கலைஞர் ஐய்யா உங்கள் டெசோவில் ஈழம் என்ற வார்த்தை பாவிக்கக் கூடாது என்று நீங்கள் சொக்கத் தங்கம் என்று வர்ணித்த சோனியாவின் அரசு கூறிவிட்டது. ஈழத்தை எடுத்து விட்டு உங்கள் மாநாட்டை நடந்துங்கள். இனி உங்கள் மாநாட்டை டசோ மாநாடு என்று அழைப்போம்.
உங்கள் ஊது குழல் சுப வீர்பாண்டியன் டெசோ மாநாடு மன்னிக்கவும் டசோ மாநாடு தொடங்கும் என்று அறிவித்ததிலிருந்து எல்லோரும் ஈழத்தைப் பற்றிப் பேசாமல் கலைஞரைப் பற்றிப் பேசுகிறார்கள். கலைஞரைப்பற்றிப் பேசாமல் ஈழத்தைப் பற்றிப் பேசவும் என்றார். அப்போ கலைஞரைப்பற்றிப் பேச முடியாது....ஈழத்தைப் பற்றிப் பேச முடியாது....நாற்பது ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகள் சுருட்டுவது எப்படி என்பதைப் பற்றி ஆராய டசோ மாநாட்டை நடத்துங்கள்.
மருத்துவத் தேவைகளுக்காக இந்தியா வர விரும்பிய ஒரு வயது முதிந்த மூதாட்டியை இந்தியாவிற்குள் வரலாம் என்ற நுழைவு அனுமதியைக் கொடுத்து விட்டு அவர் சென்னை வந்து இறங்கியதும் அவரை நாற்காலியில் பல மணித்தியாலங்கள் காத்திருக்க வைத்து விட்டு உங்கள் மாநில ஆட்சியும் மத்திய ஆட்சியுமாமக இணைந்து செய்த சதி போல் உங்கள் டசோ மாநாட்டிற்கு வருபவர்களையும் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்து விட்டு உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.
பார்ப்பாரப் பயல் சுப்பிரமணிய சுவாமி மஹிந்த ராஜபகசவிற்கு இந்தியா விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டுமென்கிறான். இன்னொரு பார்ப்பாரப் பயல் சோ மஹிந்த ராஜபக்சவைப் பாராட்ட வேண்டுமென்கிறான். இந்த மிருக்கக் கூட்டம் வாழும் நாட்டை தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது. அதனால் தமிழ்நாட்டின் பெயரை மாற்றவேண்டும் என்று தீர்மானம் போட உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.
இப்போதைய நிலையில் ஈழம் பற்றிப் பேசத்தேவையில்லை ஈழத்தில் அல்லல்...... ஐயோ ஐயோ தப்பு தப்பு கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்.... இலங்கைத் தமிழ் மக்களின் துயரத்தைத் துடைக்கவும் அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும் என்ன செய்வது என்பதைப் பற்றி ஆராய மாநாடு என்றீர்கள். இது தொடர்பாக எத்தனை நிபுணர்களை நீங்கள் அழைத்துள்ளீர்கள் என்பதைத் தெரிவித்து விட்டு உங்கள் மாநாட்டை நடத்துங்கள்.
இலங்கையில் இறுதிப் போரின் போது உங்களை சிவ சங்கரமேனனும் எம் கே நாராயணசாமியும் சந்தித்து விட்டுக் கொழும்பு செல்வார்கள். அவர்கள் கொழும்பு சென்றவுடன் தமிழர்களுக்கு எதிரான போர் உக்கிரமடையும். இந்த இரு மலையாளிகலூம் என்னவெல்லாம் சொல்லி உங்களை மிரட்டினார்கள் என்பதை ஒன்றும் விடாமல் சொல்லிவிட்டு உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.
தியாகி முத்துக்குமரன் தற்கொடை செய்து இறந்து தனது உடலத்தை வைத்து ஈழப்பிரச்சனையை தமிழ்நாடு எங்கும் பரப்புரை செய்யும் படி எழுதி வைத்தான். அவனது கடைசி ஆசையை நிறைவேற்ற நீங்கள் போட்ட தடைகள் யாவற்றிற்கும் மன்னிப்புக் கேட்க டசோ மாநாட்டை நடத்துங்கள்.
இலங்கை இறுதிப் போரின் போது நீங்கள் உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்தி விட்டதாகச் சொன்னீர்கள். அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் உங்ககளைச் சந்தித்து தொடர்ந்தும் இலங்கையில் தமிழர்கள் மீது குண்டு வீச்சு நடக்கிறது என்றார்கள். அதற்கு நீங்கள் மழை விட்டு விட்டது இப்போது தூவானம் அடிக்கிறது என்றீர்கள். சென்ற சட்ட சபைத் தேர்தலில் உங்களுக்கு கிடைத்த படு தோல்வி தூவானம் மட்டுமே. மழை அடுத்த 2014 பாராளமன்றத் தேர்தலில்தான் பொழிய இருக்கிறது என்பத உணர்ந்து கொண்டு உங்கள் மாநாட்டை நடந்த்துங்கள்.
நீங்கள் டெசோ மாநாடு தொடங்க அதில் ஈழம் என்ற சொல்லே இருக்கக் கூடாது என்கின்றது. இந்திய மத்திய அரசு. அந்த அளவிற்கு உங்கள் மத்திய அரசுக்கு தமிழ் மக்கள் மீது காழ்ப்புணர்ச்சி வெளிநாடுகளில் வாழும் இந்தியக் கைக்கூலிகள் பலர் இந்திய ஒரு பிராந்திய வல்லரசு அதை ஈழத் தமிழ் மக்கள் அனுசரித்துப் போகவேண்டும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார்கள். உங்கள் மத்திய அரசின் முக மூடியை கிழிக்க இந்த டசோ மநாடு எங்களுக்கு உதவியது என்பதால் உங்களுக்கு நாங்கள் சொல்லும் நன்றியைப் பெற்றுக் கொண்டு உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.
டசோ மாநாட்டை இத்தாலியாளின் அரசு மட்டுமல்ல கன்னடத்தியின் அரசும் எதிர்க்கிறது. கன்னடத்தியும் ஈழத்தமிழர்களுக்கு எதிராளவளே என்று எமக்கு உங்கள் மாநாடு உணர்த்தியது என்ப்தால் நாம் உங்களுக்கு சொல்லும் நன்றியை பெற்றுக் கொண்டு உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.
இலங்கையில் சகல அரசியல் கட்சித் தலைவர்களும் உங்கள் டசோ மாநாட்டிற்கு வர மாட்டோம் என்று சொல்லிவிட்டனர். வைரமுத்து வருவாக..............சுப வீரபாண்டியன் வருவாக.....குஷ்பு வருவாக........கலா அக்கா வந்து சும்மா கிழி கிழி கிழி கிழி கிழி என்று கிழிப்பாகா......நமீதா வருவாக........மற்றும் உங்கள் மாநாட மயிலாட ஆட்டக் காரர்கள் அனைவரும் வருவாக.........இவர்களை வைத்துக் கொண்டு உங்கள் மாநாட்டை நடத்துங்கள்.
நீங்கள் உண்மையான தமிழ்த் தலைவர் என்றால் உங்கள் தலைவர் அண்ணாத்துரை ஒத்தி வைத்த திராவிட நாட்டுக் கோரிக்கையை உங்கள் கழக் கொள்கையாக மாற்ற ஒரு மாநாடு நடாத்துங்கள். அல்லது நீங்கள் ஒரு தெலுங்கர் தமிழ்நாட்டுக்கு வாழ வந்தவன். இப்போது ஆளுகின்றீர்கள் என்ற உண்மையை பகிரங்கப்படுத்துங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
4 comments:
பேசாம இதை கருநானிதிக்கு மெயில் பண்ணுங்க .. ஆனா அப்பாவும் அவர் திருந்த மாட்டார்
தியாகத் திருவிலக்குவின் அன்பு நண்பருக்கு
இப்படி ஒரு கடிதமா?
தமிழ் இனமே டாஸ்மாக் கடைக்கு அதிக
சப்ளை செய்!
Excellent
அன்புடையீர்.வணக்கம்.
தங்களது மேலான பதிவுகளை எனது மெயிலுக்கு அனுப்பித் தர இயலுமா?
வாழ்க வளமுடன்.
கொச்சி தேவதாஸ்
snrmani@rediffmail.com
Post a Comment