இரசியா போர் விமானங்களில் ஐந்தாம் தலை முறை விமானங்களை உருவாக்கி வருகின்றது. இது வரை ஐக்கிய அமெரிக்க மட்டுமே ஐந்தாம் தலைமுறை விமானங்களை வைத்திருந்தது. ஆனால் இரசியாவின் ஐந்தாம் தலைமுறை விமானங்கள் அமெரிக்காவின் ஐந்தாம் தலை முறை விமானமான F-35ஐ விட மேன்மையானது எனப்படுகின்றது.
படைக்கலங்களை ஏந்திச் சென்று வீசக்கூடிய ரடாருக்குப் புலப்படாத (stealth) ஐந்தாம் தலைமுறை விமானங்கள் உயர் தரப்பறப்புச் செயற்பாடுகளைக் கொண்டதுடன் மிகப் புதிய ரகக் கணனிகளைக் கொண்டதுடன் போர்ச் சூழலில் மற்ற விமானங்களுடனும் படைக்கருவிகளுடனும் கட்டுப்பாட்டகத்துடனும் சிறந்த தொடர்பாடல்களை ஏற்படுத்தக் கூடியவை.
இரசியப் போர் விமானம்
அமெரிக்காவின் அடுத்த தர ஐந்தாம் தலைமுறை விமானமான Lockheed Martin உருவாக்கிவரும் F-22 Raptor போர் விமானங்கள் 2015-ம் ஆண்டு பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரசியாவின் T-50 எனச் சுருக்கமாக அழைக்கப்படும் PAK-FA விமானங்கள் ஐக்கிய் அமெரிக்காவின் F-22 Raptor விமானங்களிலும் பார்க்க சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது. இரசியாவின் T-50போர் விமானங்களின் இயந்திரங்களிற்கு இடையிலன இடைவெளி அமெரிக்காவின் F-22 Raptor போர் விமாங்களின் இயந்திரங்களிற்கு இடையினான இடைவெளியிலும் பார்க்க நீளமானதாகும். இரசியாவின் T-50 போர் விமானங்கள் ஒலியிலும் வேகமாகப் பறக்கும் போதும் ஒலியிலும் வேகம் குறைந்து பறக்கும் போதும் இலகுவான வகையில் கடினமான வளைவுப் பறப்புக்களைச் செய்யக் கூடியனவாக இருக்கும். ராடர்களுக்கு புலப்படாத்தன்மையான stealth தொழில்நுட்பம் இரசியாவின் T-50யில் மேன்மையானதாக இருக்கின்றது. ராடார்களுக்கு விமானங்கள் புலப்படும் தன்மையை RCS எனப்படும் radar-cross sectionஎன்னும் அளவுகோலால் அளவிடப்படும். இது T-50 விமாங்களில் குறைந்த அளவாக இருக்கின்றது.
அமெரிக்காவின் போர் விமானம்
தற்போது இரசியா T-50 விமாங்களை ஓட்டுவதற்கு விமானிகளுக்கு தீவிர பயிற்ச்சி கொடுத்து வருகின்றது.
பறப்பு வேகம், பறக்கக் கூடிய ஆகக் கூடிய தூரம் ஆகியவை அமெரிக்காவின் F-22இலும் இரசியாவின் T-50 இலும் ஏறக் குறைய சமமாகவே இருக்கின்றன. T-50இன் எடை 37,000கிலோவாகவும் F-22இன் எடை 38,000 கிலோவாகவும் இருக்கின்றன.
நவீன போர் விமானங்கள் எதிரி இலக்குகளை இனம் காண்பதற்கு இரு தொழில் நுட்பங்களைப் பாவிக்கின்றன. ஒன்று Electro-optical sensor மற்றது infrared sensor. சீனாவின் J-20 போர் விமானங்கள் இரண்டு தொழில் நுட்பத்தையும் பாவிக்கின்றன. சீனா அமெரிக்காவின் ரடார்களுக்குத் தென்படாத ஸ்ரெல்த் தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் இணையவெளிகளில் ஊடுருவி திருடிப் பெற்றுக் கொண்டதாக இரசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் F-35 விமானங்களின் இரகசியங்கள்தான் சீனாவின் J-20 விமானமாக உருவாக்கப்பட்டது எனப்படுகின்றது.
இந்தியா இரசியாவுடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவுடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை விமானங்களை உருவாக்குவதில் இரசியா சற்றுத் தயக்கம் காட்டி வருகின்றது.
அமெரிக்கா தனது ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களை 2025-ம் ஆண்டிற்கும் 2030-ம் ஆண்டிற்கும் இடையில் உருவாக்க விருக்கின்றது. ஆறாவது தலைமுறை விமானங்களில் microwaves, lasers ஆகியவற்றின் மூலமாக எதிர்க்கவரும் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடியவையாக இருக்கும். அண்மையில் வரும் எதிரி விமானங்கள் ஏவுகணைகள் கருக்கி விழுத்தப்படும் இவை ஹைப்பர் சோனிக் விமானங்களாக இருக்கும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும். ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களில் microelectronics technologies பாவிக்கப்படும். ஆளில்லாப் போர் விமானங்களின் தொழில்நுட்பம் வேகமாக வளரும் சூழ்நிலையில் ஆறாவது தலைமுறைப் போர்விமானங்கள் விமானிகள் இன்றி தொலைவில் இருந்து இயக்கக் கூடியவையாக அல்லது ரோபோக்கள் மூலம் இயக்கக் கூடியவையாக அமையலாம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சிறந்த கட்டளையும் கட்டுப்பாடும் முறைமை அதாவது command and control முறைமை மிக உன்னதமானதாக இருக்கும்.
இரசியாவின் T-50, அமெரிக்காவின் F-22, சீனாவின் J-20 ஆகியவற்றை ஒப்பிடுதல்:
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment