1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்த பின்னர் அதில் ஓர் உறுப்பு நாடாக இருந்த உக்ரேன் தனி நாடாகியது. அப்போது சோவியத் ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு அணுக் குண்டுகள் உக்ரேன் நாட்டின் வசமாகியது. இதானால் உக்ரேன் உலகிலேயே ஐக்கிய அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் அடுத்த படியாக மூன்றாவது பெரிய அணுக்குண்டு நாடாக உருவெடுத்தது. தன் வசமான அணுக்குண்டுகளை உக்ரேன் வைத்திருக்க விரும்பியது. ஆனால் ஐக்கிய அமெரிக்காவும் இரசியாவும் அதை விரும்பவில்லை. அரசியல் உறுதிப்பாடு உத்தரவாதமில்லாத ஒரு புதிய நாட்டிடம் அதிக அளவிலான அணுக்குண்டுகள் இருப்பது எங்கு போய் முடியும் என்ற அச்சம் பல நாடுகளிடம் அப்போது இருந்தது. உக்ரேனின் முதல் அதிபர் லியோனிட் கிரவ்சக் (Leonid Kravchuk) தமது நாட்டில் உள்ள அணுக்குண்டுகளை இரசியாவிடம் ஒப்படைத்து அவற்றை அழிப்பதற்கு நிபந்தனை அடிப்படையில் ஒப்புக்கொண்டார். அவர் கேட்ட நிபந்தனை பியூடப்பெஸ்ற் குறிப்பாணை அதாவது The Budapest Memorandum என்னும் பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை இரசியா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் உறுதி செய்வதாக ஒத்துக் கொண்டன.
உக்ரேன் தன்னிடம் இருந்த விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் உட்படப் பல படைக்கலன்களை "விற்றுத் தின்ன" வேண்டிய நிலையும் அப்போது இருந்தது. உக்ரேன் நாடு உருவான நாளில் இருந்து கிட்டத்தட்ட வக்குரோத்து நிலையில்தான அதன் பொருளாதாரம் ஓடிக்கொண்டிருக்கின்றது.
சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனது ஆதிக்க நிலப்பரப்பை இரசியா விரிவாக்கவே விரும்பியது. அதன் முதல் முயற்ச்சியாக இரசியாவும், உக்ரேனும், பெலரசும் இணைந்து சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பை 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கின. பின்னர் இதில் ஆர்மினியா, அஜர்பைஜான், கஜகஸ்த்தான், கிர்க்கிஸ்த்தான், மோல்டோவா, தேர்க்மெனிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் இணைந்தன. 1993-ம் ஆண்டு ஜோர்ஜியாவும் இணைந்து கொண்டது. பின்னர் உக்ரேன், ஜோர்ஜியா, தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றத்தால் அவை இந்த இரசியா தலைமையிலான சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறின. சுதந்திர நாடுகளின் பொதுநலவாய நாடுகளிடையே ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட இரசியா முயற்ச்சித்த போதும் அதற்கு சில நாடுகள் ஒத்துக் கொள்ள மறுத்தன. 2013-ம் ஆண்டு உக்ரேன், இரசியா, மோல்டோவா, ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஒரு பொது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன.
ஜேர்மனியும் இரசியாவும்
மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பெயரில் தமது நிலப்பரப்பையும் பொருளாதார வலயத்தையும் விரிவாக்கிக் கொண்டு முன்னாள் சோவியத் நாடுகளையும் இரசிய ஆதிக்க வலய நாடுகளையும் தம்முடன் இணைக்க இரசியாவிற்கு தான் ஓரம் கட்டப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் பற்றிக்கொண்டது. அத்துடன் முன்பு இரசியாவுடன் வார்சோ ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பில் இணைந்திருந்த நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு, குரேசியா ஆகிய நாடுகளும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான எஸ்தோனிய, லத்வியா, லித்துவேனியா ஆகியவையும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைந்ததும் இரசியாவைச் சிந்திக்க வைத்தது. பதிலடியாக தானும் யூரோ ஏசிய பொருளாதார சமூகத்தை உருவாக்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தை இரசியா ஒரு ஜேர்மனிய ஆக்கிரமிப்பாகவே கருதியது. ஐரோப்பாவில் ஒரு முக்கிய நாடாகிய உக்ரேனை யார் பக்கம் இழுப்பது என்ற போட்டி இதை ஒட்டி ஆரம்பமானது. உக்ரேன் தனது யூரோ ஆசிய பொருளாதர சமூகத்தில் இணைய வேண்டும் என இரசியா உக்ரேனை நிர்ப்பந்தித்தது.
தோடம்¬பழப் புரட்சி - Orange Revolution
இரசியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இழுபறியில் உக்ரேன் அகப்பட்டுக் கொண்டதன் விளைவாக உக்ரேனில் ஒரு உள்நாட்டு மோதல் உருவானது. இரசியா ஆதரவு அரசியல்வாதிகளும் ஐரோப்பிய ஒன்றியவாதிகளும் போட்டி போட்டனர். அங்கு ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு வெளியில் இருந்து தூபமிடப்பட்டது. 2004ஆம் ஆண்டு உக்¬ரேனில் தொடர்ச்¬சி¬யாக நடந்த மக்கள் எழுச்சி தோடம்¬பழப் புரட்சி என அழைக்¬கப்¬பட்¬டது. 2004ஆம் ஆண்டு உக்¬ரேனில் மக்¬க¬ளாட்சி முறைப்¬படி தேர்தல் நடந்¬தது. அதில் விக்டர் யுவோ¬னோவிச் வென்¬ற¬தாக அறி¬விக்¬கப்¬பட்¬டது. தேர்¬தலில் முறைகேடு நடந்¬த¬தாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்¬டின. எதிர்க் கட்சிகள் மக்¬களைத் திரட்டிப் பெரும் ஆர்ப்¬பாட்டம் செய்¬தன. உச்ச நீதிமன்றம் தேர்தல் செல்¬லு¬ப¬டி¬யற்¬றது என்¬றது. மறு தேர்¬தலில் யூலியா ரைமொ¬ஷென்கோ வெற்றி பெற்றார். இவர் அமெரிக்கா சார்பானவராக இருந்தார். 2005ஆம் ஆண்டு செப்¬டெம்பர் மாதம் அவ¬ரது ஆட்¬சியை குடி¬ய¬ரசுத் தலை¬வ¬ராக இருந்த விக்டர் யுஷென்கோ கலைத்தார். இதைத் தொடர்ந்து உக்¬ரேனில் பல அர¬சியல் இழு¬ப¬றிகள், கூட்¬ட¬ணிகள் அரங்¬கே¬றின. 2011ஆம் ஆண்டு முன்னாள் தலைமை அமைச்சர் யூலியா ரைமொ¬ஷென்கோ சிறையில் அடைக்¬கப்¬பட்டார். இரசியாவிற்கு பலவகையில் உக்ரேன் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளிற்கு சார்பான நாடாக மாறினால் இரசியா தனது வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டி வரும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்தாகும். இரசியா ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யும் எரிவாயுவில் அரைப்பங்கு உக்ரேனூடாகச் செல்லும் குழாய்களூடாக நடை பெறுகின்றன. அப்போது உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த கிறிமியாவில் இருக்கும் இரசியக் கடற்படைத் தளம் மத்திய தரைக் கடலிலும் மத்திய கிழக்கிலும் இரசியா ஆதிக்கம் செலுத்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைத் தளமாகும். கிறிமியாவை ஒட்டிய கடற்படுக்கையில் எரிவாயு வளம் இருப்பதும் இரசியாவை கிறிமியாவைத் தன்னுடன் இணைப்பதற்கு ஒரு காரணியாக அமைந்தது.
