புராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் போது சதாம் ஹுசேய்ன் ஸ்கட் மிஸைல்ஸை ஏவ அதை இடைமறித்துத் தாக்கி அழிக்க அமெரிக்கா ஏவிய பேட்ரியோட்ரிக் மிஸைஸ்களை ஏவியதையும் அறிந்து கொண்டோம். இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலையை இப்போது இப்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்க்கும் இடையில் நடக்கும் போரில் இரும்புக் கூரை என்னும் எறிகணை எதிர்ப்பு முறைமை செயற்படுவதைப் பார்க்கின்றோம்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை இரும்புக்கூரை என அழைக்கப்படுகின்றது. இவற்றால் குறுகிய தூரம் மற்றும் மத்திம தூரம் பாயும் எறிகணைகளை (artillery shells and mortars) அழிக்க முடியும்.
இரும்புக் கூரையின் உருவாக்கம்
எவுகணை மற்றும் எறிகணை போன்றவற்றிற்கு எதிரான ஒரு முறைமை யை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக் கரு 2004-ம் ஆண்டே இஸ்ரேலில் உருவானது. ஈரான் தான் தயாரித்த எறிகணைகளில் பெருமளவற்றை லெபனானில் செயற்படும் சியா முசுலிம்களின் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவிற்கும் பலஸ்த்தீனத்தின் காஸா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பிற்கும் வழங்கியது. 2006-ம் ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் நடந்த போரின் போது குறி தப்பாமல் இஸ்ரேலின் மீது ஒரு மாதத்தில் 4,000 எறிகணைகளை வீசியது. இது இஸ்ரேலியர்களை ஒரு உலுப்பு உலுப்பியது. அவர்களின் உள்ளத்தின் வலுவை பெரிதாகப் பாதித்ததுடன் இஸ்ரேலியப் பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஹிஸ்புல்லாவின் இந்தத் தாக்குதல்தான் இஸ்ரேலை ஒரு எறிகணைப் பாதுகாப்பு முறைமை உருவாக்கும் நிலைக்குத் தள்ளியது. இஸ்ரேலை நோக்கி ஈரானியப் படையினர், கசாக் கரையோரம் இயங்கும் ஹமாஸ்
இயக்கத்தினர், லெபனானிய ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஆகியோரிடமிருந்து 200,000
ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதன் பின்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இரும்புக்கூரை (Iron Dome) என்னும் எறிகணைப் பாதுகாப்பு முறைமையை உருவாக்கின. இதை உருவாக்கும் பொறுப்பு Rafael Advanced Defense Systems Ltd என்னும் இஸ்ரேலிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக இரு நாடுகளும் பல பில்லியன் டொலர்களைச் செலவழித்தன. 2008-ம் ஆண்டு ஆரம்ப நிலைச் சோதனைகள் செய்யப்பட்டன. 2009-ம் ஆண்டு பல தடவைகள் ஹமாஸ் அமைப்பினரின் கஸ்ஸாம் எறிகணைகளை போன்ற எறிகணைகளை இஸ்ரேல் உருவாக்கி அவற்றின் வீச்சுக்கு எதிராக இரும்புக்கூரையை சோதித்துப் பார்த்தது.
2012-ம் ஆண்டு ஹமாஸ் இஸ்ரேல் மோதல்
2012 நவம்பர் மாத நடுப்பகுதியில் இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் ஒன்றின் மீது
ஒன்று எறிகணைத் தாக்குதல் நடாத்திய போது முதல் முறையாக போர் முனையில்
இஸ்ரேல் இரும்புக் கூரை(Iron Dome)யை வெற்றீகரமாக சோதனை செய்து பார்த்தது.
இரும்புக் கூரையால் பல ஈரானியத் தயாரிப்பு ஃபஜீர் ஏவுகணைகளை இஸ்ரேல் வான்
வெளியில் வைத்து அழித்தது. இரும்புக் கூரையால் ஹமாஸ் இயக்கத்தினர் ஏவிய
எல்லா ஏவுகணைகளையும் அழிக்க முடியாமல் போனது. சில படைத் துறை வல்லுனர்கள்
இரும்புக் கூரை சரியாக வேலை செய்யவில்லை என்கின்றனர்.ஆனால் இஸ்ரேல் ஹமாஸ்
ஏவிய 400 ஏவுகணைகளைத் தமது இரும்புக் கூரைகள் அழித்தன அதனால் தமது
இரும்புக் கூரை 90% வெற்றி என்றது இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை. காஸாவில் மோசமாம மோதல்கள் நடந்து கொண்டிருக்கும் போது அமெரிக்கப் பாராளமன்றம் ஏவுகணைப்பாதுகாப்பு முறைமைக்கு தமது பங்களிப்பாக 225 மில்லியன் டொலர்களை அவசர அவசரமாக ஒதுக்கியுள்ளது.பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் செய்யப்பட்ட இந்த ஒதுக்கீடு இஸ்ரேலின் அரசியல் பரப்புரைஞர்களின்(lobbyists) வலிமையை எடுத்துக் காட்டுகின்றது.
இரும்புக் கூரை வேலை செய்யும் முறை
இரும்புக் கூரை என்பது முன்று தனித்துவ முறைமைகளின் இணைப்பாகும். இவை ஒரு தானியங்கி முறைமையாகும். இனம் காண் நிலையம் (Radar Unit), கட்டுப்பாட்டகம் (Control Centre ), ஏவுகணை வீசிகள் ( Missile Launchers) ஆகிய மூன்று முறைகள் இரும்புக்கூரையில் உள்ளன. ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயிரம் டொலர்கள் பெறுமதியான ஏவுகணையை அழிக்க இஸ்ரேல் ஐம்பதினாயிரம் டோலர்கள் பெறுமதியான இடைமறிப்பு ஏவுகணைகளைப் பாவிக்கின்றது
இனம் காண் நிலையம் (Radar Unit)
இனம் காண் நிலையம் எதிரி வீசும் எறிகணைகளையும் ஏவுகணைகளையும் இனம் கண்டு அவற்றின் வேகத்தையும் பாதையையும் கட்டுப்பாட்டகத்திற்கு அறிவிக்கும்.
கட்டுப்பாட்டகம் (Control Centre )
இனம்காண் நிலையம் அனுப்பும் தகவல்களை வைத்தும் தன்னிடம் இருக்கும் உள்ளக ரடார்களையும் வைத்து எதிரி விசிய ஏவுகணைகள் அல்லது எறிகணைகள் தாக்கவிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும். தாக்கப்படும் இடம் யாருமற்ற வெளியான அல்லது புறம்போக்கான இடம் என்றால் அதை அப்படியே விட்டுவிடும். தாக்கப்படும் இடம் சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் ஏவுகணை வீசிகளுக்கு ஏவுகணை வீசவேண்டிய வேகம், இலக்கு பற்றிய தகவல்களை வழங்கும்.
ஏவுகணை வீசிகள் ( Missile Launchers)
ஏவுகணை வீசிகள் கட்டுப்பாட்டகத்தில் இருந்து கிடைக்கும் தகவலகளின் அடிப்படையில் எதிரிகளின் ஏவுகணைகளை அல்லது எறிகணைகளை இடையில் வைத்து அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வீசும். ஒரு கட்டுப்ப்பாட்டகத்தின் கீழ் பல ஏவுகணை வீசிகள் இருந்து செயற்படும்.
இரும்புக்கற்றை
மிகச் சிறிய எறிகணைகளை அழிப்பதற்கு இரும்புக்கற்றை(Iron Beam) என்னும் லேசர் கதிர் வீசிகளையும் இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கியுள்ளன. இவை இரும்புக் கூரை முறைமையால் இனம் கண்டு தாக்கியழிக்க முடியாத சிறு எறிகணைகள் மீது லேசர் கதிர்களைப் பாய்ச்சி அழிக்கும். இதுவும் இரும்புக்கூரையைப் போல் ஒரு தானியங்கி முறைமையாகும்.
சோதனைக் களம்
அமெரிக்காவைப் பொறுத்தவரை அரபு இஸ்ரேல் மோதல் அதனது படைவலுவிற்கு ஒரு சோதனைக்களமாகும். தற்போது நடந்து கொண்டிருக்கும்(2014-ஜூல முதல்) இஸ்ரேலிற்கும் ஹமாஸிற்குமான போரில் ஈரானிய ஏவுகணைகளையும் தனது சொந்தத் தயாரிப்பு ஏவுகணைகளையும் ஹமாஸ் தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கின்றது. அவை அழிக்கப்படுகின்றன என்று அறிந்தும் ஹமாஸ் நாள் ஒன்றிற்கு நூற்றுக் கணக்கில் ஏவுகணைகளை வீசுகின்றது. இது இஸ்ரேலின் இரும்புக் கூரை பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்காகவும் இருக்கலாம். இரும்புக் கூரை பற்றிய தகவல்கள் ஈரான், சீனா, வட கொரியா போன்ற நாடுகளுக்கு பெறுமதிமிக்கவையாகும். சீனா இணைய வெளியூடாக இரும்புக்கூரை தயாரிக்கும் இஸ்ரேலிய நிறுவனமான Rafael Advanced Defense Systems Ltd இன் கணனிகளை ஊடுருவி இரும்புக் கூரை தொடர்பான இரகசியங்களைத் திருடிவிட்டதாக நம்பப்படுகின்றது. இரும்புக்கூரையின் களநிலைச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களும் சீனாவிற்கு தேவைப்படும். இதை பெறுவதற்காக ஹமாஸ் தொடர்ந்து எறிகணைகளை வீசிக் கொண்டிருக்கின்றதா?
இரும்புக் கூரையை அடுத்து மந்திரக் கோல்
2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மந்திரக் கோல் என்ற குறியீட்டினால் அழைக்கப்படும் David's
Sling என்னும் நீண்ட தூர ஏறிகணைகளையும் குறுந்தூர ஏவுகணைகளையும் (long-range rockets and short-range missiles)இடை மறித்து அழிக்கக்கூடிய முறைமையை
இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கி வெற்றீகரமாக சோதனை செய்து பார்த்துள்ளன. டேவிக் கோலியாத்
கதையில் வரும் சிறுவன் டேவிட்டின் பெயர் இந்த இடைமறிஏவுகணைக்குச்
சூட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை நிறுவனமான Rafael Advanced
Defense Systems மும் அமெரிக்க படைக்கலன் உற்பத்தி நிறுவனமான Raytheonஉம்
இணைந்து David's Slingஐ உருவாக்கியுள்ளன. மதிரக்கோல் எனப்படும் David's
Sling ஹிஸ்புல்லா இயக்கத்தினரிடம் இருக்கும் M600, the Zelzal, Fajr and
Fateh 110 ஆகிய ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.
அம்பு முறைமை(Arrow systems) எனும் பல தட்டுப் பாதுகாப்பு முறைமை
இரும்புக் கூரை குறுந்தூர ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பும், David's Sling
நடுத்தூர ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பும் தரும் என இஸ்ரேல் நம்புகிறது.
தொலைதூர ஏவுகணைகளுக்கும் வழிகாட்டி ஏவுகணைகளுக்கும் (cruise missiles ) எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் அம்பு முறைமை(Arrow systems)யை
உருவாக்கிவருகிறது. மந்திரக்கோல் எனப்படும் David's Sling 2014-ம்
ஆண்டு அல்லது 2015-ம் ஆண்டு முழுமையாக உருவாகிவிடும். அம்பு முறைமை 2016இல் முழுமை பெற்று விடும்
என்கிறது இஸ்ரேல். அம்பு முறைமை - 3 கண்டம் விட்டுக் கண்டம் பாயும்
ஏவுகணைகளை அவற்றின் ஏவு நிலைகளுக்கு அண்மையில் வைத்தே அழிக்கும் வல்லமை
படைத்தவை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்றும் இஸ்ரேலின் பல்தட்டு
பாதுகாப்பு முறைமை எனப்படுகிறது. David's Sling விரைவாக வரும்
ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கக் கூடியது என்கிறது இஸ்ரேல்.
அமெரிக்காவின் Phlanx
சீனாவின் ஒலியிலும் பார்க்கப் பன்மடங்கு வேகத்தில் பறக்கும் விமானங்களையும் பாயும் ஏவுகணைகளையும் அழிக்கக் கூடிய வகையில் அமெரிக்கா Phlanx என அழைக்கப்படும் Close in Weapon System என்னும் முறைமையை உருவாக்கியுள்ளது. இவை லேசர் கதிர்கள் மூலம் எதிரியின் ஹப்பர் சோனிக் ஏவுகணைகளையும் ஹப்பர் சோனிக் விமானங்களையும் அழிக்கும். இது பற்றிய மேலதிக விபரங்களை இந்த இணைப்பில் பார்க்கவும்: Close-in Weapon Systems
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment