அமெரிக்கா தனது படைத்துறைக்கு பலதரப்பட்ட ஆளில்லா விமானங்களைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றது. இந்த வகையில் சட்டைப்பைக்குள் வைக்கக் கூடிய சிறிய ஆளில்லா விமானத்தை அமெரிக்கா உருவாக்குகின்றது. ஆபத்தான சூழலில் சிறு குழுக்களாக அல்லது தனியாகச் செயற்படும் அமெரிக்கப் படையினருக்கு வேவுபார்க்கக் கூடிய வகையில் இச்சிறு விமானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் Massachusetss இல் உள்ள US Army Natick Soldier Research, Development and Engineering Centre என்னும் படைத்துறை ஆராய்ச்சி மையத்தில் சட்டைப்பைகளுக்குள் வைக்கக் கூடிய வேவு பார்க்கும் விமானங்கள் உருவாக்கப்படுகின்றன.
Cargo Pocket Intelligence, Surveillance and Reconnaissance program என்னும் செயற்திட்டம் அமெரிக்காவின் சட்டைப்பை விமானங்களில் செயற்படுத்தப்படும். இதை சுருக்கமாக CP-ISR என அழைக்கப்படுகின்றது. படைத்துறையைப் பொறுத்தவரை உளவு, கண்காணிப்பு, வேவுபார்த்தல் (Intelligence, Surveillance and Reconnaissance) ஆகியவை முக்கியமானவையாகும். இம்மூன்றையும் செய்யக் கூடியவகையில் இச்சிறு விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்திற்குள் அல்லது கட்டிடத்திற்குள் படையினர் நகர்வுகளை மேற்கொள்ள முன்னர் இச்சிறிய விமானத்தை அனுப்பி நிலைமைகளை அறிந்து கொள்ள முடியும்.
ஏற்கனவே சிறிய உழங்கு வானூர்தி (helicopter) உருவாக்கப்பட்டு விட்டன. Prox Dynamics' PD-100 Black Hornet என்னும் உள்ளங்கை அளவு உழங்கு வானூர்தி (helicopter) 16 கிராம் எடையுள்ள உள்ளங்கை அளவிலானது. இடு இருதது நிமிடங்கள் பறந்து காணொளிப் பதிவுகளை நேரடியாக ஒளிபரப்பக் கூடியது. இதில் மூன்று சிறிய ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
முதலில் படைத்துறையினருக்கு என உருவாக்கிய சிறிய ஆளில்லா விமானங்கள் பின்னர் சிறிய இலையான் அளவில் இருந்து பெரிய குண்டு வீச்சு விமானங்கள் வரை இப்போது உருவாக்கப்படுகின்றன. வர்த்தகத் துறையிலும் ஆளில்லா விமானங்கள் திடீர் உணவு விநியோகம் பொதி விநியோகம் ஆடைகள் சலவை செய்து விநியோகித்தல் போன்றவற்றில் பயன்படுத்தப் படுகின்றன. குடிசார் சேவைகளிலும் ஆளில்லாப் போர் விமானங்கள் பயன் படுத்தப் படுகின்றன.அண்மையில் அமெரிக்காவில் காணாமற் போன ஒரு 82வயதானவரை ஆளில்லாப் போர் விமானத்தின் மூலம் தேடிப்பிடித்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment