Thursday, 1 October 2009

இலங்கையில் அமெரிக்காவின் அவிற் பாகம்


இலங்கைப் போரில் நடந்த சகல வரம்பு மீறல்கள் தடை செய்யப்பட்ட ஆயுதப் பாவனைகள் இறுதிப் போரில் காயப்பட்ட மக்கள் உயிருடன் புதைக்கப் பட்டமை தொடர்பான ஒளிப்பதிவுகளை அமெரிக்கா செய்மதி மூலம் பதிவு செய்து வைத்துள்ளது அது தருணம் வரும் போது அவற்றைப் பவிக்கும் என்று ஏற்கனவே இங்கு பதியப்பட்டுள்ளது அதை காண இங்கு சொடுக்கவும்

இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான அமெரிக்க அரசாங்க அறிக்கை தயாரிக்கப் பட்டுவிட்டது. அவ்வறிக்கையை அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப் படுமுன் இலங்கையில் இருந்து ஒரு உயர்மட்டக் குழு அமெரிக்கா சென்று அமெரிக்க நடவடிக்கைக்கு எதிராக களமிறங்கி விட்டது. இதனால் அறிக்கை அமெரிக்கக் காங்கிரசிற்கு சமர்பிப்பது இடை நிறுத்தப் பட்டுள்ளது.

போரில் இலங்கைக்கு உதவிய இந்தியா, சீனா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்கு இலங்கையில் உரிய பாகங்கள் வழங்கப் பட்டுவிட்டன. சீனாவிற்கு அம்பாந்தோட்டை, நுரைச் சோலை போனறவையும் இந்தியாவிற்கு திருகோணமலை, மன்னார், காங்கேசந்துறை போன்றவையும் பாக்கிஸ்த்தனிற்கு திரைமறைவிலும் அவரவர்களுக்கு உரிய அவிர்ப் பாகங்கள் வழங்கப் பட்டுவிட்டன. இப்போது அமெரிக்காவின் பங்கு எங்கே?

மாபலி என்ற மன்னன் பெரிய யாகத்தைச் செய்தான் தான் விரும்பியவற்றை அடைய. அங்கு தானம் கேட்டு வந்தவர்க்கெல்லாம் அவரவர்களுக்கு உரியபடி அவிர்ப்பாகங்களை வழங்கினான். அவன் யாகத்தை அழிக்க திருமால் திருவுளம்(?) கொண்டாராம். அதற்காக வாமன அவதாரம் எடுத்தார்.
வாமன அவதாரம் எடுத்த நாராயணன் மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் தானம் கேட்க, குள்ளமான உருவத்துடன் வந்திருப்பது பகவான் என்று அறியாத மகாபலி மன்னன், “மூன்றடி மண் தானே… தாராளமாக எடுத்துக்கொள் என்று சொல்ல…” பகவான் விஷ்வ ரூபம் எடுத்து ஒரு அடியால் பூமியையும் பாதாள லோகத்தையும் மறு அடியால் ஆகாயத்தையும் அளந்து மூன்றாவது அடி எங்கே வைக்க என்று கேட்க, திகைத்த மகாபலி மன்னன் “என் தலையில் வைக்கவும்…” என்றானாம். அவன் தலைவிதி அப்படி. நாராயணன் அவன் தலையில் கால் வைத்து அழுத்தி அவனைக் கொன்றாராம்.

இதுபோலத்தான் இப்போது அமெரிக்கா தனது பங்காக போர்குற்றங்களைச் சாட்டாக வைத்து இலங்கையைத் தனது பிடிக்குள் கொண்டுவரப் போகிறது. அது மற்றப் பங்காளர்களுக்கு பேரிடியாக அமையப் போகிறது.

Wednesday, 30 September 2009

காணொளி: இந்தியாவை கடுமையாகச் சாடினார் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்.

இலண்டனில் நடந்த பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட திருமாவளவன் BJP ஆட்சியில் இருந்திருந்தாலும் தமிழர்களுக்கு எதிராகத்தான் நடந்து கொண்டிருந்திருக்கும் என்றுகூறி இத்தாலிச் சனியாளின் கட்சிக்கு மறைமுகமாக வக்காலாத்து வாங்கினார். ஆனால் இந்தியா தமிழர்களுக்கு விரோதமாக நடந்து கொண்டதை ஒத்துக் கொண்டார். சர்வதேசமும் தமிழர்களுக்கு எதிராக நடந்தது என்றார். அதே கூட்டத்தில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் அரியநெந்திரன் ஜெயானந்தமூர்த்தி இந்தியாவைக் கடுமையாகச் சாடினார்:

Tuesday, 29 September 2009

I need a new hand to hold forever.


Pass, pass, pass, you dark clouds
Let the full moon shine on me
Blow, blow, blow, sweet breeze
Blow away her bitter memories
Let it be the thing of the past.
I need a new life as I need fresh air


Play, play, play, a new tune
I am fed up of the old one
Dance, dance, dance, with new moves
I am so fed up dancing with her
So unfaithful, so selfish and so deceitful
Let it be the thing of the past
I need a new life as I need a new tune.

Walk, walk, walk, a new way.
I so fed up of the old way
She left me in the middle of nowhere
So grievously I left all alone
Let it be the thing of the past
I need a new hand to hold forever.

இந்தியாவை இலங்கை மீண்டும் மிரட்டியதா?


இலங்கையில் போர் மும்முரமாக நடை பெற்றுக் கொண்டிருந்த வேளை போர்முனையில் எழுபதாயிரம் மக்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர்களை ஐநூறு புலிகள் தடுத்து வைத்திருப்பதாகாவும் இலங்கை அரசு பொய் கூறியது. ஆனால் செய்மதிப் படங்களை ஆதாரம் காட்டி ஐக்கிய நாடுகள சபை அதற்குள் இரண்டரை இலட்சம் பொதுமக்கள் இருப்பதாக கணக்கிட்ட தகவல் வெளிவந்தது. போர்முனையில் சகல நடவைக்கைகளையும் தனது செய்மதிகளூடாக அவதனித்துக் கொண்டிருந்த இந்தியா பதின் மூன்றாம் நாள் பாரதப் போரில் அஸ்வத்தாமனா இறந்தான் என்று துரோணாச்சாரியார் கேட்டபோது மௌனமாக இருந்து உண்மையை மறைத்த தருமரைப் போல் உண்மை தெரிந்தும் தெரியாதது போல் இருந்து அறுபதினாயிரம் அப்பாவித் தமிழர்களை கொன்று குவிக்க உதவியது.

போர் நடக்கும் போது போர் நிறுத்தம் போர் நிறுத்தம் என்று தமிழ்நாட்டில் இருந்து குரல் கொடுக்கப் பட்டபோது அதை ஏற்றுக் கொள்வது போல் இந்தியா பாசாங்கு செய்து இரு தமிழின விரோதிகளை இலங்கைக்கு போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த அனுப்பவது போல் நாடகமாடி தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கான நடவடிக்கைகளைத்தான் இந்தியா மேற் கொள்ளப் பட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு தேவை என்பது போல் இந்தியா போலியாகக் கூறிவந்தது. அதற்கு இலங்கையின் பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தீர்வு காணப் படவேண்டும் என்று இந்தியா புலம்பிவந்தது. அண்மையில் எகிப்தில் நடந்த அணிசேரா மாநாட்டின் போது இந்தியப் பிரதமரை சந்தித்த மஹிந்த ராஜபக்சே இனி இனப்பிரச்சனைத் தீர்வைப் பற்றிக் கதைக்கக் கூடாது என்று மிரட்டினாராம். அதைத் தொடர்ந்து இந்தியா இனப் பிரச்சனைத் தீர்வைப் பற்றிக் கதைப் பதை விட்டுவிட்டது.

இந்த மாதம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் டெல்லி சென்று முகாம்களில் அடைபட்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள் தொடர்பாகக் கதைத்ததின் பின் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இலங்கை அரசினரைச் சந்தித்து முகாமில் இருக்கும் மக்கள் தொடர்பாகக் கதைத்தாராம். டெல்லியில் இருந்து இலங்கைக்கு இது தொடர்பாக கடிதமும் சென்றது. ஆனால் நியூயோர்க்கில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்ததை தொடர்ந்து இந்தியா இலங்கையின் வன்னி முகாமில் சட்டவிரோதமாக அடைக்கப் பட்டிருக்கும் மக்கள் தொடர்பாகக் கதைப்பதை நிறுத்திக் கொண்டது. இலங்கை வெளிவிகார அமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சரை மிரட்டினாரா?

Monday, 28 September 2009

முள்ளிவாய்க்கால மர்மங்கள் விரைவில் வெளிவரும் என்கிறார் ஜெயானந்தமூர்த்தி (பா.உ)


முள்ளிவாய்க்காலில் நடந்த மர்மங்கள் விரைவில் வெளிவரும் என்கிறார் மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் திரு அரியனெந்திரன் தயானந்தமூர்த்தி. அவை வெளிவரும்போது தலைவர் பிரபாகரன் என்னவிதமான தந்திரோபாயங்களை இறுதியில் செய்தார் என்ற மர்மமும் வெளிவரும் என்றார் மேலு அவர். அவர் இலண்டனில் நிகழ்த்திய உரையின் காணொளி:



Sunday, 27 September 2009

காணொளி: இலண்டனில் திருமாவளவன்


இலண்டனில் நடந்த நிகழ்வொன்றில் விடுதலைச் சிறுத்தைக்ளின் தலைவரும் இந்திய பாராளமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்துவருபவருமான தோழர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வைப் புறக்கணிக்கும் படி இலண்டனில் ஒரு குறுந்தகவல் உலாவியது.


காணொளி: இலண்டனில் தமிழருவி மணியன்



இலண்டனில் நடந்த நிகழ்வொன்றில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனும் தமிழருவி மணியனும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இருவருமே நிகழ்ச்சிக்குது தாமதமாகவே வந்தாரகள். ஈழத் தமிழர் பிரச்சனைக்காக பல ஆண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முன்னாள் ஐரோப்பியப் பாராளமன்ற உறுப்பினர் றொபெர்ட் இவன்ஸ் அவர்கள் நிகழ்ச்சி மிகத்தாமதமாக ஆரம்பித்ததால் சற்று மனம் குழம்பி நிகழ்ச்சி GMT நேரப்படி நடக்காமல் LTT (London Tamil Time) நேரப்படி நடக்கிறது என்று சொன்னார்.

தமிழருவி மணியனும் திருமாவளவனும் தமது உரையில் தமிழ்நாட்டு அரசியலை இழுக்கத் தவறவில்லை. திருமாவளவன் ஜெயலலிதாவையும் மணியன் கருணாநிதியையும் தாக்குவதில் கணிசமான அளவு நேரத்தைச் செலவிட்டனர்.

தமிழருவி மணியனின் உரை:

திருமாவளவனின் உரை தொடரும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...