
இலங்கையில் போர் முடிந்துவிட்டது, பயங்கரவாதம் ஒழிக்கப் பட்டு விட்டது இனி அமைதிதான் இனி இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாணவேண்டியதுதான். உல்லாசப் பிரயாணிகள் வரலாம், இலங்கையில் முதலீடு செய்யலாம் கிழக்கில் உதயம் வடக்கில் வசந்தம் இப்படித்தான் செய்திகளை இப்போது பார்க்கிறோம்.
சில நாடுகள் போர்தான் முடிந்துள்ளது இனப் பிரச்சனை தீர்க்கப் படவேண்டும் என்று சொல்கின்றன. இனப் பிரச்சனை தீர்ந்தால்தான் தமது உலகமயமாக்குதலுக்கு ஏற்ற சூழல் இலங்கையில் ஏற்படும் என்று அவை கருதுகின்றன. அவரிகளின் அக்கறை தமிழர் நலன் சார்ந்ததல்ல. தமது வர்த்தகங்களை ஒழுங்காக மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்த அவை விரும்புகின்றன. அமெரிக்காவின் ஒபாமா ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் போது உலக ஒழுங்கை நிலை நாட்ட அமெரிக்காவல் மட்டும் தனித்து செயற்பட முடியாது மற்ற நாடுகளும் அதற்குத் துணைபோகவேண்டும் என்று அறை கூவல் விடுத்தார். அவர் அங்கு சொன்னதன் தாற்பரியம் அமெரிக்கா தனித்து பன்னாட்டுக் காவற்துறையினர் என்ற பணியாற்றி உலகமயமாக்கலுக்கான சூழலை ஏற்படுத்த மற்றநாடுகள் அமெரிக்கா சிரமப் பட்டு ஏற்படுத்திய சூழலில் வர்த்தகச் சுரண்டலை மேற்கொள்ளுவது முறையல்ல என்பது தான்.
இலங்கையில் போர் முடிந்து விட்டது ஆனால் அமைதி திரும்பவில்லை. இனி அமைதி கெடலாம் என்று எண்ணும் நாடுகள் இலங்கையில் இனப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு இலங்கையை உலகமயமாக்கலுக்கு உகந்த நாடாக மாற்ற வேண்டுகின்றன.
இலங்கைப் பேரினவாதிகள் இலங்கையில் இனப் பிரச்சனை என்று ஒன்று இல்லை அதைப் பற்றிக் கதைக்கத் தேவையில்லை என்று சொல்கின்றனர்.
இலங்கையின் மூன்று இலட்சம் மக்கள் முகாம்களில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப் பட்டிருப்பதை மனித நேய அமைப்புக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் சில நாடுகள் அதிக அக்கறை காட்டுகின்றன. அல்லாவிடில் தமது மனித நேய முகமூடி கிழிக்கப் பட்டு விடும் என்று இவை அஞ்சுகின்றன. அமெரிக்கா இதில் தனி அக்கறை காட்டுவது இதற்க்காகத்தான்.
ஆனால் ஆரிய சிங்களக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இன அழிப்புப் போரின் ஒரு பகுதியே இந்த முகாம்கள். அவர்களை இலகுவில் வெளியில் விடும் எண்ணம் அதற்கு இல்லை. ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் இந்த முகாம்களை நடத்துவதில் ஈடுபட்டுள்ளனர். போர் முனை எப்படி வெளி உலகிற்கு மூடி மறைக்கப் பட்டதோ அதே போல் முகாம் நிலைகளும் வெளி உலகிற்கு மூடி மறைக்கப் படுகிறது. அங்கு போர் வேறு ஒரு வடிவத்தில் நடக்கிறது.
No comments:
Post a Comment