கருணாநிதி தனது அடுத்த நாடகத்திற்கு தயாராகி விட்டார். அவர் அண்மையில் இப்படித் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்:
- தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தேர்தல் முடிந்தபின் நிறைவேற்றுவதுதான் நியாயமான - நாணயமான ஜனநாயகமாக இருக்க முடியும். அதிலும் குறிப்பாக ராஜபக்சே இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் தவறினாலும் - தாமதப்படுத்தினாலும் தி.மு.க. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இங்குள்ள கழக அரசின் சார்பாக இந்தியப் பேரரசை வலியுறுத்தி ஆவன செய்யத் தயங்காது.
நடுக்கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் குருவிகள் போல் சுட்டுக் கொல்லப்பட்டபோது, நிர்வாணமாக்கி மானபங்கப்படுத்தித் தாக்கியபோது யாரால் தடுக்க முடிந்தது? பார்வையாளர்களாக இருந்தது யார்?
தமிழர்களின் ஆயுதக் கப்பலை இந்தியாவும் இலங்கையும் இணைந்து அழித்து ஒழித்தபோது யாரால் தடுக்க முடிந்தது? பார்வையாளர்களாக இருந்தது யார்?
தமிழர்கள் ஒரு நாளில் மட்டும் ஆரியப் பிணந்தின்னி நாய்களும் சிங்களவர்களும் இணைந்து 25000 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொன்றும் குவித்தபோது யாரால் தடுக்க முடிந்தது? பார்வையாளர்களாக இருந்தது யார்?
ராஜீவ்-ஜேஆர் ஜெயவர்தன ஒப்ந்தம் இதுவரை நிறைவேற்றப் படவில்லையே! ராஜீவும் ஜேஆரும் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லையே இதப் பார்த்துக் கொண்டு இருந்தது யார்?
இம்முறை பதவியைத் துறந்து விட்டுப் போராடுவோம் என்று சொல்லாமல் இந்தியப் பேரரசை வலியுறுத்தி ஆவன செய்வோம் என்று முதல்வர் ஐயா கூறியிருப்பதைக் கவனிக்கவும். அவர் இன்னும் கடிதம் எழுதப்போகிறார்.
No comments:
Post a Comment