Saturday, 26 September 2009

காணொளி: வன்னி முகாம் - அல் ஜஸீராவின் பார்வை.


வன்னி முகாம்களின் அவலங்களைப் பற்றிய அல்ஜஸீரா தொலைக்காட்சியின் பார்வை அங்கிருந்து வெளியில் வந்த பூசகர் சம்பந்த ஐயரின் பேட்டியுடன் பதியப்பட்டுள்ளது:

தடை செய்யப்பட்ட ஆயுதப் பாவனைகள் மூடி மறைக்கப் படுகின்றன.


வன்னியில் உள்ள மூன்று இலட்சம் அகதிகளின் அவலங்களைப் பற்றி ஓரிரு தகவல்கள் மட்டுமே வெளியில் வந்தன. கைத்தொலை பேசிகளில் இரகசியமாக எடுக்கப் பட்ட ஓரிரு காணொளிக் காட்சிகாளால் மொத்த மூன்று இலட்சம் மக்களின் அவலங்களை வெளிக் கொண்டு வர முடியாது. உண்மையான அவலங்கள் வெளிக் கொண்டுவரப் பட்ட அவலங்களிலும் பன்மடங்கானது. முகாமுக்குள் இருக்கும் காயப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் முகாமுக்குள் வைத்தே செய்யப் படுகின்றது. பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடைந்த நிலையில் உள்ளனர். இவர்களில் எவருக்கும் வெளியில் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப் படவில்லை. இவர்கள் வெளியில் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப் பட்டால் இவர்களைக் காயமடையச் செய்த தடை செய்யப் பட்ட ஆயுதங்கள் பற்றிய உண்மை வெளிவந்துவிடாமல் மூடி மறைக்கவே இவர்கள் முகாமுக்குள் வைத்தே மருத்துவ வசதிகள்(?) செய்யப் படுகின்றன.

Friday, 25 September 2009

முகாமுக்குள் முகாம்கள்


ஒரு நாட்டில் மக்களாட்சி செவ்வனவே நடை பெற வேண்டுமாயின் அந்நாட்டில்:
  1. சட்டவாக்கற்துறை: பாராளமன்றம் போன்றவை
  2. நீதித்துறை
  3. நிர்வாகத்துறை
  4. ஊடகத்துறை
ஆகியன ஒழுங்காக செயலாற்ற வேண்டும். இவற்றை மக்களாட்சியின் நாலு தூண்கள் என்பர்.

இலங்கையின் அரசியலமைப்பும், அதன் கட்சி அரசியலும், அரசியற் கட்சிக்குள் அதன் உறுப்பினர்களுக்கு சுதந்திரமின்மையும் இலங்கயின் சட்டவாக்கற் துறையான பாராளமன்றம் ஆட்சியிலுள்ள கட்சிக்கு கட்டுப் பட்டதாக அமைகிறது ஆட்சியில் உள்ள கட்சி தனி ஒருவரின் அல்லது அவரின் குடும்ப அதிகாரத்துக்குள் அடங்குகிறது.

இலங்கையின் நீதித்துறைக்கு பாராளமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு வியாக்கியானம் அளிக்கும் அதிகாரம் உண்டு. பாராளமன்றம் கட்சி அரசியலுக்கு ஏற்றவகையில் அல்லது கட்சிக்கு ஏற்றவகையில் சட்டங்களை இயற்றும். தற்போது உள்ள அரசியலமைப்புச் சட்டம் முன்னாள் இலங்கை அதிபர் ஜே ஆர் ஜெயவர்த்தனேக்கு ஏற்ப இயற்றப்பட்டது என்று கூறுவார்கள்.

இலங்கையின் நிர்வாகத்துறை இலங்கை குடியரசுத்தலைவர் அவரின் கீழ் செயற்படும் மந்திரிகள் அவர்களின் கீழ் செயற்படும் அதிகாரிகள் என்றபடி அமையும். மொத்தத்தில் நிர்வாகத்துறை ஒருவருக்கு கட்டுப் பட்டதாக அமைகிறது.

இலங்கையின் ஊடகத்துறை பலத்த கட்டுப் பாட்டுக்கும் பயமுறுத்தலுக்கும் உள்ளாகி விட்டது.

ஆக மொத்தத்தில் இலங்கையில் மக்களாட்சியே இல்லை என்றே சொல்ல வேண்டும். இலங்கை ஒரு தனிநபரினதும் அவரது குடும்பத்தினரதும் கட்டுப் பாட்டுக்குள் தன்னை அறியாமலே சென்று கொண்டிருக்கிறது.

இலங்கை மக்கள் பலருக்கு இப்போது பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்ற போதை மருந்து வெற்றிகரமாக ஊட்டப் பட்டு விட்டது. முழு இலங்கையுமே ஒரு முகாமாக மாறிவருகிறது.

இதன் விளைவை இனி வருங்காலங்களில் நாம் உணரலாம். மாற்றுக் கருத்து மிரட்டப் பட்டு இல்லாமல் செய்யப் பட்டது போல் மாற்று அரசியல் கட்சிகளுக்கும் இனி ஆபத்து ஏற்படும். இதன் விளைவாக சிங்களவர்கள் மத்தியில் பாரிய கலவரங்கள் நிலக்கீழ் இயக்கங்கள் உருவாகும்.

1972இல் சிங்களவர்கள் மத்தியில் கிளர்ச்சி ஏற்பட்டு பல சிங்கள மக்கள் நீதிக்கு புறம்பான முறையில் கொல்லப் பட்ட போது சுதந்திரன் என்னும் ஒரு பத்திரிகையின் ஒரு ஆசிரியத் தலையங்கம் "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்று இருந்தது.

ஹொண்டாவின் புதிய ஒற்றைச் சில்லு வண்டி


ஹொண்டா நிறுவனத்தினர் ஒரு புதிய வகையான பட்டரியில் (battery) இயங்கும் ஒற்றைச் சில்லு வண்டியைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் உட்கார்ந்து நீங்கள் போக வேண்டிய இடத்தை நோக்கிச் சாய்ந்தால் அது உங்களை எடுத்துச் செல்லும். பத்துக் கிலோ எடையுள்ள மணித்தியாலத்திற்க்கு ஆறு கிலோமிற்றர் தூரம் செல்லக்கூடிய இந்த வாகனம் மற்ற ஒற்றைச் சில்லு வண்டிகளைப் போல் அல்லாமல் தன்னைத்தானே சமநிலைப் படுத்தக் கூடியது. இதற்கு U3-X எனப் பெயரிடப் பட்டுள்ளது. கால் பலவீனமான வயதானவர்களுக்கு இந்த வண்டி உகந்ததாக வடிவமைக்கப் பட்டுள்ளது என்று ஹொண்டா நிறுவனத்தின் தலைவர் ரக்கனொபு ஐரொ தெரிவித்துள்ளார். இந்த வாகனம் சந்தைக்கு வர சில காலம் எடுக்கும்.

Thursday, 24 September 2009

Hard drive will drive hard.


Hey, download my love

Baby unzip your heart

Extract it to full version

Install there forever.


If you let me have ACCESS

I will EXCEL in your heart

You need not say a WORD

The OUTLOOK would be fantastic


As we surf through

www.heaven.com

No need for Norton

Since the software

Are so firmed together


Hard drive will drive hard

To make our love soft

No need to be monitored

The love is printed deep into my heart

வன்னி வதை முகாம்கள் போரின் ஒரு பகுதியே.


இலங்கையில் போர் முடிந்துவிட்டது, பயங்கரவாதம் ஒழிக்கப் பட்டு விட்டது இனி அமைதிதான் இனி இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாணவேண்டியதுதான். உல்லாசப் பிரயாணிகள் வரலாம், இலங்கையில் முதலீடு செய்யலாம் கிழக்கில் உதயம் வடக்கில் வசந்தம் இப்படித்தான் செய்திகளை இப்போது பார்க்கிறோம்.

சில நாடுகள் போர்தான் முடிந்துள்ளது இனப் பிரச்சனை தீர்க்கப் படவேண்டும் என்று சொல்கின்றன. இனப் பிரச்சனை தீர்ந்தால்தான் தமது உலகமயமாக்குதலுக்கு ஏற்ற சூழல் இலங்கையில் ஏற்படும் என்று அவை கருதுகின்றன. அவரிகளின் அக்கறை தமிழர் நலன் சார்ந்ததல்ல. தமது வர்த்தகங்களை ஒழுங்காக மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்த அவை விரும்புகின்றன. அமெரிக்காவின் ஒபாமா ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் போது உலக ஒழுங்கை நிலை நாட்ட அமெரிக்காவல் மட்டும் தனித்து செயற்பட முடியாது மற்ற நாடுகளும் அதற்குத் துணைபோகவேண்டும் என்று அறை கூவல் விடுத்தார். அவர் அங்கு சொன்னதன் தாற்பரியம் அமெரிக்கா தனித்து பன்னாட்டுக் காவற்துறையினர் என்ற பணியாற்றி உலகமயமாக்கலுக்கான சூழலை ஏற்படுத்த மற்றநாடுகள் அமெரிக்கா சிரமப் பட்டு ஏற்படுத்திய சூழலில் வர்த்தகச் சுரண்டலை மேற்கொள்ளுவது முறையல்ல என்பது தான்.

இலங்கையில் போர் முடிந்து விட்டது ஆனால் அமைதி திரும்பவில்லை. இனி அமைதி கெடலாம் என்று எண்ணும் நாடுகள் இலங்கையில் இனப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு இலங்கையை உலகமயமாக்கலுக்கு உகந்த நாடாக மாற்ற வேண்டுகின்றன.

இலங்கைப் பேரினவாதிகள் இலங்கையில் இனப் பிரச்சனை என்று ஒன்று இல்லை அதைப் பற்றிக் கதைக்கத் தேவையில்லை என்று சொல்கின்றனர்.

இலங்கையின் மூன்று இலட்சம் மக்கள் முகாம்களில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப் பட்டிருப்பதை மனித நேய அமைப்புக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் சில நாடுகள் அதிக அக்கறை காட்டுகின்றன. அல்லாவிடில் தமது மனித நேய முகமூடி கிழிக்கப் பட்டு விடும் என்று இவை அஞ்சுகின்றன. அமெரிக்கா இதில் தனி அக்கறை காட்டுவது இதற்க்காகத்தான்.

ஆனால் ஆரிய சிங்களக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இன அழிப்புப் போரின் ஒரு பகுதியே இந்த முகாம்கள். அவர்களை இலகுவில் வெளியில் விடும் எண்ணம் அதற்கு இல்லை. ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் இந்த முகாம்களை நடத்துவதில் ஈடுபட்டுள்ளனர். போர் முனை எப்படி வெளி உலகிற்கு மூடி மறைக்கப் பட்டதோ அதே போல் முகாம் நிலைகளும் வெளி உலகிற்கு மூடி மறைக்கப் படுகிறது. அங்கு போர் வேறு ஒரு வடிவத்தில் நடக்கிறது.

காணொளி: பிபிசி வன்னி முகாம்களின் கொடுமையை திரிபு படுத்துகிறது


சனல்-4 தொலைக்காட்சி வன்னி முகாமில் நடக்கும் அவலங்களை வெளிக் கொண்டு வந்து உலகையே உலுக்கியது. இதனால் சிலர் பி.பி.சி தொலைக் காட்சி யைத் தாக்கியும் பேசினர். பின்னர் சனல்-4 தொலைக்காட்சிக்கு பதிலளிக்க பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவருக்கு பி.பி.சி தொலைக் காட்சி களம் அமைத்துக் கொடுத்தது. அதில் அவர் தமிழர்கள் சரித்திரம் இலங்கையில் முடிந்துவிட்டதென்றார்.

இப்போது பி.பி.சி தொலைக் காட்சி தனது பங்கிற்கு வன்னி முகாம்களில் இரகசியமாக ஒளி பதிவு செய்யப்பட்ட ஒரு காணொளிப் பதிவை ஒலி பரப்பி அதில் உள்ள மிக மோசமான நிலைமையை புரிந்து கொள்ளாமல் பி.பி.சி தொலைக் காட்சியின் செய்தியாளர் "It doesnt look that bad to me." என்று இலங்கை அரசிற்கு வக்காலாத்து வாங்கினார். அதிக உயரம் கூட இல்லாத முகாம், நிலமெங்கும் சேறு. ஒரு காற்றடித்தால் பறந்துவிடும் கட்டமைப்பு. அது அவருக்கு அந்தளவு மோசமில்லையாம். அத்துடன் நிற்கவில்லை இலங்கையின் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க ஒரு புத்தகத்தை காட்டி முகாம்களில் கல்வி கற்பித்தல் பரீட்சை நாடாத்துதல் போன்றவை நடக்கின்றன என்று புளுகியதையும் பி.பி.சி தொலைக் காட்சி ஒளிபரப்பியது. மெனிக் பாம் என்னும் முகாமை காட்சிப் பொருளாக வைத்து அதை வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்குக் காட்டி இலங்கை அரசு ஏமாற்றுவதை பி.பி.சி தொலைக் காட்சியும் செய்கிறது.

வழமையாக இப்படிப்பட்டவற்றை ஒளிபரப்பும் போது இருதரப்பு நியாயங்களைக் கேட்கும் பி.பி.சி தொலைக் காட்சி இதில் சிங்களத் தரப்பில் பேச இலங்கையின் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்கவை அனுமதித்தது ஆனால் தமிழர்தரப்பில் பேச எவரையும் அழைக்கவில்லை.

தட்டிக் கேட்க ஆளில்லாமல் இலங்கையின் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க சண்டப் பிரசண்டனாகி சனல்-4 தொலைக்காட்சியை வெளுத்து வாங்கினார்.

BBC இன் கன்றாவியை இங்கு காணலாம்:

http://www.youtube.com/watch?v=eGjVfwEgnt0



Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...