Friday, 24 July 2009
செங்கல்பட்டு அகதி முகாமில் 60இற்கு மேற்பட்ட தமிழர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.
அமெரிக்கா கியூபாவில் நடாத்தும் குவாண்டானாமோ முகாமை ஒத்த 1993இல் அமைக்கப் பட்ட செங்கல்பட்டு அகதி முகாமில் இலங்கையைச் சேர்ந்த 60 தமிழர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். இதற்கு முன்பும் தமக்கு இழைக்கப் படும் அநீதிகளை எதிர்த்து 20தடவைகள் இவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டும் எந்த பயனும் கிடைக்கவில்லை. மாறாக இவர்களது நிலைமை மோசமடந்து கொண்டே போகிறது. விடுதலைப் புலிகளுக்கு உதவினாரகள் என்ற சந்தேகத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இவர்கள் மீது எந்த விதமான குற்றச் சாட்டுகளும் எந்த நீதிமன்றிலும் முன்வைக்கப்படவில்லை. இவர்களில் பலர் மனநிலையும் உடல் நிலையும் பாதிக்கப் பட்டுள்ளனர். 25 அறைகளின் 86பேர் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். இதற்கு முன்னர் செய்த உண்ணாவிரதப் பேராட்டங்கள் பயனளிக்காத நிலையில் இவர்கள் இப்போது சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இம்முறை அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்ததை நாடாத்தப் போவதில்லை என்றும் அரசியல் வாதிகளுடன் மட்டும் பேசப் போவதாகவும் இவர்கள் அறிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
1 comment:
கண் நிறைந்த காதலன் கரம் பிடிக்க வாருவான் என்று காத்திருந்த கன்னியிவள் . வந்ததோர் செய்திதனில் உயிர் உருகி போகுதே
ஒரு முறைய இருமுறையா இருபதுமுறை தொற்றபிரகும் வேண்டுவதேன் உண்ணாவிரதம்
நிங்கள் வரும்போது என்னை அடையாளம் தெரியாதபடி அழகாய் வருவேன் என்றிர்களே , கண்ணே கலங்காதே இனி ஒரு தடவஜும சாப்பிடாமல் இருக்கேன் என்றோர் முறை சொன்ன சத்தியத்தை நம்பிநேனே ........
இப்போது என்ன அவசரம் உங்களுக்காக நான் உயிர் போகும் வரை கதிருபேனே ...
பிரகேன் எந்த சோதனை உங்களுக்கு
ஒ ......ஒ .......ஒ .............
நீங்கள் எனக்காகக்ககூட காத்திருப்பேன் ,,ஆனால் ....
ஈழம் இன்னும் கிடைக்க வில்லையே என்று பொறுமை இழந்திட்டீர்கலா
காத்திருக்க கஷ்டமாய் இருக்குதோ .....
என் உயிரே என் செல்வமே ...
உங்கள் இ ந்த என்னத்துக்காக நீங்கள் சாகும் வரை என்ன ..
மீண்டும் பெறந்து வந்தும் உண்ணவிரதம் ????
மீண்டும் நானும் பிறப்பேன் உங்களுக்காக நம் காதலுக்காக மட்டும் அல்ல நம் மண் ஈழ மண்ணுக்காக
Post a Comment