2014 ஏப்ரல் 6-ம் திகதியில் இருந்து மே மாதம் 12-ம் திகதிவரை நடக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் கேரல மாநிலத்தில் பாரதிய ஜனதாக் கட்சி எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி மாட்டாது என எதிர்பார்க்கப் படுகின்றது. 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசுக் காட்சி கேரளாவில் அமோக வெற்றியீட்டியது. அதைத் தொடர்ந்து இந்திய மைய அரசின் அமைச்சரவையில் கேரளாவைச் சேர்ந்த எட்டுப்பேர் இடம் பெற்றிருந்தனர்.
கேரளாவைச் சேர்ந்த:
1 ஏகே அந்தோனி முக்கிய அமைச்சான பாதுகாப்புத் துறை அமைச்சராகவும்,
2, சசி தரூர் மனித வளத்துறை இணை அமைச்சராகவும்,
3. கொடிக்குன்னில் சுரேன் தொழிலாளர் துறை இணை அமைச்சராகவும்,
4. வயலார் ரவி கடல் தாண்டிய இந்தியர் விவகார அமைச்சராகவும்,
5 கே வி தோமஸ் நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவுத் துறை அமைச்சராகவும்
6. முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள் துறை இணை அமைச்சராகவும்,
7. கேசி வேணுகோபால் வலுவளத்துறை இணை அமைச்சராகவும் இருக்கின்றனர்.
இவர்கள் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த ஈ அஹமட் வெளியுறவுத் துறை இணை அமைச்சராகவும் இருக்கின்றார்.
இந்தியச் சுதந்திரத்தின் பின்னர் கடவுளின் பூமி எனப்படும் கேரளாவை பொதுவுடமைக் கட்சியினரும் காங்கிரசுக் கட்சியினரும் மாறி மாறி ஆண்டனர் 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சி அமோக வெற்றியீட்டியது. இதுவரை காலமும் எந்த ஒரு பாராளமன்றத் தேர்தலிலோ அல்லது மாநில சட்ட சபைத் தேர்தலிலோ கேரளாவில் பாரதிய ஜனதாக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றதில்லை
கேரளாவில் இம்முறை 2 கோடியே 42லட்சத்து 51 ஆயிரத்து 942 பேர் வாக்களிக்க உள்ளனர். 20 தொகுதிகளில் மொத்தம் 269 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தியாவிலேயா அதிக அளவு படித்தவர்களையும் 25விழுக்காடு முஸ்லீம்களையும், 56விழுக்காடு இந்துக்களையும் கொண்ட கேராளவின் மதவாத்திற்கு ஆதரவு மிகவும் குறைவு. ஆனால் கேரளத் தலித்துக்கள் தாங்கள் காங்கிரசுக் கட்சியால் புறக்கணிக்கப் பட்டதாகக் கருதி சில தலித்துக்கள் பாரதிய ஜனதாக் கட்சியை ஆதரிக்கின்றார்கள். ஆனாலும் கேரளாவில் பாரதிய ஜனாதாக் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெறாது என ஒரு கருத்துக் கணிப்பும் ஒரு தொகுதியில் வெற்றி பெறலாம் இன்னொரு கருத்துக் கணிப்பும் தெரிவித்தன. சென்ற முறை 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசுக் கட்சி இம்முறை 9 இடங்களிலும் சென்ற முறை நான்கு இடங்களில் வெற்றி பெற்ற இடதுசாரிகளின் கூட்டணி இம்முறை 11 இடங்களில் வெற்றி பெலாம். இதனால் நாரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கூட அமைச்சரவையில் இடம் பெறாமல் போகலாம். அத்துடன் புது டில்லி அரசில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றும் மலையாளி அதிகாரிள் பலரும் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருப்பதாலும் சோனியா காந்திக்கு மலையாளி ஆண்களை மிகவும் பிடிக்கும் என்பதாலும் பல இந்திய மைய அரசின் மலையாள அதிகாரிகளின் தலை உருளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment