Sunday, 21 November 2010

உள்ளக் கிடக்கை / You left even without a goodbye




பிறவிப் பெரும் பயன்
எதற்காக நீ பிறந்தாய் என்பதை
எதற்காக நீ இறந்தாய் என்பது
தீர்மானித்துக் கொள்ளும்

உள்ளக் கிடக்கை
நானாக நான் இருப்பேன்
ஆழ்மன எண்ணங்களை
அழுத்தி வெளியிடுவேன்
அந்நிய நாட்டின் அறியாத
இணையத் தோழர் தோழிகளிடம்

You left even without a goodbye
Baby, you left even without a goodbye
I look for in every car that passes me
I look for in every rain drop that falls on me
In every breeze I try to find your breath
In every noise I try to find your voice
Without your image in it
Tear drops are too heavy for my eyes
Without your thought in it
My heart is too heavy for my chest
Nights never had been this long for me

Saturday, 20 November 2010

இதயத்தால் காதலிப்பது யார்





அறுவடை
அகல உழுவதைவிட ஆழ உழு
மெக்சிக்கோவில் அறுவடை செய்வாய்

பழகாத மொழி
அர்த்தராத்திரியில்
மழை பெய்தால்
குடை வேண்டும்

விலைவாசி
தங்கம் விலை என்றுதானோ
சங்கரன் பாம்பணிந்தான்
உமாதேவிக்கு ஆதிசேடன்
மோதிரமாய் ஆனானோ

யாரோ
கண்களால் ஆண்கள் காதலிக்கிறார்களாம்
காதுகளால் பெண்கள் காதலிக்கிறார்களாம்
இதயத்தால் காதலிப்பது யார்

Thursday, 18 November 2010

அட்டூழியம்: சவுதி 24 - குவைத் 14



திருமால் அவதாரங்கள் எடுத்தாராம்
தேவன் குமாரனை அனுப்பினாராம்
அல்லா தூதுவர்களை அனுப்பினாராம்
ஒரு நாளில் வன்னியில் இருபதினாயிரம் கொலைகள்
சவுதியில் ஆரியவதி உடலில்
இருபத்திநாலு ஆணிகள் அறையப்பட்டன.
குவைத்தில் லெட்சுமியின் உடலில்
பதினாங்கு ஆணிகள் அறையப்பட்டன
திரும்பிவந்தால் மனைவியை
கடத்தி இலங்கைக்குக்
கொண்டு செல்வர் என்ற பயமா
மீண்டும் சிலுவையில்
அறையப்படலாம் என்ற பயமா
ஊர்விட்டு ஓடோடிப்போக
வேண்டுமென்ற பயமா

இருதய நோய்களுக்கு புரட்சிகரமான புதிய மாத்திரை


இருதய நோய்களைக் குறைக்கக் கூடிய புதிய மாத்திரைகளை ஹாவார்ட் பல்கலைக்கழகத்தினர் உருவாக்கியுள்ளனர். இம்மாத்திரைகள் எமது இரத்தத்தில் உள்ள கூடாத கொழுப்பாகிய LDL cholesterolஐஅகற்றிவிடும்.
எமது இரத்தத்தில் கொழுப்புக்கள் அவசியமானவை. அது அளவோடு இருக்க வேண்டும். LDL cholesterol அதிகமானால் அது இரத்தக் குழாய்களை சிறுக்கச் செய்யும் அதனால் இரத்தத்தை உடல் முழுக்க கொண்டு செல்ல இருதயம் அதிக அழுத்தத்துடன் இரதத்தை செலுத்த வேண்டும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மிக அதிக LDL cholesterol இரத்தக் குழாய்களை முழுதாக அடைத்து விடுவதும் உண்டு. அப்போது மாரடைப்பு உண்டாகிறது.

புதிதாக உருவாக்கியுள்ள மாத்திரைகள் இரத்ததில் HDL cholesterol எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்து LDL cholesterol எனப்படும் தீங்கு விளைவிக்கும் கொழுப்பை ஈரலுக்கு எடுத்துச் சென்று அங்கு அதைக் கரைத்து உடலில் இருந்து வெளியேற்றி விடும். பல நாடுகளில் இருதய நோயால் இறப்பவர்கள் தொகை மற்றக் காரணிகளால் இறப்பவர்களிலும் பார்க்க மிக அதிகம். பிரித்தானியாவில் 26 இலட்சம் மக்கள் இருத நோயால் அவலப் படுகிறார்கள். இங்கு ஆண்டு தோறும் 94000 மக்கள் இருதய நோயால் இறக்கின்றனர். புதிதாக உருவாக்கப் பட்டுள்ள மாத்திரகள் கொழுப்பை அரை பங்கு குறைக்க வல்லவை என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

Wednesday, 17 November 2010

சிரிக்க: வள்ளுவனை கலாய்த்தல்


மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

கிரீன் கார்ட் இருந்தும் மேலல்லார் மேலல்லர் இங்கிருந்தும்
கால் செண்டர் வேலை செய்வோர் கிழல்லவர்

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

செல்லில் பலன்ஸ் உண்டேல் எனக்குரை மற்று நின்
மிஸ்ட் கால் கேட்பார்க்குரை

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

மின்னஞ்சலில் காதல் செய்தவர் வரமறுப்பின்
சொல்லஞ்சலில் கடலை போடுபவரைப்பார்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

பல்லார் முனிய chat அடிப்பான்
எல்லாராலூம் கட் பண்ணப்படும்

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

A47ஓடு நின்றான் இடுவென்றதுபோலும்
பலன்ஸ் நிறைந்தான் மிஸ்ட்கால்


நாம் சொல்வதற்கும் சொல்ல நினைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. புறமொன்று பேசும் போது உள் நினைப்புகள் எப்படி இருக்கும்? இதோ சில உதாரணங்கள்:
I love your smile, your face, and your eyes

Damn, I'm good at telling lies!

***

My darling, my lover, my beautiful wife:

Marrying you screwed up my life.

***

I see your face when I am dreaming.

That's why I always wake up screaming.

***

Oh loving beauty, you float with grace

If only you could hide your face.

***

Kind, intelligent, loving and hot

This describes everything you are not.

***

I want to feel your sweet embrace

But don't take that paper bag off of your face.

***

My love, you take my breath away.

What have you stepped in to smell this way?

***

Love may be beautiful, love may be bliss

But I only slept with you, because I was pissed.

***
My feelings for you no words can tell

Except for maybe "Go To Hell".

***

Roses are red, violets are blue, sugar is sweet, and
so are you.

But the roses are wilting, the violets are dead, the
sugar bowl's empty and

so is your head

***

What inspired this amorous rhyme?

Two parts vodka, one part lime.

விஞ்ஞானிகள்: நடுத்தர வயதுப் பெண்கள் தண்ணியடித்தல் நல்லது


நடுத்தர வயதுப் பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் உவைன் (wine) அருந்துவது அவர்களை வயது போனகாலங்களில் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மிதமான மதுப்பழக்கம் இருதய நோய்களைத் தடுக்கும் என்று விஞ்ஞானிகள் பலதடவை கூறிவிட்டனர்.

1976இல் இருந்து இரண்டுஇலட்சம் பெண்கள்ளிடம் பொஸ்டனில் உள்ள ஹாவார்ட் பல்கலைக்கழக்த்தில் மேற்கொண்ட இரு ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன. இதில் இருந்து தினசரி மது அருந்தும் பெண்களின் ஆரோக்கியம் மது அருந்தாத பெண்களிலும் பார்க்க சிறப்பாக இருப்பதை அறிந்து கொண்டனர். Stroke நோய் வருவது தினசரி மது அருந்தும் பெண்களிடம் குறைவாக இருந்ததாம்.

மது அருந்துவது எப்படி ஆரோக்கியத்திற்கு உதவுகிறத்து என்று இதுவரை சரியாக அறியப்படவில்லை.

Tuesday, 16 November 2010

கேட்டுத் துலக்குவது அறிவு




நம்பிக்கை உளி
பிரச்சனைப் பாறை
சந்தர்ப்பச் சிலையாகும்
நம்பிக்கை உளி
நம் கையிலிருந்தால்.


You left before the Wet lips have gone dry
I see you everywhere
But couldn't find anywhere
I lost you in my memory
And look for in my dream
I lost you in my dream

And look for in my thoughts
There is always something between
You and me
But it is nothing to you
It is not my job
To break hearts
That you do very easily
You left before the
Wet lips have gone dry

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...