கட்சி மாறிய விக்டர்
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனிற்கு ஐம்பது கோடி மக்கள் கொண்ட தனது சந்¬தையைத் திறந்து விடுவது, உக்ரேனியர்கள் விசா நடை¬முறை இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடு¬க¬ளுக்கு செல்ல அனுமதிப்பது, வரிகள் குறைந்த ஏற்றுமதி இப்படிப் பல சலு¬கை¬களை வழங்க முன்¬வந்¬தது. இதனால் விக்டர் யுவோனோவிச் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக உடன்படிக்கையைக் கைச்சாத்திட் ஒப்புக்கொண்டார். இந்த உடன் படிக்கை உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. உக்ரேனிற்கு அதன் எரிவாயுப் பாவானையில் அரைப்பங்கை விநியோகிக்கும் இரசியா விக்டர் யுவோனோவிச்சை கட்சி மாற்ற தனது எரிவாயுவைப் பாவித்தது. உக்ரேனிற்கு முப்பது விழுக்காடு விலைக்கழிவில் தான் எரிவாயு விநியோக்கிப்பதாக இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் யுவோனோவிச்சிடம் தெரிவித்தார். அவர் வழங்க முன்வந்த மொத்த பொருளாதார உதவி இருபது பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதாகும்.
இரசியா பக்கம் சாய்ந்த உக்ரேனை மீட்க வேண்டும் என முன்னணியில் இருந்து செயற்பட்ட நாடு போலந்து ஆகும். போலந்து, ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இரசியாவிற்கு எதிராகக் காய்களை நகர்த்தின. உக்ரேனியப் பாராளமன்றம் இரசியாவிற்கு எதிராகத் திரும்பியது.
இரசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளை புட்டீன் கொண்டாடுகையில் உக்ரேயின் பாராளமன்றம் தீவிரமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றில் மிக முக்கியமானது உக்ரேயினின் அதிபர் விக்டர் யனுகோவிச்சை ஒரு மனதான தீர்மானத்தின் மூலம் பதிவியில் இருந்து விலக்கியமையாகும். அத்துடன் பாராளமன்றம் அதன் அவைத்தலைவர் ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை தற்காலிக அதிபராக்கியது. விக்டர் யனுகோவிச் தனது மாளிகையில் இருந்து உழங்கு வானூர்தி மூலம் வெளியேறித் தலைமறைவானார். இடைக்கால அதிபராகப் பதவியேற்ற ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைமை அதிகாரி கதரின் அஸ்டன் உடனடியாகச் சந்தித்தார். வங்குரோத்து நிலையை அடைந்துள்ள உக்ரேயின்ற்கு பன்னாட்டு நாணய நிதியத்தூடாக உதவி வழங்கப்படும் என மேற்கு நாடுகள் தெரிவித்தன.
தனக்கு ஆதரவாக மாறிய விக்டர் யுனோவோவிச் பதவியில் இருந்து விலக்கப்பட்டதால் இரசியா ஆத்திரமடைந்தது. தனது படைகளை உக்ரேனின் வடகிழக்கு எல்லையை நோக்கி நகர்த்தியது. உக்ரேனில் இருக்கும் இரசியர்களைத் தன்பக்கம் இழுத்து. உக்ரேனின் ஒரு மாகாணமான கிறிமியாக் குடாநாட்டில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் தன்னுடன் இணைத்தது. இரசியர்கள் அதிகமாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்கள் இரண்டு உக்ரேனில் இருந்து பிரிந்து செல்லப் போவதாக அறிவித்தன. இரசியாவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக ஐக்கிய அமெரிக்கா இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளைச் செய்தது. அவை பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாவிடிலும் பல முதலீடுகள் இரசியாவில் இருந்து வெளியேறி இரசிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி கண்டது.
உக்ரேனில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னர் அங்கு பெரும் குழப்பத்தை இரசியா ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் தேர்தல் சுமூகமாக நடந்து இருபது ஆண்டுகளாக சொக்லட் உற்பத்தி செய்துவரும் பெரும் செல்வந்தரான பெட்றே பொரோஷெங்கோ (Petro Poroshenko) உக்ரேனின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் எனற கொள்கை உடையவர். அதே நேரம் இரசியாவுடன் நல்ல உறவு வேண்டும் எனவும் நினைப்பவர். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது உக்ரேனின் டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் வாழும் இரசியர்கள் அங்கு உள்ள விமான நிலையத்தைக் கைப்பற்றித் தமதாக்கினர். அவர்களில் பலர் உக்ரேனிய அரச படைகளின் தாக்குதலால் கொல்லப்பட்டனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொக்லட் கிங் எனப்படும் பெட்றே பொரோஷெங்கோ ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைதல், உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணுதல், கிறிமியாவை மீளிணைத்தல் என்ற முன்றையும் தனது முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ளார். அதாவது இரசியாவிடமிருந்து வில்லங்கத்தை விலைக்கு வாங்குவேன் என்கின்றார்.
