Saturday, 25 July 2009

1983 இலங்கை இனக் கொலை இந்திரா காந்திக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது



1983-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் நாள் இலங்கையில் இனக் கலவரம் என்ற போர்வையில் இடம்பெற்ற இனக் கொலையைப் பற்றி ஆராய்ந்த பலரும் ஒரு கருத்தை தெளிவாகக் கூறினர்: இது திட்டமிட்டு நடத்தப் பட்டது.

இக்கலவரம் தொடர்பான கதைகள் 1981இல் இருந்தே ஆரம்பிக்கப் பட்டுவிட்டது. தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பீக்க வேண்டும். கொழும்பில் அவர்கள் சொத்துக்களை அழித்து அவர்களை அங்கிருந்து விரட்டி அடிக்க வேண்டும். இப்படியாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கருத்து 1981இல் இருந்து பரவி வந்தது.

திட்டமிட்டவர்கள்: சிங்களப் பேரின வாதிகள்.
சம்பந்தப் பட்டவரகள்: அரசியல் கட்சிகள், காவல்துறையினர், அரச படையினர், காடையர்கள்.

ஜேவிபியின் பங்கு
அரசாங்கம் தமிழர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கத் திட்டமிட்டது என்றும் கூறப்பட்டத்து. அதேவேளை தமது போராட்டத்தை நசுக்கிய இந்தியாவைப் பழிவாங்க ஜேவிபி திட்டமிட்டதாம். அத்துடன் தமிழ் முதலாளிகளுகு எதிரான தனது நடவடிக்கையையும் எடுக்கத் திட்டமிட்டதாம். விளைவு கொழும்பில் இருந்த பல தமிழரல்லாத வட இந்தியரும் அவர்களது சொத்துக்களும் வர்த்தக நிலையங்களும் தாக்கப் பட்டன. ஹைட்ராமணி, குண்டன்மால்ஸ், ஜffர்ஜீஸ் போன்ற தமிழர் அல்லாதவர்களின் நிறுவனங்கள் தாக்கியழிக்கப் பட்டன. இந்த இனக் கொலை ஒருவாரமாக நடை பெற்றது.

இந்தியாவிற்கு தெரியாதா?
இந்தியாவின் உளவுத்துறை இலங்கையில் நன்கு செயற்பட்டு வந்தது. இதற்கான சான்று:
இலங்கையில் ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியினர் செய்த ஆயுதப் புரட்சியைஅடக்கியவிதம். இந்திரா காந்தி அம்மையார் மக்கள் விடுதலை முன்னணியின் நடவடிக்கைகளை தனது உளவுத்துறை மூலம் நன்கு கவனித்து வந்தார். இலங்கையிலும் பார்க்க இந்தியா அதன் நடவடிக்கைகள் பற்றி நன்கு அறிந்திருந்தது. மக்கள் விடுதலை முன்னணி ஆயுதப் புரட்சி தொடங்குவதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக இந்தியா வெளிநாட்டமைச்சு தமது கடற்படைக் கப்பல் ஒன்று உங்கள் நாட்டுக்கு அண்மையில் பழுதடைந்து விட்டது உங்கள் கொழும்புத் துறை முகத்தில் நுழைய அனுமதி வேண்டும் என்று இலங்கை வெளிநாட்டமைச்சிடம் அனுமதி கேட்டுப் பெற்று கொழும்பில் ஒரு கடற்படைக் கப்பல் வந்துவிட்டது. அதே பாணியில் மறுநாள் இன்னொரு கப்பலும் வந்துவிட்டது. இரு கப்பல்கள் நிறைய கூர்க்காப் படையினர் தயார் நிலையில்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதப் புரட்சி தொடங்கியது இலங்கை அதிகாரிகள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநயக்காவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவர் சொகுசுப் படமாளிகை ஒன்றில் ஆங்கிலப் படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இதற்குள் நாட்டின் சிலபாகங்கள் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள். உதவிக்கு சிறிமாவோ இந்திரா காந்தியைத் தொடர்பு கொண்டார். இந்திரா அம்மையார் சொன்னார் "ஆம் பிரச்சனை இல்லை எங்கள் இரு கப்பல்கள் நிறைய வீரர்கள் கொழும்புத் துறைமுகத்தில் நிற்கிறார்கள்." பின்னர் இந்தியாவிலிருந்து ஒரு தொகை உலங்கு வானூர்திகளும் இலங்கை வந்தன. ஜேவிபியின் புரட்சி அடக்கப் பட்டது.

இப்படிப்பட்ட இந்தியாவிற்கு இலங்கையில் பாரிய இனக்கொலைக்கான திட்டம் தீட்டப் பட்டது தெரியாமல் இருந்திருக்குமா?

அப்போது இலங்கை தொடர்பாக இந்தியாவின் பலம் என்ன?
பங்களாதேசப் போரின் போது இலங்கையூடாக பாக்கிஸ்தானிய விமானங்கள் கட்டுநாயக்காவிமன நிலையத்தைப் பாவித்து பறப்புக்களின் ஈடுபட்டன. இது தொடர்பாக இந்தியாவில் சர்ச்சை எழுந்தபாது அப்போதைய பாதுகாபபு அமைச்சர் ஜெகஜீவன் ராம் கூறியது: இலங்கை எமக்கு எதிராக செயற்படுமானால் ஒன்பது நிமிடங்களில் எம்மால் இலங்கையை எமது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முடியும். அப்படிப் பட்ட இந்தியா ஒருவாரமாக நடந்த இனக் கொலையை தடுக்க முடியாமற் போனது ஏன்?

எங்க ஏரியா உள்ளே வராதே! This is my backyard.
1983-ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தைத் தொடர்ந்து இந்திரா காந்தி அம்மையார் தான் செல்லும் நாடுகளில் எல்லாம் இலங்கை இனப் பிரச்சனையப் பற்றி கதைத்து வந்தார். கதைத்து அவர் வலியுறுத்தியது: இலங்கையின் இனப்பிரச்சனை எனது நாட்டில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எனது நாட்டின் பாது காப்புடனும் பிராந்திய ஒருமைப் பாட்டுடனும் சம்பந்தப் பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் உரிமை எனக்கு உண்டு என்பதை வலியுறுத்தி அதைப்பல நாடுகளையும் ஏற்றுக் கொள்ளச் செய்தார். இலங்கையை தனது பிடிக்குள் இறுக்கினார் இந்திரா அம்மையார். இலங்கையைத் தனது பிடிக்குள் கொண்டுவருவதற்று இனக் கொலை அனுமதிக்கப் பட்டதா?

Friday, 24 July 2009

கனிமோழி இலங்கை செல்லத் தேவையில்லையா?



முதல்வர் கலைஞரின் வாரிசும் இலங்கத்தமிழர் விவகாரங்களின் அக்கறை உள்ளவருமான கனிமொழி அவர்கள் இலங்கை சென்று வன்னி முகாம்களில் உள்ள தமிழர்களின் அவலத்தைப் பார்வையிடுவதாக இருந்தது. இவரை அங்கு அனுப்புவதன் நோக்கம் அவர் அங்கு சென்றபின் இலங்கை அரசிற்க்கு அதிக
பணம்தேவை என்று அறிக்கை அவரைக் கொண்டு விடச்செய்து இதைச் சாட்டாகவைத்து இலங்கைக்கு ஏற்கனவே உறுதியளித்த 500கோடியிலும் கூடுதலான கடனுதவியை இந்தியா வழங்கவிருப்பதாக சொல்லப் பட்டது. ஆனால் இப்போது இந்தியா ஹிலரி கிளிண்டனுடன் கதைத்து சர்வதேச் நாணய(மில்லாத) நிதியம் கேட்டதிலும் அதிக உதவி பல மனித உரிமை அமைப்புகளின் ஆட்சேபங்களுக்கு மத்தியில் செய்யவிருப்பதாக அறியப் படுகிறது. எனவே கனிமொழி வன்னி செல்ல மாட்டாரா?

செங்கல்பட்டு அகதி முகாமில் 60இற்கு மேற்பட்ட தமிழர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.


அமெரிக்கா கியூபாவில் நடாத்தும் குவாண்டானாமோ முகாமை ஒத்த 1993இல் அமைக்கப் பட்ட செங்கல்பட்டு அகதி முகாமில் இலங்கையைச் சேர்ந்த 60 தமிழர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். இதற்கு முன்பும் தமக்கு இழைக்கப் படும் அநீதிகளை எதிர்த்து 20தடவைகள் இவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டும் எந்த பயனும் கிடைக்கவில்லை. மாறாக இவர்களது நிலைமை மோசமடந்து கொண்டே போகிறது. விடுதலைப் புலிகளுக்கு உதவினாரகள் என்ற சந்தேகத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இவர்கள் மீது எந்த விதமான குற்றச் சாட்டுகளும் எந்த நீதிமன்றிலும் முன்வைக்கப்படவில்லை. இவர்களில் பலர் மனநிலையும் உடல் நிலையும் பாதிக்கப் பட்டுள்ளனர். 25 அறைகளின் 86பேர் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். இதற்கு முன்னர் செய்த உண்ணாவிரதப் பேராட்டங்கள் பயனளிக்காத நிலையில் இவர்கள் இப்போது சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இம்முறை அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்ததை நாடாத்தப் போவதில்லை என்றும் அரசியல் வாதிகளுடன் மட்டும் பேசப் போவதாகவும் இவர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை இனக்கொலை- ஐநாவைச் சாடுகிறார் பேராசிரியர் Noam Chomsky




ஐக்கிய நாடுகள் சபை தனது பாதுகாக்கும் பொறுப்பை இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கொடூரங்களில் நிறைவேற்றத் தவறியது என்று போருக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பேராசிரியர் Noam Chomsky அவர்கள் கூறியுள்ளார். மேற்குலக நாடுகள் இதில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

He said the Western powers just didn't have enough interest, although something "could have been done." He analogized it to Rwanda, both the genocide in 1994 and the lead-up, including with "structural adjustment," in the 1970s.

Chomsky went on, regarding the UK, to say that former prime minister Tony Blair may have been involved in Israel's deal with British Gas for natural gas off the coast of the Gaza Strip. It's reminiscent of Sri Lanka's move to redeliniate its sea claims, and the little reported finding of oil and gas off the coast of North Sri Lanka. Does that as some say explain the military assault? Time will tell.

Noam Chomsky இன் கருத்தின் காணொளியை இங்கு காணலாம்:here

Thursday, 23 July 2009

விடுதலைப் புலிகளின் தலைவர் பத்மநாதனின் பேட்டி காணொளியில்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் செ. பத்மநாதன் அவர்கள் பிரித்தானியத் தொலைக் காட்சி சனல்-4 இற்கு இனங்காணப் படாத இடத்திலிருந்து தனது உருவத்தை முழுமையாகக் கட்டாமல் வழங்கிய பேட்டி: அவர் இலங்கை இடைத்தங்கல் முகாம்கள் உண்மையில் வதை முகாம்கள் என்றும் இலங்கை அதிபர் பிரச்சனையைத் தீர்க்கும் உண்மையான தலைவராக இருந்தால் அவர் சரியான தீர்வை முன் வைக்க வேண்டும் என்றும் அப்படி ஒரு எண்ணம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார். இவரது பேட்டி பற்றிக் கருத்து தெரிவித்த பிரித்தானியாவிற்கான இலங்கத் தூதுவர் இலங்கையில் விடுதலைப் புலிகள் என்று ஒரு இயக்கம் இல்லை என்றும் அது துடைத்தழிக்கப் பட்டு விட்டதாகவும் கூறினார்.

Wednesday, 22 July 2009

நெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு


கொட்டாஞ்சேனைக் கோவிலிலே
வசந்த மண்டப வாசலிலே
பக்தியோடு நின்றேனே
பாவை ஒருத்தி வந்தாளே
ஓரக் கண்ணால் பார்த்தாளே
என்னை இழந்தேனே – நான்
காதலில் விழுந்தேனே.

சோதனைச் சாவடி யொன்றிலே
கால்கடுக்க நின்றேனே
பின்னால் வந்து நின்றாளே
உரசி உரசி அசைந்தாளே
ஒத்தடங்கள் தந்தாளே
எப்படிச் சொல்வேனோ-சுகம்
என்ன வென்பேனொ

யாழ் செல்லும் விமானத்திலே
அருகில் வந்து அமர்ந்தாளே
அறிமுகமாய் ஆனோமே
ஒரு முகமாய் போனோமே
எப்படி மறப்பேனோ – அதை
என்றும் மறவேனே.

வெள்ளவத்தைக் கடலருகே
தாழை மர நிழலடியே
கொஞ்சிக் குலவி மகிழ்ந்தோமே
எம்மை மறந்து இருந்தோமே
சுகம் பல கண்டோமே
சுவை பல கொண்டோமே

பம்பலப்பிட்டி சந்தியிலே
பஸ் தரிப்பின் பின்னாலே
காத்து காத்து நின்றேனே
கன்னியங்கு வந்தாளே
கையில் ஒரு கவருடனே - தன்
கல்யாண அழைப்பிதழ் என்றாளே – என்
நெஞ்சில் வெடித்த குண்டு கிளமோரே!
அடி இது முறையோ அடி இது தகுமோ

என் குடும்பந்தான்! எனக்கு மட்டும்தான்!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...