லோக்சபா எனப்படும் இந்தியப் பாரளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் பற்றிப் பார்ப்போம். இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து நடந்து கொண்டிருக்கின்றது, ஒன்பது கட்டங்களைக் கொண்ட இந்தத் தேர்தல் மே மாதம் 12-ம் திகதி வரை நடக்கும். காந்தி குடும்பம் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் கான் குடும்பத்தினரைப் பொறுத்தவரை இத் தேர்தல் ஒரு வாழ்வா இறப்பா என்ற நிலையை அடைந்துள்ளது. காங்கிரசுக் கட்சி தோல்வியடைவது நிச்சயம் அவர்கள் இப்போது ஒரு கௌரவமான தோல்விக்காகப் போராடுகிறார்கள் எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மக்களைக் கவர முடியாத ராகுல் காந்திக்கு கைகொடுக்க அவரது அக்கா பிரியங்கா காந்தி கடும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரியங்கா காந்தியின் பரப்புரை காங்கிரசுக்கு பெரிதுக் கைகொடுத்தது. அப்போது இருந்தது போல் பிரியங்கா இளமையாக இல்லை. இப்போது அந்த அளவு இளமையும் கவர்ச்சியும் இன்றிக் காணப்படுகின்றார். அத்துடன் பிரியங்காவின் கணவர் ஹரியானா மாநிலத்தில் பல ஏக்கர் நிலங்களை மாநில காங்கிரசு ஆட்சியாளர்களைப் பயன்படுத்தி மிகக் குறைந்த விலைக்கு வாங்கிப் பெரும் செல்வந்தர் ஆகிவிட்டார் என்ற குற்றச் சாட்டு பரவலாக நிலவுகின்றது. இதனால் பிரியங்காவின் பரப்புரை சென்ற தேர்தலில் ஏற்படுத்திய தாக்கத்தை இத்தேர்தலில் ஏற்படுத்தாது என எதிர் பார்க்கப்படுகின்றது. தலைமைத்துவப் பண்புகளுக்காக நடாத்தப்பட்ட பல கருத்துக் கணிப்புக்களில் ராகுல் காந்தி நரேந்திர மோடியுடனும் அரவிந்த் கேஜ்ரிவாலுடனும் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியுள்ளார். தலைமைத்துவம் என்று வரும் போது ராகுலை விட வேறுயாரும் காங்கிரசுக் கட்சியின் தலைமை அமச்சராக முடியாது என்பது காங்கிரசினது விதி. அது இந்தியாவின் தலைவிதி. பாரதிய ஜனதாக் கட்சியைப்பொறுத்தவரை மோடியை விட்டால் தேர்தலில் வெற்றி ஈட்டித் தரக் கூடிய வேறு தலைவர் இல்லை
இரு புத்தகங்கள்
முன்னாள் அரச அதிகாரிகள் எழுதிய இரு புத்தகங்களில் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அதிகாரம் அற்றவராகவும் சோனியா காந்தி அதிகாரம் நிறைந்தவராகவும் இருந்தார் என்ற உண்மை போட்டு உடைக்கப்பட்டுள்ளது. காங்கிரசு ஆட்சியில் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவை, சோனியா காந்தி, காங்கிரசுக் கட்சி என மூன்று அதிகாரமையங்கள் இந்தியாவை ஆட்சி செய்ததாகவும் இவற்றில் மன்மோஹன் சிங் தலைமையிலான அமைச்சரவை அதிகாரமின்றி இருததாகவும் இப்போது குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.
Silent Modeஇல் தொடரும் மன்மோகன் சிங்
எங்கும் தேர்தல் என்று வரும் போது தலைமை அமைச்சராக இருப்பவர் தனது அரசு செய்தவற்றைப் பற்றிப் பொறிபறக்கப் பரப்புரை செய்வார். ஆனால் மன்மோஹன் சிங் இப்போதும் வாயை மூடிக்கொண்டிருக்கின்றார்.
பயனற்றுப் போன அம்புகள்
நரேந்திர மோடிக்கு எதிரான அம்பாக அவரை 2002-ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்காக கடுமையாகக் கண்டித்தார் என்ற பரப்புரை பெரிதாக எடுபடவில்லை. அத்துடன் நரேந்திர மோடிக்கு ஒரு மனைவி உள்ளர் அதை மறைத்து அவர் இதுவரை தன்னை ஒரு பிரம்மச்சாரி எனப் பொய் கூறிவந்தார் என்ற காங்கிரசுக் கட்சியின் பரப்புரையும் பிசுபிசுத்துவிட்டது. நரேந்திர மோடியின் மனைவி தான் மோடியுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை எனவும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் தலைமை அமச்சராக வேண்டும் எனத் தான் விரதம் இருப்பதாக அறிவித்தது மோடிக்குச் சாதகமாக அமைந்தது.
மாறாக மோடி சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா நில ஊழல் செய்ததாகக் கருதப்படும் ஹரியானா மாநிலத்தில் சோனியா குடும்பத்தின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தார். தனக்கு ஆதாரமாக ஒரு அமெரிக்கப் பத்திரிகையின் கட்டுரையைக் கையில் எடுத்தார். அதன்படி ஒரு இலட்சம ரூபாவை எப்படி முன்னூறு கோடி ரூபாக்களாக மாற்றுவது என்பதற்கு ஆர் எஸ் வி பி திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் வி பி என்பது ராகுல், சோனியா, வடேரா, பிரியங்கா ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துக்களாகும் . மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிரபல அரசியல்வாதியான உமா பாரதி பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா கைது செய்யப்படுவார் என சூளுரைத்துள்ளார். வட மாநிலங்களில் சோனியாவின் மருமகன் ரொபேர்ட் வடேரா அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கியமை காங்கிரசுக் கட்சிக்கு எதிரான பரப்புரை பொருளாக அமைந்துள்ளது. வடேரா அடிக்கடி மைய அரசின் அமைச்சர்களை மிரட்டி தன் காரியங்களைச் சாதித்த்தாக பஜகாவினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான திக் விஜயசிங் பாஜகாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் பிரபல சட்டவாளருமான அருண் ஜெட்லி ஏன் வடேரா மீது வழக்குத் தாக்குதல் செய்ய முடியவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுலின் பலவீனத்தில் தாக்குதல்
ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதாக் கட்சியினர் ராமாயணம் தொடர் நாடகத்தில் சீதையாக நடித்த இராணி என்னும் நடிகையை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளனர். அவர் ராகுல் காந்தியை தன்னுடம் பகிரங்க விவாதத்திற்கு வரும் படி சவால் விட்டார். கன்னா பின்னா எனப் பேசி எல்லாவற்றையும் கெடுத்து விடுவார் என்றபயத்தில் காங்கிரசுக் கட்சியினர் ராகுல் காந்தியைப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கக் கூட அனுமதிப்பதில்லை. ராகுல் காந்தி தன் வாழ் நாளில் ஒருதடவை மட்டுமே பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ளார். அதிப் போட்ட மொக்கைகளைத் தொடர்து எந்தப் பத்திரிகைகளுக்கும் அவர் பேட்டியளிப்பதில்லை. இந்தப் பலவினத்தை உணர்ந்த இராணி ராகுல் காந்ந்திக்கு விட்ட சவாலை அவர் புறக்கணித்துள்ளார்.
ஊழல்
கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல உண்டு. 2ஜி அலைக் கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுட்த ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல் என ஒரு மிக நீண்ட பட்டியல் உண்டு. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை கோடானு கோடிகளாகும். காங்கிரசுக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தால் சோனியா காந்திக்கும் அவரது மருமகனுக்கும் எதிராக வழக்குகள் பல தொடரப்படலாம். இதனால் அவர்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடவேண்டிய நிலமை ஏற்படும். இதனால் காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலாக இது அமையும். காங்கிரசுக் கட்சிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீ தலைமை தாங்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment