Thursday, 24 September 2009

காணொளி: பிபிசி வன்னி முகாம்களின் கொடுமையை திரிபு படுத்துகிறது


சனல்-4 தொலைக்காட்சி வன்னி முகாமில் நடக்கும் அவலங்களை வெளிக் கொண்டு வந்து உலகையே உலுக்கியது. இதனால் சிலர் பி.பி.சி தொலைக் காட்சி யைத் தாக்கியும் பேசினர். பின்னர் சனல்-4 தொலைக்காட்சிக்கு பதிலளிக்க பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவருக்கு பி.பி.சி தொலைக் காட்சி களம் அமைத்துக் கொடுத்தது. அதில் அவர் தமிழர்கள் சரித்திரம் இலங்கையில் முடிந்துவிட்டதென்றார்.

இப்போது பி.பி.சி தொலைக் காட்சி தனது பங்கிற்கு வன்னி முகாம்களில் இரகசியமாக ஒளி பதிவு செய்யப்பட்ட ஒரு காணொளிப் பதிவை ஒலி பரப்பி அதில் உள்ள மிக மோசமான நிலைமையை புரிந்து கொள்ளாமல் பி.பி.சி தொலைக் காட்சியின் செய்தியாளர் "It doesnt look that bad to me." என்று இலங்கை அரசிற்கு வக்காலாத்து வாங்கினார். அதிக உயரம் கூட இல்லாத முகாம், நிலமெங்கும் சேறு. ஒரு காற்றடித்தால் பறந்துவிடும் கட்டமைப்பு. அது அவருக்கு அந்தளவு மோசமில்லையாம். அத்துடன் நிற்கவில்லை இலங்கையின் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க ஒரு புத்தகத்தை காட்டி முகாம்களில் கல்வி கற்பித்தல் பரீட்சை நாடாத்துதல் போன்றவை நடக்கின்றன என்று புளுகியதையும் பி.பி.சி தொலைக் காட்சி ஒளிபரப்பியது. மெனிக் பாம் என்னும் முகாமை காட்சிப் பொருளாக வைத்து அதை வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்குக் காட்டி இலங்கை அரசு ஏமாற்றுவதை பி.பி.சி தொலைக் காட்சியும் செய்கிறது.

வழமையாக இப்படிப்பட்டவற்றை ஒளிபரப்பும் போது இருதரப்பு நியாயங்களைக் கேட்கும் பி.பி.சி தொலைக் காட்சி இதில் சிங்களத் தரப்பில் பேச இலங்கையின் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்கவை அனுமதித்தது ஆனால் தமிழர்தரப்பில் பேச எவரையும் அழைக்கவில்லை.

தட்டிக் கேட்க ஆளில்லாமல் இலங்கையின் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க சண்டப் பிரசண்டனாகி சனல்-4 தொலைக்காட்சியை வெளுத்து வாங்கினார்.

BBC இன் கன்றாவியை இங்கு காணலாம்:

http://www.youtube.com/watch?v=eGjVfwEgnt0



1 comment:

மா.குருபரன் said...

ம்... சபிக்கப்பட்ட இனமோ நாம்!!!!!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...