Friday 25 September 2009

முகாமுக்குள் முகாம்கள்


ஒரு நாட்டில் மக்களாட்சி செவ்வனவே நடை பெற வேண்டுமாயின் அந்நாட்டில்:
  1. சட்டவாக்கற்துறை: பாராளமன்றம் போன்றவை
  2. நீதித்துறை
  3. நிர்வாகத்துறை
  4. ஊடகத்துறை
ஆகியன ஒழுங்காக செயலாற்ற வேண்டும். இவற்றை மக்களாட்சியின் நாலு தூண்கள் என்பர்.

இலங்கையின் அரசியலமைப்பும், அதன் கட்சி அரசியலும், அரசியற் கட்சிக்குள் அதன் உறுப்பினர்களுக்கு சுதந்திரமின்மையும் இலங்கயின் சட்டவாக்கற் துறையான பாராளமன்றம் ஆட்சியிலுள்ள கட்சிக்கு கட்டுப் பட்டதாக அமைகிறது ஆட்சியில் உள்ள கட்சி தனி ஒருவரின் அல்லது அவரின் குடும்ப அதிகாரத்துக்குள் அடங்குகிறது.

இலங்கையின் நீதித்துறைக்கு பாராளமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு வியாக்கியானம் அளிக்கும் அதிகாரம் உண்டு. பாராளமன்றம் கட்சி அரசியலுக்கு ஏற்றவகையில் அல்லது கட்சிக்கு ஏற்றவகையில் சட்டங்களை இயற்றும். தற்போது உள்ள அரசியலமைப்புச் சட்டம் முன்னாள் இலங்கை அதிபர் ஜே ஆர் ஜெயவர்த்தனேக்கு ஏற்ப இயற்றப்பட்டது என்று கூறுவார்கள்.

இலங்கையின் நிர்வாகத்துறை இலங்கை குடியரசுத்தலைவர் அவரின் கீழ் செயற்படும் மந்திரிகள் அவர்களின் கீழ் செயற்படும் அதிகாரிகள் என்றபடி அமையும். மொத்தத்தில் நிர்வாகத்துறை ஒருவருக்கு கட்டுப் பட்டதாக அமைகிறது.

இலங்கையின் ஊடகத்துறை பலத்த கட்டுப் பாட்டுக்கும் பயமுறுத்தலுக்கும் உள்ளாகி விட்டது.

ஆக மொத்தத்தில் இலங்கையில் மக்களாட்சியே இல்லை என்றே சொல்ல வேண்டும். இலங்கை ஒரு தனிநபரினதும் அவரது குடும்பத்தினரதும் கட்டுப் பாட்டுக்குள் தன்னை அறியாமலே சென்று கொண்டிருக்கிறது.

இலங்கை மக்கள் பலருக்கு இப்போது பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்ற போதை மருந்து வெற்றிகரமாக ஊட்டப் பட்டு விட்டது. முழு இலங்கையுமே ஒரு முகாமாக மாறிவருகிறது.

இதன் விளைவை இனி வருங்காலங்களில் நாம் உணரலாம். மாற்றுக் கருத்து மிரட்டப் பட்டு இல்லாமல் செய்யப் பட்டது போல் மாற்று அரசியல் கட்சிகளுக்கும் இனி ஆபத்து ஏற்படும். இதன் விளைவாக சிங்களவர்கள் மத்தியில் பாரிய கலவரங்கள் நிலக்கீழ் இயக்கங்கள் உருவாகும்.

1972இல் சிங்களவர்கள் மத்தியில் கிளர்ச்சி ஏற்பட்டு பல சிங்கள மக்கள் நீதிக்கு புறம்பான முறையில் கொல்லப் பட்ட போது சுதந்திரன் என்னும் ஒரு பத்திரிகையின் ஒரு ஆசிரியத் தலையங்கம் "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்று இருந்தது.

1 comment:

venkat said...

இதன் விளைவை இனி வருங்காலங்களில் நாம் உணரலாம். மாற்றுக் கருத்து மிரட்டப் பட்டு இல்லாமல் செய்யப் பட்டது போல் மாற்று அரசியல் கட்சிகளுக்கும் இனி ஆபத்து ஏற்படும். இதன் விளைவாக சிங்களவர்கள் மத்தியில் பாரிய கலவரங்கள் நிலக்கீழ் இயக்கங்கள் உருவாகும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...