்கிய ஆளில்லா விமானம்:
ஈரான் தான் உருவாக்கிய ஆளில்லாத் தற்கொலை விமானங்களுக்கு யசீன் எனப் பெயரிட்டுள்ளது. இது ஒரு முழுமையான உள்ளூர்த் தயாரிப்பாகும். இதில் வேவுபார்ப்பதற்கு புதியவகை ஒளிப்பதிவு கருவிகள் (state-of-art, light cameras) பொருத்தப்பட்டுள்ளன. இவற்றால் தொடர்ந்து எட்டு மணித்தியாலங்கள் பறக்க முடியும். இதன் பறப்புத் தூரம் 200 கிலே மீட்டர்களும் உயரம் 4,500 மீட்டர்களுமாகும்.
2014-12-25-ம் திகதியில் இருந்து ஈரான் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் பல படைத்துறை ஒத்திகைகளை "மொஹமட் ரசௌல்லா" என்னும் குறியீட்டுப் பெயருடன் நடாத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஆளில்லாத் தற்கொலைப் போர் விமானங்கள் பரிசோதிக்கப்பட்டன.
ஈரான் தான் உருவாக்கும் படைக்கலன்களை காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பினரூடாக அல்லது லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் ஊடாக இஸ்ரேலுக்கு எதிராகப் பரிசோதித்துப் பார்ப்பது வழமை. ஈரானின் ஆளில்லாப் போர் விமானம் ஒன்று சென்ற ஆண்டு இஸ்ரேலுக்கு மேலாகப் பறந்து உளவு பார்த்த போது சுட்டு வீழ்த்தப்பட்டது. ஈரான் தான் உருவாக்கிய யசீர் தற்கொலை விமானத்தையும் இஸ்ரேல் மீது பரீட்சிக்கலாம். இது இஸ்ரேலுக்கு ஆபத்தாக அமையலாம். இஸ்ரேல் ஏற்கனவே யசீரை வானில் வைத்தே அழிக்கும் முறைமை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டும் இருக்கலாம்.

Friday, 26 December 2014
சவுதியில் சிறுமிகளைத் திருமணம் செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டம் வருமா?
பத்து வயதுச் சிறுமிகளை அவர்களின் தந்தைமார்கள் பணத்துக்காக எழுபது வயது "மாப்பிள்ளைக்கு" திருமணம் செய்வது அதிகரித்து வருவதால் பெண்களின் திருமண வயதைக் கட்டுப்படுத்தும் சட்டம் நடைமுறைக்கு வரும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளது. அண்மைக்காலங்களாக இது தொடர்பாக கடும் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து பெண்களின் திருமண வயதைக் கட்டுப்படுத்தும் சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு சவுதி அரேபியாவின் ஆலோசனைச் சபையாகக் கருதப்படும் மூதவையான Shura Councilஇன் (also known as Majlis as-Shura) அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களின் திருமண வயதைப் பற்றி அறிய அங்கு உள்ள ஆட்சி முறைமை பற்றி அறிதல் அவசியம்.
சவுதி ஆட்சியாளர்
மன்னர் பரம்பரை ஆண்டுவரும் சவுதி அரேபியாவில் மன்னரே உச்ச ஆட்சியாளராகவும் தலமை அமைச்சராகவும் படைத்துறைத் தளபதியாகவும் இருக்கின்றார். மன்னர் தனது அமைச்சரவைக்கு அமைச்சர்களை நியமிப்பார். பெரும்பாலும் அவரது குடும்ப உறுப்பினர்களே அமைச்சராக நியமிக்கப்படுவர். தற்போது 22 பேர் கொண்ட அமைச்சரவை இருக்கின்றது. ஆண்களை மட்டும் கொண்ட அமைச்சரவைக்கு 2009-ம் ஆண்டு ஒரு பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
சவுதியின் பாராளம்ன்றம்
சவுதில் மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளமன்றம் என ஒன்று இல்லை. மன்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஷுரா சபை எனப்படும் ஆலோசனை சபைக்கு 150 உறுப்பினர்களை நியமிப்பார். முதலில் இச் சபைக்கு ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். 2011-ம் ஆண்டில் இருந்து பெண்களும் நியமிக்கப்படுகின்றனர். தற்போது உள்ள நடைமுறைப்படி 20 விழுக்காடு உறுப்பினர்கள் அதாவது 30 உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும். ஆலோசனை சபைக்கான உறுப்பினர்கள் தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால் அதை மன்னர் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இச்சபையின் ஆலோசனையின் பேரில் மன்னர் சட்டங்களை அங்கீக்கரிப்பார்.
சவுதி அரச முகாமையும் உள்ளூராட்சிச் சபையும்
மனித உரிமைகள், கல்வி, கலாச்சாரம், தகவற்பரிமாற்றம், ஆரோக்கியம், சமூகவிவகாரம், பொதுச் சேவைகள், பொது வழங்கல்கள், வெளிவிவகாரம், பாதுகாப்பு, நிர்வாகம், இசுலாமிய அலுவல்கள், பொருளாதாரம், தொழில்துறை, நிதி ஆகியவை தொடர்பாகக் கவனிக்க 12 குழுக்கள் இருக்கின்றன. சவுதியின் உள்ளூராட்சிச் அவைகளுக்கான உறுப்பினர்களை 21 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும் வாக்களித்து தெரிவு செய்கின்றனர்.
பெண்களின் திருமண வயது தொடர்பான சட்ட மூலம் பெண்களின் திருமணவயது 18 என் வரையறை செய்கின்றது. 18 வயதிற்குக் குறைந்த ஒரு பெண் திருமணம் செய்வதாயின் மூன்று முக்கிய நிபந்தனைகளை அச்சட்ட மூலம் விதித்துள்ளது:

- திருமணம் செய்யப்படவிருக்கும் பதினெட்டு வயதிற்குக் குறைந்த பெண்ணின் பாதுகாவலர் நீதி மன்ற அனுமதி பெற வேண்டும். அப் பெண் தொடர்பாக மகப்பேற்றியல், உடற்கூற்றியல் நிபுணர்களின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- திருமணம் செய்யப்படவிருக்கும் பதினெட்டு வயதிற்குக் குறைந்த பெண்ணின் பெற்றோர் தொடர்பான அறிக்கையை நீதிபதி பெறவேண்டும்.
- திருமணம் செய்யப்படவிருக்கும் பதினெட்டு வயதிற்குக் குறைந்த பெண்ணின் திருமணத்திற்கு நீதிமன்றில் வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அப்பெண்ணின் மன நிலை திருமணத்திற்கு தயாராகும் வரை காத்திருக்க வேண்டும்.
Monday, 22 December 2014
இரசியாவின் புட்டீனை அமெரிக்க ஒபாமாவால் பழிவாங்க முடியுமா?
சிரிய அதிபர் பஷார் அல் அசாத் வேதியியல் (இரசாயன) படைகலன்களைப் பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும். அசாத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூளுரைந்திருந்தார். ஆனால் சிரியாவிற்கு எதிராக அமெரிக்கா படை நடவடிக்கை எடுப்பதை இரசிய அதிரபர் விளடிமீர் புட்டீன் தடுத்து விட்டார். சிரியா மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக சவுதி அரேபியாவின் மீது இரசியா குண்டுகளை வீசும் என புட்டீன் இரகசியமாக எச்சரித்திருந்தார் எனச் சொல்லப்படுகின்றது. இரசியாவின் ஆசீர்வாதம் இன்றி அசாத் வேதியியல் குண்டுகளைப் பாவித்திருந்திருக்க மாட்டார் என விவாதிப்போரும் உண்டு. ஈரானின் அணுக் குண்டு உற்பத்திக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கும் புட்டீன் முட்டுக்கட்டையாக இருந்தார். இவற்றிற்கான பின் விளைவுகளை இப்போது இரசியப் பொருளாதாரம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது..
முற் கூட்டிய தாக்குதல்
இரசியா மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான தனது எரிவாயு விநியோகத்தைத் தடை செய்தால் அங்கு பெரும் நெருக்கடி தோன்ற வாய்ப்புண்டு. இரசிய எரிவாயு இன்றி மேற்கு ஐரோப்பியர் குளிரில் நடுங்க வேண்டியிருக்கும். அப்படி ஒன்றைச் செய்யும் அளவிற்கு இரசியப் பொருளாதாரம் வலுவானதாக இல்லாமல் பண்ண இரசியாவின் நாணயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதா என்ற ஐயமும் உண்டு.
இரசியாவின் இருண்ட செவ்வாய்
இரசியாவின் ரூபிள் நாணயம் மசகு எண்ணெய் விலையுடன் இணைந்து விழுந்து கொண்டிருக்கின்றது. ரூபிளின் வீழ்ச்சியால் இரசியாவில் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இரசிய மக்கள் பொருட்கள் மேலும் விலை அதிகரிக்க முன்னர் விழுந்தடித்துப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். செல்வந்தர்கள் தம்மிடமுள்ள ரூபிளை விற்று டொலர்களையும் யூரோக்களையும் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். 2014 டிசம்பர் 16-ம் திகதி செவ்வாய்க் கிழமை இரசிய மைய வங்கி தனது வட்டி விழுக்காட்டை 10.5இல் இருந்து 17 ஆக அதிகரித்தது. அடுத்த நாள் புதன் கிழமை இரசிய வங்கி தனது தொடர் நடவடிக்கைகளால் ரூபிளின் பெறுமதியைச் சற்று நிமிர்த்தியது. புதன்கிழமை ரூபிளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இரசிய மைய வங்கியுடன் இரசிய நிதி அமைச்சும் இணைந்து கொண்டது. நிதியமைச்சும் தன்னிடம் உள்ள வெளிநாட்டு நாணயக் கையிருப்புக்களை விற்று ரூபிளை வாங்கியது. இந்த ரூபிள் பாதுகாப்பு நடவடிக்கைக்கு தான் ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நாணயங்களைச் செலவிடத் தயாராக இருப்பதாக இரசிய நிதி அமைச்சு அறிவித்தது. 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு டொலருக்கு 33 ரூபிள்கள் என்றிருந்த பெறுமதி தற்போது 66 ரூபிளாக மாறியுள்ளது. இரசியாவில் உள்ள வெளிநாட்டு நிறுவங்களின் விற்பனை நிலையங்கள் டிசம்பர் 16-ம் திகதி செவ்வாய்க் கிழமை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. என்ன விலைக்கு தமது பொருட்களை விற்பது என்ற குழப்ப நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
இரசியாவின் இருண்ட 2014
2014-ம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து டிசம்பர் 16-ம் திகதி வரை இரசியாவின் நாணயமான ரூபிள் அமெரிக்காவின் டொலருக்கு எதிராக 52.8 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்குக் காரணம் மசகு எண்ணெய் விலை அதே காலப்பகுதியில் 46.1 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. இரசியப் பொருளாதாரத்தில் சிறப்பு அம்சம் அதனிடம் உள்ள வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு. ரூபிளின் பெறுமதியைப் பாதுகாக்க இரசியா தனது வெளிநாட்டுச் செலவாணியில் 20 விழுக்காட்டை இழந்துள்ளது. இரசியா வெளிநாட்டு நாணயங்களை விற்று ரூபிளை வாங்கி அதன் ரூபிளில் பெறுமதியை அதல பாதாளத்திற்கு செல்லாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது. 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக கையிருப்பு 499பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. தற்போது அது 400பில்லியன் டொலர்களாகக் குறைந்துவிட்டது. அமெரிக்க மைய வங்கியின் ஆளுநர் 2015-ம் ஆண்டு அமெரிக்காவில் வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று சொன்னது இரசியாவின் நாணயத்தைப் பொறுத்தவரை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலானது. இரசிய நிறுவனங்களின் பங்குகளின் விலைகளிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. இரசியாவின் மொத்தப் பங்குகளின் பெறுமதி (equity market's total capitalization) $345.9 bi647.4 பில்லியன் டொலரில் இருந்து 345.9 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.
திருப்பெருந்துறையில் உதை
இரசியாவில் ஒரு நகைச்சுவை ஒன்று இப்போது பிரபலமாகியுள்ளது. இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன், ரூபிள், மசகு எண்ணெய் விலை ஆகிய மூன்றிற்கும் உள்ள ஒற்றுமை என்ன? மூன்றும் 2015-ம் ஆண்டு 63ஐ அடையும். அதாவது 2015இல் புட்டீனின் வயது 63 ஆகும், டொலருக்கு எதிரான ரூபிளின் மதிப்பு 63 ஆகும், உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை 63 டொலர்களாகும். எண்ணெய் ஏற்று மதியில் அதிகம் தங்கி இருக்கும் 2015-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரம் தாக்குப் பிடிப்பதற்கு மசகு எண்ணெயின் விலை தொண்ணூற்றி ஒன்பது டொலர்களுக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் நிலைமை தற்ப்போது அந்த நகைச்சுவையிலும் மோசமாகிவிட்டது. டிசம்பர் 16-ம் திகதி மசகு எண்ணெய் விலை அறுபது டொலர்களுக்குக் கீழ் வீழ்ச்சியடைந்தது. ஒரு கட்டத்தில் டொலருக்கு எதிரான ரூபிளின் பெறுமதி எண்பதையும் தாண்டி இருந்தது. இரசியப் பொருளாதாரம் எரிபொருள் உற்பத்தித் துறையில் பெரிதும் தங்கி இருக்கின்றது. இந்த எரிபொருள் பெரும் துறையின் மீது அடித்தால் இரசியாவை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கலாம் என அமெரிக்கா நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இரசிய அரசும் அதன் பெரு நிறுவனங்களும் வாங்கிய வெளிநாட்டுக் கடன்களுக்கான மீளளிப்புச் சுமை தற்போது இரு மடங்காகிவிட்டது எனச் சொல்லலாம்.
புட்டீனின் பரிவாரங்கள் மீது உதை
இரசியாவின் அதிபர் விளடிமீர் புட்டீன், அவரது நண்பர் குழாம், அவர்களது தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை பொருளாதார ரீதியில் பாதிக்கக் கூடிய வகையில் ஐக்கிய அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் காய்களை நகர்த்தி வருகின்றன. இவர்களுக்கு பெரும் இழப்பீடு ஏற்படும் வகையில் பொருளாதாரத் தடைகளும் எரிபொருள் விலை வீழ்ச்சியும் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன. உலக நிதிச் சந்தை இரசியப் பொருளாதாரத்தின் மீதும் அதன் கொள்கை வகுப்பாளர்கள் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்யப்படுகின்றன. இரசியப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது புட்டீனின் ஆதரவுத் தளமான இரசியப் சிலராண்மை முதலாளிகள் (oligarchs) பாதிப்படைவார்கள். இரசியாவின் இன்னும் ஒரு ஏற்றுமதிப் பொருளான வொட்கா போன்ற மதுபான வகைகளின் உலக விநியோகம் ஒரு சில முதலாளிகளின் கைகளில் இருக்கின்றன. இவர்கள் திட்டமிட்டு உலகச் சந்தையில் இரசிய மதுபானங்களின் விலைகள் விழாமல் பார்த்துக் கொள்கின்றார்கள்.
இரசியப் பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும்
எரிபொருள் விலை வீழ்ச்சியை ரூபிளின் பெறுமதி வீழ்ச்சி சமாளிக்கும் என முதலில் விளடிமீர் புட்டீன் நம்பினார். தனது நாட்டு மக்களையும் நம்ப வைத்தார். ரூபிளின் பெறுமதி வீழ்ச்சி இரசியாவில் பொருட்களின் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தியது. உலகெங்கும் பல நாடுகள் தமது நாடில் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைகின்றன எனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் இரசியாவில் நிலைமை தலை கீழாக மாறியுள்ளது. இரசியாவில் பணவிக்கம் 9விழுக்காட்டிலும் அதிகமாக உள்ளது. 2014-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரம் 4.5 விழுக்காடு வீழ்ச்சியடையும் என்றும் 2015-ம் ஆண்டு 5 விழுக்காடு வீழ்ச்சியடையும் என்றும் இரசிய மைய வங்கி எதிர்வு கூறியுள்ளது.
இரசியாவின் அடுத்த நடவடிக்கை
2014-12-18 வியாழக்கிழமை விளடிமீர் புட்டீன் வழமையான ஆண்டு இறுதி உரையை நாட்டு மக்களுக்காக நிகழ்த்தினார். அதில் அவர் தன்னை ஒரு மச்சோ மான் ஆகக் காட்டிக் கொள்ளத் தவறவில்லை. அவர் தனது உரையில் உக்ரேன் விவகாரத்தில் எந்த விட்டுக் கொடுப்பும் செய்ய மாட்டார் என்ற சமிக்ஞையை வெளிவிட்டார். அவரது உரையில் எந்த வித விட்டுக்கொடுப்புக்களையும் செய்யவில்லை.
அடங்காத இரசியா
இரசியா தனது அடுத்த நடவடிக்கையாக நாட்டில் இருந்து மூலதனம் வெளியேறுவதைத் தடை செய்யலாம். ஆனால் பொருளாதார நிபுணர்கள் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள். அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற செய்தி கசியும் முன்னரே நாட்டிலிருந்து பெருமளவு மூனதனம் வெளியேறிவிடும் என்கின்றனர். இதற்கு மலேசியாவில் நடந்தவற்றை உதாரணத்திற்குக் காட்டுகின்றனர். ஆனால் இரசியர்கள் தமது நாணயம் உலகச் சந்தையில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்கின்றனர். புட்டீன் நாட்டு மக்களுக்கான தனது உரையில் வீழ்ச்சியடைந்த ரூபிள் இரசியப் பொருளாதாரத்தைப் பாதிக்கதிருக்க எல்லா உதவிகளும் வழங்கப்படும் என உறுதி உரைத்தார். கரடி அமைதியாக தன் பாட்டிற்கு தேனையும் பழங்களையும் உண்டு கொண்டிருந்தால் எதிரிகள் அதைச் சும்மா விடமாட்டார்கள் அதைச் சங்கிலியால் கட்டி அதன் பற்களையும் நகங்களையும் புடுங்குவார்கள் என்றார் புட்டீன். இரசியாவிடமிருந்து சைபீரியாவைப் பறிக்க மேற்கு நாடுகள் முயல்கின்றன என்றார் புட்டீன்
பரவலான பாதிப்பு
பொருளாதார நிபுணர்களின் கருத்துப் படி எரிபொருள் விலை வீழ்ச்சி இரசியாவின் பொருளாதாரத்தைப் பரவலாகப் பாதித்துள்ளது. பொதுவாக ஒரு குறிப்பிட்ட பொருளின் விலை வீழ்ச்சியடையும் போது அந்தப் பொருளை உற்பத்தி செய்யும் துறை மட்டுமே பாதிக்கப்படும். இரசிய ஏற்றுமதி வருவாயில் 68 விழுக்காடு எரிபொருள் மூலம் இரசியாவிற்|குக் கிடைக்கின்றது. அதன் பாதீட்டில் உள்ள வருவாயில் அரைப்பங்கு எரிபொருள் மூலம் கிடைக்கின்றது. இரசியப் பொருளாதாரம் ஏற்கனவே ஊழலாலும் திறனற்ற நிர்வாகத்தாலும் சிறப்பாகச் செயற்படாமல் இருந்தது. அத்துடன் இரசியா தனது ரூபிள் நாணயத்தை செயற்கையயக அதிக மதிப்புடன் வைத்திருந்தது. இரசியா தனது நாணயத்தின் பெறுமதியைப் பாதுகாக்க தனது அந்நிய நாட்டுச் செல்வாணிக் கையிருப்பை பாவித்தால் அதுவே இரசியாவின் நாணயத்தின் பெறுமதியைக் குறைக்கவும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு ஒரு நாணயத்தின் பெறுமதிக்கு ஆதாரமான ஒன்றாகும். இரசியாவின் கடன்படு திறனும் குறைய வாய்ப்புண்டு. இரசியாவின் வங்கிகள் ஒன்றுக்கு ஒன்று குறுங்காலக் கடன்கள் வழங்கத் தயங்குகின்றன. இதனால் வங்கிகளுக்கு இடையிலான கடனுக்கான வட்டி விழுக்காடு 25 ஆக உயர்ந்துள்ளது. வங்கிகளின் இந்த மிகையான வட்டி விழுக்காடு அவற்றின் வாடிக்கையாளர்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
முன்னை இட்ட தீ உக்ரேனிலே
இரசியா மத்திய கிழக்கில் செய்யும் மிரட்டல்களுக்கு பதிலடியாக முதலில் உக்ரேனை இரசியப் பிடியில் இருந்து விடுவிக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. உக்ரேனின் பாராளமன்ற உறுப்பினர்களை இரசியாவிற்கு எதிராகத் திருப்ப அமெரிக்கா பத்து பில்லியன் டொலர்களைப் பாவித்தாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் உலகின் தற்போது உள்ள அரச தலைவர்களில் மிகவும் திறமை மிக்கவராகக் கருதப்படும் விளடிமீர் புட்டீன் தனது காய்களை துரிதமாகவும் தீவிரமாகவும் நகர்த்தினார். இதனால் உக்ரேனின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிறிமியா 2014- மார்ச் மாதம் 18-ம் திகதி இரசியாவுடன் இணைக்கப்பட்டது. அத்துடன் உக்ரேனின் இரசியர்கள் பெரும்பான்மையினராக வாழும் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பிரிவினைவாதக் கிளர்ச்சி உருவானது. உக்ரேனில் புட்டீனின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் மார்ச் மாதம் 6-ம் திகதி இரசியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்தன.
அமெரிக்காவுடன் கை கோர்த்த சவுதி அரேபியா
இரசியாவை வீழ்த்த உலக எரிபொருள் விலையை விழச்செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சவுதி அரேபியாவும் கை கொடுத்தது. சுனி முசுலிம் நாடான சவுதி அரேபியா எரிபொருள் விலையை விழச் செய்வதால் சியா முசுலிம் நாடான இரானை வலுவிழக்கச் செய்யலாம் என உறுதியாக நம்பியது. சவுதி அரேபியாவைப் போலவே மற்ற சுனி இசுலாமிய நாடுகளும் தமக்கு மூக்குப் போனாலும் ஈரானுக்கு சகுனம் சரியில்லாமல் போனால் சரி என்ற நிலையில் இருக்கின்றன. 2014 டிசம்பர் 10-ம் திகதி சவுதி எரிபொருள் துறை அமைச்சர் தமது நாடு நாள் ஒன்றிற்கும் 97 இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யப் போவதாக அறிவித்தார். எரிபொருளுக்கு உலகில் இருக்கும் தேவையைப்பற்றித் தான கவலைப்படவில்லை என்றார். ஈரானிய அதிபர் இதை மறைமுகமாகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். 2006-ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கும் ஈரானிற்கும் ஏற்பட்ட முறுகலைத் தொடர்ந்து ஈரானிற்கு நட்டம் ஏற்பட சவுதி தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து 2009-ம் ஆண்டு ஒரு பீப்பாய் எண்ணெய் விலையை $147இல் இருந்து $33இற்கு விழ வைத்தது.
தேவைக்கு மேலான உற்பத்தி
சிரிய உள்நாட்டுப் போர், லிபியாவில் தொடரும் மோதல்கள், ஈராக்கில் உள்நாட்டுப் போர், ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடை ஆகியவற்றையும் தாண்டி அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் உலக எரிபொருள் விலையைத் தொடர்ந்து விழ வைத்துக் கொண்டிருக்கின்றன. வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட பெருமளவு ஷேல் எரிபொருள் இருப்பும் ஒபெக் நாடுகளின் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பும், பக்கவாட்டில் துளையிடும் தொழில் நுட்ப வளர்ச்சியும், எரிபொருள் உற்பத்தித் துறையில் மேற்கொண்ட அதிகரித்த முதலீடுகளும் உலக எரிபொருள் வழங்கலை அதிகரித்துக் கொண்டே போகின்றன. சீனா இந்தியா உட்படப் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி வேகங்கள் குறைந்தமை உலக எரிபொருள் தேவையைக் குறைத்தன. உலக எரிபொருள் உற்பத்தி உலக எரிபொருள் தேவையிலும் பார்க்க அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது அடுத்த ஆண்டு ஒரு பீப்பாய் 33 டொலர்கள் வரை விழலாம் எனப்படுகின்றது.
வட துருவத்திற்கு உரிமை கொண்டாடும் டென்மார்க்
வட துருவத்தில் உள்ள பனிப்பாறைகளுக்கு அடியில் எரிபொருள் வளம் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதனால் வட துருவத்தைக் கொண்ட ஆட்டிக் பனிக்கடலில் இரசியாவிற்குப் போட்டியாக டென்மார்க்கும் கனடாவும் உரிமை கொண்டாட்டப் போட்டியில் இறங்கிவிட்டன. 56 இலட்சம மக்களைக் கொண்ட டென்மார் மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய நாடான இரசியாவிற்குப் போட்டியாக இறங்கியுள்ளது. இதற்கு அமெரிக்கா உட்பட்ட நேட்டோ நாடுகளின் ஆதரவு நிச்சயம் பின்புலமாக இருக்க வேண்டும். ஒன்பது இலட்சம சதுர் கிலோ மீட்டர் பனிக்கடற்பரப்ப்பு தன்னுடையது என டென்மார்க் ஐக்கிய நாடுகள் சபையில் உரிமை கோரியுள்ளது. இதே வேளை இரசியாவின் செய்மதி நாடான கியூபாவுடன் அமெரிக்கா தனது முரண்பாடுகளை நீக்கி நட்பை வளர்க்கவும் முயற்ச்சி செய்கின்றது. மத்திய அமெரிக்கக் கண்டத்திலும் எரிபொருள் அரசியல் வேலை செய்கின்றது. கியூபாவிற்கு நிதி உதவி செய்யும் நெருங்கிய நட்பு நாடான வெனிசுவேலா எரிபொருள் விலை அதிகரிப்பால் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துத் கொண்டிருக்கின்றது. இதனால் கியூபா தனது பொருளாதாரத்தைக் காப்பாற்ற மாற்று வழிகளைத் தேடவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.
ஜேர்மனியைப் பாதிக்கும் இரசியப் பொருளாதார வீழ்ச்சி
இரசியப் பொருளாதாரம் உலகின் எட்டாவது பெரிய பொருளாதாரமாகும். இரசியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது அதனுடன் இணைந்து பல நாடுகளின் பொருளாதாரங்களும் பாதிப்படையும். இரசியாவிற்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யும் ஜெர்மனியின் பொருளாதாரம் முதலில் பாதிப்படையும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஜேர்மனியப் பொருளாதாரம் பாதிப்படையும் போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்படையும். இரசியாவின் ஏற்றுமதியில் 70 விழுக்காடு எரிபொருள் ஆகும். உலக மொத்த உற்பத்தியில் இரசியாவின் உற்பத்தி மூன்று விழுக்காட்டிலும் குறைவானதே.
அசையாத புட்டீனின் செல்வாக்கு
1999-ம் ஆண்டு இரசியா பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்ததால் அப்போதை அதிபர் பொறிஸ் யெல்ஸ்ரின் பதவி விலக வேண்டி ஏற்பட்டது. அதன் பின்னர் பதவிக்கு வந்த புட்டீன் இரசியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் சென்றார். இதை வைத்து உலக அரங்கில் இரசியாவின் ஆதிக்கத்தையும் மீளக் கட்டியெழுப்ப புட்டீன் முயல்கையில் ஐக்கிய அமெரிக்காவுடனும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும் இரசியாவை ஒரு மோதல் நிலை உருவானது. உக்ரேனின் கிறிமியாவை இரசியாவுடன் இணைத்ததில் இருந்து இரசியாவில் புட்டீனுக்கான மக்கள் ஆதரவு 85 விழுக்காட்டிலும் மேலாக அதிகரித்தது. இரசியாவிற்குப் பொருளாதார நெருக்கடிகள் கொடுப்பதன் மூலம் புட்டீனின் செல்வாக்கை சரிக்கலாம் என அவரது எதிரிகள் நம்புகின்றனர். ஆனால் இப்போதும் 80 விழுக்காடு இரசியர்கள் புட்டீனை ஆதரிக்கின்றனர். உலகில் இந்த அளவு செல்வாக்குடன் ஆட்சி செய்பவர்கள் மிகக் குறைவு. புட்டீன் மீது அதிருப்தி கொண்டவர்கள் உக்ரேன், ஜேர்ஜியா, மோல்டோவா ஆகிய நாடுகளிற்குத் தப்பிச் சென்று கொண்டிருக்கின்றனர். உக்ரேனில் ஒரு நாடு கடந்த அரசை இவர்கள் நிறுவலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த பதினைந்து நாடுகளாக புட்டீனை எதிர்த்து வரும் ஒல்கா குர்னொசொவா என்னும் பெண் இதற்கான முன்னெடுப்புக்களைச் செய்வாதாக நமபப்படுகின்றது. இவர் உலகெங்கும் உள்ள புட்டீன் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைப்பதாகவும் நம்பப்படுகின்றது. இவர்களை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தம் வசமாக்கலாம் அல்லது ஏற்கனவே இவர்கள் அவர்கள் வசம் இருந்து செயற்படலாம். ஆனால் புட்டீனால் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தாக்குப் பிடிக்க முடியும் எனப் பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். ஒல்கா குர்னொசொவா புட்டீனைப் பதவி இறக்கும் வாய்ப்பு 5 விழுக்காடு மட்டுமே என்கின்றார். புட்டீனின் காலை ஒடிக்கும் நிலை அண்மையில் இல்லை.

Sunday, 14 December 2014
அசிங்கப்பட்டாண்டா அமெரிக்காக்காரன்: சிஐஏயின் சித்திரவதை பற்றிய அறிக்கை.
![]() |
| உலகெங்கும் சிஐஏயின் வதை முகாம்கள் |
அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் புலனாய்விற்கான குழு கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை செய்து தயாரித்த ஆறாயிரம் பக்கங்களுக்கும் மேற்பட்ட அறிக்கையில் பல தவிர்க்கப்பட்டு 528 பக்கங்கள் கொண்ட அறிக்கை மட்டும் 2014-11-09-ம் திகதி வெளியிடப்பட்டது. ஒரு நீண்ட இழுத்தடிப்பிற்குப் பின்னரே இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. 2001-09-11-ம் திகதி நியூயோர்க் நகர் இரட்டைக் கோபுரத் தாக்குதலை அடுத்து அமெரிக்க அரசின் "பயங்கரவாத" எதிர்ப்பு நடவடிக்கையை ஒட்டி சிஐஏ உலகெங்கும் பிடித்த "பயங்கரவாதிகளை" விசாரித்த முறைகள் தொடர்பாக இந்த விசாரணை நடாத்தப்பட்டது.
அப்பாவிகளையும் கொடுமை செய்தனர்
சிஐஏ விசாரித்த அல்லது சித்திரவதை செய்த 119 பேர்களில் குறைந்தது 26 பேராவது ஒரு தப்பும் செய்யாத அப்பாவிகள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. சிஐஏயினர் தமது சித்திரவதைகளுக்கு மேம்படுத்தப்பட்ட விசாரணைத் தொழில்நுட்பங்கள் (enhanced interrogation techniques) என்ற கௌரவப் பெயரைச் சூட்டியிருந்தனர். ஆகக் குறைந்தது இருபது பேரையாவது அமெரிக்க அரசின் எந்த ஒரு அதிகாரிகளுக்கும் தெரியாமல் சிஐஏயினர் கைது செய்து வைத்திருந்தமையும் அம்பலமாகியுள்ளது மூதவையின் புலனாய்வுக்குழுவின் அறிக்கைக்குப் சிஐஏ ஒரு 112 பக்கங்களைக் கொண்ட பதிலறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தவறுகள் நடந்ததை ஒப்புக் கொண்ட சிஐஏ அமெரிக்க அரசிற்கோ, அதிகாரிகளுக்கோ அல்லது மக்களுக்கோ பிழையான தகவல்கள் கொடுத்ததை மறுத்துள்ளது. ஆனால் உண்மையில் நடந்த சித்திரவதைகள் கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட தகவல் களிலும் பார்க்க மிக மோசமானதாகவே இருந்தன. அறிக்கை வெளிவிட முன்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை உலகெங்கும் உள்ள தனது இராசதந்திரிகளை கவனமாக இருக்கும் படி எச்சரிக்கை விட்டிருந்தது.
மலவாசல் மூலம் உணவும் நீரும் ஊட்டப்பட்டனர்.
மேம்படுத்தப்பட்ட விசாரணைத் தொழில்நுட்பங்கள் மூலம் விசாரிக்கப்பட்ட கைதிகளைப் பட்டினி போட்டு விட்டுப் பின்னர் அவர்களுக்கு மலவாசல் மூலமாக உணவு உட்செலுத்தப்பட்டது. அவர்களை நீண்ட நாட்கள் தண்ணீர் பருகாமல் வைத்திருந்து விட்டுப் பின்னர் நீர்பற்றின்மை ஏற்படாதிருக்க மலவாசல் மூலம் நீர் உட்செலுத்தப்படும். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த சிஐஏ அதிகாரிகள் கைதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இது பின்பற்றப்பட்டது என்றார். அமெரிக்க முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் டிக் சேனி மலவாசல் மூலம் உணவூட்டப்பட்டமை மருத்துவ நோக்கங்களை மட்டுமே கொண்டது, அது சித்திரவதை அல்ல என்றார்.
Water Boarding என்னும் நீர்ப்பலகை முறைமை சித்திரவதையே
தடுப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை சிஐஏ அமெரிக்காவிற்கு வெளியே பல நாடுகளில் நிறுவி அங்கு தான் சந்தேகிப்பவர்களைத் தடுத்து வைத்திருந்து பல சித்திர வதைகளைச் செய்தது. ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது அமெரிக்காவில் அல் கெய்தா சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்களைப் பெற சி ஐ ஏ உளவு நிறுவனம் Water Boarding Interrogation Techniques எனப்படும் Simulated drowning ஐப்பாவித்தது. இந்தச் சித்திரவதையைப்பற்றி சுருங்கக் கூறுவதானால் கைதி நீருள் மூழ்கி இறப்பது போன்ற ஒரு உணர்வைப் போலியாக ஏற்படுத்தி அதன் மூலம் அவருக்கு இறக்கப் போகிறேன் என்றபயத்தை ஏற்படுத்தி அவரை உண்மைகளைக் கக்க வைப்பதுதான் இந்த water boarding சித்திரவதை. ஐரோப்பாவில் மட்டும் 14 நாடுகளில் சிஐஏயின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தன. இவை எந்த நாட்டுச் சட்டத்திற்கும் உட்பட்டவை அல்ல. போலந்தில் சிஐஏ இரகசியத் தடுப்பு முகாம்களில் அல் கெய்தா சந்தேக நபர்களைச் சித்திரவதை செய்ததை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. சிஐஏயின் "கைதுகளும் சிறை வைத்தலும்" எந்த ஒரு நாட்டுச் சட்டத்திற்கும் இசைய நடப்பவை அல்ல. Water Boarding Interrogation Techniques மூலம் விசாரிப்பது ஒரு சித்திரவதை அல்ல என சிஐஏ சொல்லி வந்தது. ஆனால் மூதவையின் புலனாய்விற்கான குழுவின் அறிக்கை இது ஒரு சித்திரவதையே எனச் சொல்கின்றது. இவ் விசாரணைக்கு உட்பட்டவர் வயால் நுரைதள்ளியபடி துடிதுடித்தமையை அறிக்கை அம்பலப் படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸில் உள்ள சிஐஏ சித்திரவதை முகாமில் Water Boarding மூலம் விசாரிக்கப்பட்ட கத்தோகிக்க குரு ஒருவர் இறந்துள்ளார். இதற்கான எந்த நீதி விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. சில கைதிகளுக்கு அவர்களின் தாயாரின் கழுத்து அறுக்கப்படும் என்றும் அவர்களின் பிள்ளைகள் கொல்லப்படுவார்கள் என்றும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. சிலர் பிணப்பெட்டியிலேயே நீங்கள் வெளியே செல்வீர்கள் எனவும் மிரட்டப்பட்டனர். பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களும் நடைபெற்றன. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட காலிட் ஷேக் மொஹமட் 183 தடவை நீர்ப்பலககச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.
கருங்குகை
கைதிகளை கோபால்ற் எனப்படும் இருட்டறைக்குள் தொடர்ந்து 180 மணித்தியாலங்கள் நித்திரையின்றி மிகவும் உரத்த ஓசையில் இசைகளை எழுப்பி வைத்திருந்து பின்னர் விசாரிப்பது வழக்கம். ஆடையின்றி நிலத்துடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு கைதி குளிர்க்காய்ச்சலால் உயிர் விட்டார். கால் முறிந்தவர்கள் கூட தொடர்ச்சியாகப் பல நாட்கள் நிற்கவைக்கப்பட்டனர். ஆப்கானிஸ்த்தானில் உள்ள ஒரு சிஐஏயின் "விசாரணை நிலையம்" இருட்டுச் சிறை என்றும் உப்புக் குகை என்றும் குறியீட்டுப் பெயர்களால் கைதிகளால் அழைக்கப்பட்டது. வேறு சில விசாரணை அறைகளில் மிக மிக அதிக அளவில் ஒளிபாய்ச்சப்பட்டு கைதிகள் அங்கு அடைத்து வைக்கப்படுவர். போலாந்தில் சிஐஏயின் கருங்குகை ஒன்று இருந்ததை போலாந்து அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அல் கெய்தாவினருக்கு எதிரான நடவடிக்கைகளிற்கு போலாந்து முதலில் ஒத்துழைக்க மறுத்தது. பின்னர் அமெரிக்காவிடம் இருந்து பெரும் தொகைப்பணம் பெற்றுக் கொண்டு போலாந்து ஒத்துழைத்தது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பலம் பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நிலையம்.
சிஐஏயின் ஒரு பிரிவான பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் 09-11-2001இல் 300பேர் மட்டுமே பணி புரிந்தனர். 9-11 தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதில் 1200பேர் உடனடியாக இணைக்கப்பட்டனர். இப்போது அதில் 2000இற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதைவிட ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்யும் வெளிநாட்டினர்களின் பலர் உள்ளனர். உலகெங்கும் உள்ள அல் கெய்தா இயக்கத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க சிஐஏயின் பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் அதிகம் பேர் பணி புரிகிறார்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஐஏ தனது சித்திரவதைச் செயற்பாடுகளுக்கு ஆலோசனை வழங்க James Mitchell and Bruce Jesser ஆகிய இரண்டு மனோதத்துவ நிபுணர்களை பணிக்கு அமர்த்தி இருந்தது. அவர்களுக்கு எண்பது மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வழங்கப்பட்டது. இந்த இரு மனோதத்துவ நிபுணர்களுக்கும் எதிராக எந்த வித சட்ட நடவடிக்கைகளையும் எவரும் எடுக்காதிருக்க உரிய காப்புறுதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்-பாக் பிரிவு
அல் கெய்தாவின் முக்கிய களம் ஆப்கானிஸ்த்தானிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான எல்லைப் பிரதேசமாகும். இப்பிரதேசம் பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டிலோ அல்லது ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டிலோ இல்லை. 9-11இன் பின்னர் சிஐஏயின் பிஏடி எனப்படும் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்தான் பிரிவு உருவாக்கப்பட்டது. இதற்கிணங்க அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஆப்-பாக் கொள்கை ஒன்றை வகுத்துக் கொண்டது. சிஐஏயின் பயங்கரவாத எதிர்ப்பு நிலையமும் பிஏடியும் இணைந்து ஆப்கானிஸ்தானில் பல அல் கெய்தா எதிர்ப்பு நடவடிக்க்கைகள வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளன.
மோசமான படை அமைப்பாக மாறிய சிஐஏ
வெறும் உளவு நிறுவனமாக இருந்து கொண்டு முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் அரசுகளைக் கவிழ்த்தல் ஆட்சியாளர்களைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிஐஏ 9-11இற்குப்பின்னர் ஒரு படைப்பிரிவையும் தனக்கென அமைத்துக் கொண்டது. அமெரிக்காவின் படைத்துறையினர் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும் வகை சொல்லவும் கடப்பாடுடையவர்கள். ஆனால் சிஐஏயின் படைப்பிரிவு அப்படி அல்ல. அப்படி ஒரு பிரிவு இருப்பதாக சிஐஏ பகிரங்கமாக சொல்வதுமில்லை. அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அப்படி ஒரு படைப்பிரிவு இல்லை என்றே கூறமுடியும். இதனால் சிஐஏயின் படைப்பிரிவு தன்னிச்சையாக பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்கள் சிஐஏயின் படைப்பிரிவு எந்தவிதக் சட்டக் கட்டுப்பாடுமின்றி ஒரு ஒட்டுக் குழுபோல் செயற்படுகிறது என்று பகிரங்கமாகக் கூறுகின்றனர்.
சிஐஏயின் ஆளில்லா விமானங்கள்
சிஐஏயின் படைப் பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் பலவற்றைத் தம்வசம் வைத்திருக்கின்றன. இவை உண்மையில் கொல்லும் எந்திரங்கள். ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றியில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிஐஏ மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராச்சிக்குப் பெரும் பணம் செலவழித்துள்ளது. ஆப்-பாக் எல்லையில் உள்ள அல் கெய்தாவினர் பற்றிய தகவல்களை அறிந்து அதை அமெரிக்கப்படியினருக்கு அறிவித்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முன்னர் அல் கெய்தாவினர் நகர்ந்து விடுவார்கள். தாக்குதலுக்கான பெரிய விமானங்கள் தளத்தில் இருந்து கிளம்பும் தகவல் அல் கெய்தாவினருக்குச் சென்று விடும். சிஐஏ தனது சொந்த ஆளில்லா விமானங்கள் மூலம் உடனடித் தாக்குதல்களை மேற் கொள்ளலாம். சிஐஏயின் ஆளில்லாப் போர்விமானங்கள் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான அல் கெய்தா உறுப்பினர்களைக் கொன்றுவிட்டன. அல் கெய்தாவில் இணைபவர்களிலும் பார்க்க அதிகமானவர்களைத் தாம் கொல்கிறோம் என்று சிஐஏ பெருமைப்பட்டுக் கொள்கிறது. கடந்த ஒரு வருடமாக யேமனிலும் சிஐஏயின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை மேற் கொண்டன. ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்தானிலும் சிஐஏ தளங்களை அமைத்து இந்த ஆளில்லா விமானங்களை இயக்குகின்றது. சிஐஏயின் படைப்பிரிவினர் பாக்கிஸ்தான் அரசுக்கோ படைத்துறைக்கோ தெரியாமல் அங்கு பல தாக்குதல்கள், கைதுகள், கடத்தல்கள், கொலைகள் பலவற்றைச் செய்கின்றனர். இதன் உச்சக்கட்டம்தான் பில் லாடன் கொலை. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் புலனாய்விற்கான குழு சிஐஏயின் சித்திரவதைகளை மட்டுமே விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தது. ஆளில்லாப் போர் விமான நடவடிக்கைகள் பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
பிடித்துக் கொல்லுதலும் கொன்று பிடித்தலும்
அல் கெய்தாவினருக்கு எதிரான சிஐஏயின் நடவடிக்கைகள் பிடித்துக் கொல்லுதல் என்ற செயற்பாட்டில் இருந்து கொன்று பிடித்தல் என்ற செயற்பாட்டுக்கு மாறியுள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். சிஐஏ தேவை ஏற்படும் போது தடை செய்யப்பட்ட நிலக்கண்ணி வெடிகளையும் பாவிக்கத் தயங்குவதில்லை என்றும் வேறு சில செய்திகள் கூறுகின்றன. பின் லாடனைப் பிடித்துக் கொல்லப் போன அமெரிக்க சீல் படையினர் பின் லாடனின் மனைவி தற்கொலை அங்கி அணிந்திருக்கலாம் என்ற அச்சத்தில் பின் லாடனைக் கொன்று பிடித்தனர்.
சிஐஏயிற்கு பாராட்டு மழை
சிஐஏ தனது சித்திரவதை விசாரணையான மேம்படுத்தப்பட்ட விசாரணைத் தொழில்நுட்பங்கள் மூலம் அமெரிக்க மக்களை அழிவில் இருந்து பாதுகாத்ததாக முன்னாள் சிஐஏ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சிஐஏயைப் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் புலனாய்விற்கான குழுவின் அறிக்கை வெளிவர முன்னரே முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோர்ஜ் புஷ் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பது சிஐஏ எனப் பாராட்டியிருந்தார். மேம்படுத்தப்பட்ட விசாரணைத் தொழில்நுட்பங்கள் பாவிக்கக அனுமதி வழங்கியவர் ஜோர்ஜ் புஷ் ஆகும். குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா சிஐஏ தவறிழைத்தமையை ஒத்துக் கொள்ளுவதுடன் சிஐஏ அமெரிக்கர்களைப் பாதுகாத்தது என்றும் பாராட்டுகின்றார். கடந்த 13 ஆண்டுகளாக அல் கெய்தாவை வலுவிழகக்ச் செய்ததில் சிஐஏ வெற்றிகண்டது என்றார் ஒபாமா.
அல் கெய்தாவின் பதில்
சிஐஏயிடம் அகப்பட்டால் அதன் சித்திரவதைகளை எப்படி எதிர் கொள்வது என்பது தொடர்பாக அல் கெய்தா அமைப்பினர் ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை ஒரு கைநூலாக வெளியிட்டுள்ளனர். அவர்கள் இரகசியமாகப் பேணிய இந்த ஆவணம் பிரித்தானிய உளவுத்துறையிடம் அகப்பட்டுள்ளது.
ஐஎஸ் திவிரவாதிகள் பரவில்லை என்கின்றனர்
வேறு உளவுச் செயற்பாடுகள் மூலம் கிடைத்த தகவல்களை தமது மேம்படுத்தப்பட்ட விசாரணைத் தொழில்நுட்பம் மூலம் பெற்றதாக சிஐஏ பொய்யான தகவல்கள் வழங்கியமையும் அம்பலமாக்கப்பட்டுள்ளது. உண்மையில் சிஐஏயின் சித்திரவதைகள் மூலம் காத்திரமான தகவல்கள் ஏதும் பெறப்படவில்லை என்றும் எந்த ஒரு தாக்குதலையும் தடுக்கக் கூடிய தகவல்கள் பெறப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. தமது சித்திரவதை விசாரணையை நியாயப் படுத்த இப்பொய்கள் சொல்லப்பட்டன. சிஐஏயின் சித்திரவதை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையைப் பார்க்கும் போது கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவரைக் கொல்லும் இசுலாமியத் தீவிரவாதிகளின் செய்கைகளிலும் பார்க்க சிஐஏயின் சித்திரவதைகள் மோசமானவை எனத் தோன்றுகின்றன. அமெரிக்க மூதவை உறுப்பினரான ஜோன் காஸ் இசுலாமியத் தீவிரவாத அமைப்பான ஐ. எஸ் தனது சித்திரவதை தொடர்பான அறிக்கையை வெளிவிடுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்..
பயங்கரவாத ஒழிப்பு என்பது எல்லா நாடுகளிலும் போர்க் குற்றமே.
Subscribe to:
Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...