Sunday, 28 December 2014

இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக அமையும் ஈரானின் தற்கொலை விமானங்கள்

ஈரான் தான் உருவாக்கிய ஆளில்லா தற்கொலை விமானங்களை வெற்றீகரமாகப் பரிசோதித்துள்ளது. அண்மைக் காலங்களாக ஈரான் தனது ஆளில்லாப் போர் விமானத் தொழில் நுட்பத்தை பெரும் வளர்த்து வருகின்றது. ஈரான் உருவாக்கியுள்ள ஆளில்லாத் தற்கொலை விமானங்கள் நடமாடும் குண்டுகள் ("mobile bombs") என படைத்துறை நிபுணர்கள் விபரித்துள்ளனர். இவற்றால் தரை, வான் மற்றும் கடலில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த முடியும்.



2011-ம் ஆண்டு ஈரானில் உளவு பார்க்கப் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா வேவு  விமானமான RQ-170 ஈரானில் விழுந்ததைத் தொடர்ந்து ஈரானின் ஆளில்லாப் போர் விமானத் தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது. ஈரானில் விழுந்த ஆளில்லாப் போர் விமானம் தொடர்பான் முந்தைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்.

ஈரான் அமெரிக்காவின் ஆளில்லா வேவு  விமானமான RQ-170ஐத் தழுவி உருவாக்கிய ஆளில்லா விமானம்:


ஈரான் தான் உருவாக்கிய ஆளில்லாத் தற்கொலை விமானங்களுக்கு யசீன் எனப் பெயரிட்டுள்ளது. இது ஒரு முழுமையான உள்ளூர்த் தயாரிப்பாகும். இதில் வேவுபார்ப்பதற்கு புதியவகை ஒளிப்பதிவு கருவிகள் (state-of-art, light cameras) பொருத்தப்பட்டுள்ளன. இவற்றால் தொடர்ந்து எட்டு மணித்தியாலங்கள் பறக்க முடியும். இதன் பறப்புத் தூரம் 200 கிலே மீட்டர்களும் உயரம் 4,500 மீட்டர்களுமாகும்.

2014-12-25-ம் திகதியில் இருந்து ஈரான் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் பல படைத்துறை ஒத்திகைகளை "மொஹமட் ரசௌல்லா" என்னும் குறியீட்டுப் பெயருடன் நடாத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஆளில்லாத் தற்கொலைப் போர் விமானங்கள் பரிசோதிக்கப்பட்டன.

ஈரான் தான் உருவாக்கும் படைக்கலன்களை காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பினரூடாக அல்லது லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் ஊடாக இஸ்ரேலுக்கு எதிராகப் பரிசோதித்துப் பார்ப்பது வழமை. ஈரானின் ஆளில்லாப் போர் விமானம் ஒன்று சென்ற ஆண்டு இஸ்ரேலுக்கு மேலாகப் பறந்து உளவு பார்த்த போது சுட்டு வீழ்த்தப்பட்டது. ஈரான் தான் உருவாக்கிய யசீர் தற்கொலை விமானத்தையும் இஸ்ரேல் மீது பரீட்சிக்கலாம். இது இஸ்ரேலுக்கு ஆபத்தாக அமையலாம். இஸ்ரேல் ஏற்கனவே யசீரை வானில் வைத்தே அழிக்கும் முறைமை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டும் இருக்கலாம்.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...