உக்ரேனின் புதிய அரசியும் அதன் அதிபரையும் இரசியா அங்கீகரிக்கவில்லை. விக்டர் யுனோவோவிச் தான் சட்டபூர்வமான உக்ரேனிய அதிபர் என்ற நிலைப்பாட்டில் இரசியா இப்போதும் இருக்கின்றது. அத்துடன் தனக்குச் சார்பான நாடுகள் உக்ரேனின் புதிய அரசை அங்கீகரிக்க வேண்டாம் எனப் பரப்புரை செய்து வருகின்றது.
இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனிடம் மூன்று திட்டங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. முதலாவது உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தை தன்னுடன் இணைத்தல். இரண்டாவது மாற்றுத் திட்டமாக உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தை தனி நாடாக்குதல். இவை நடந்தால் எஞ்சிய உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் நேட்டோப் படைக் கூட்டமைப்புடனும் இலகுவாக இணைந்து விடும். அத்துடன் சிறிய உக்ரேன் தனது எரிவாயுத் தேவையை இரசியாவிடமிருந்து பெறாமல் வேறு வழிகளில் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் உக்ரேன் பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்தால் அதனால் இரசியர்கள் உந்தப்பட்டு இரசியாவிலும் பொருளாதாரச் சீர் திருத்தம் கோரி ஆர்ப்பாட்டம் நடாத்தலாம். இதனால் புட்டீன் இப்போது தனது மூன்றாம் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். உக்ரேனில் தொடர்ச்சியாக அங்கு வாழும் இரசியர்களை வைத்து ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடாத்தி உக்ரேனைப் பொருளாதார ரீதியில் தலை எடுக்காமல் செய்வது. இதனால் உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு தேவையற்ற சுமையாக மாற்ற புட்டீன் முனைகின்றதாகத் தெரிகின்றது. புட்டீனின் திட்டத்திற்கு ஏதுவாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பல வலதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தப் பாராளமன்ற உறுப்பினர்களில் இவர்கள் மூன்றில் ஒரு பகுதியினரே. இவர்கள் ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கத்தை விரும்பாதவர்கள். புதிய நாடுகளிற்காக செய்யப்படும் பணவிரயத்தை எதிர்ப்பவர்கள். உக்ரேனில் கிளர்ச்சி தொடர்ந்தால் அது உலகச் சந்தையில் எரிவாயுவிலையைச் சரியாமல் இருக்க உதவும். இதனால் இரசியா தொடர்ந்து எரிவாயு ஏற்றுமதி மூலம் பெரும் பணம் சம்பாதிக்கலாம். இதற்கான காப்பீடாக சீனாவிற்கு எரிவாயு விநியோகிக்கும் ஒப்பந்த்த்தை இரசியா செய்துள்ளது. இந்தியாவிற்கும் இரசியா எரிவாயு விற்பனை செய்யலாம்.
கலங்கப் போகும் உக்ரேன்
செஸ்னியாவில் இரசியாவிற்கு எதிராகப் போராடும் இசுலாமியத் தீவிரவாதிகள் உக்ரேன் சென்று இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லப்படுகின்றது. உக்ரேனில் 83 இலட்சம் இரசியர்கள் வாழுகின்றனர். பல கிழக்குப் பிராந்திய மாகாணங்களில் அவர்களே பெரும்பான்மையினர். இரசியாவால் தனது படையினரை உக்ரேன் நாட்டு வாசிகள் போலச் செயற்பட இரகசியமாக உக்ரேனிற்குள் அனுப்ப முடியும். கிளர்ச்சிக்கரர்களின் கைகளில் புதிய தரப் படைக்கலன்களைக் கொடுக்க முடியும். கிறிமியாவில் அப்படிச் செய்தே ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தாமல் கிறிமியாவைத் தன்னுடன் இரசியா இணைத்தது. புதிய தேர்தலும் புதிய அதிபரும் இரசியாவை கடுமையாக அதிருப்திப் படுத்தி இருப்பதால் இரசியா உக்ரேனைக் கலங்கடிக்கப்போகிறது என எதிர்பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment