ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக நேரில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும் முகமாக இலங்கை சென்ற போது அவரை இந்திய உளவுத் துறையான ரோ(RAW - Research and Analysis Wing)வைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்ததாக சிங்களப்பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் படைத்துறையினரின் உளவுப்பிரிவினரின் அறிக்கை ஒன்றில் இந்திய உளவுத் துறையான ரோ(RAW - Research and Analysis Wing)வைச் சேர்ந்தவர்கள் நவி பிள்ளை அவர்களை யார் யாரெல்லாம் சந்திக்கின்றார்கள் என்பதைப்பற்றியும் நவி பிள்ளை என்ன அறிக்கை விடுகிறார் என்பதைப்பற்றியும் தகவல்கள் திரட்டினார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல்-4 தொலைக்காட்சி முதல் முதலாக இலங்கையில் கைதிகள் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் பின்புறமாக இருந்து சுட்டுக் கொல்லப்படுவதை காணொளியாக வெளியிட்டவுடன் அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணை அறிக்கை இதுவரை வெளிவிடப்படவில்லை. இலங்கைப் போர்க்குற்றத்தில் இந்தியாவிற்கு உள்ள பங்கு பற்றிய காணொளிப் பதிவுகள் ஏதாவது இருக்கிறதா என அஞ்சித்தான் அந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாக அப்போது பேசப்பட்டது.
நவி பிள்ளைக்கு இலங்கைப் போரில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக எதாவது தகவல் கிடைக்குமா என்ற அச்சத்தில்தான் நவி பிள்ளையை இந்திய உளவுத்துறை தொடர்ந்ததா என்னும் கேள்விக்கான விடையை 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் "ஐநாவின் பானிற்கான சவால்: போர்க்குற்ற விசாரணையை முறியடிக்க இந்தியாவின் சதி" என்ற தலைப்பில் திரு வீ எஸ் சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையில் பதில் உண்டு.
அந்தக் கட்டுரையில் சொல்லபப்ட்ட முக்கியமானவை:
எம் கே நாராயணனுக்குப் புதிய பட்டம்
இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம் கே நாராயணனை தனது கட்டுரை முழுக்க திரு வீ எஸ் சுப்பிரமணியம் அவர்கள் முள்ளிவாய்க்கால் நாராயணன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
கொலைக்குழு
Ground Reportஇல் வீ எஸ் சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையில் கோத்தபாய ராஜபக்ச, சிவ் சங்கர மேனன், எம். கே. நாராயணன், விஜய் நம்பியார் ஆகியோர் 2009இல் நடந்த போரில் இணைந்து செயற்பட்டதாக தெரிவித்திருந்தார்.
வில்லங்கமான வில்லன் விஜய் நம்பியார்
விஜய் நம்பியார் டில்லி தென்மண்டலத்தின் (Delhi’s South Block) ஒரு முகவராக செயற்படுகிறார் என்றும் கட்டுரையில் குறிபிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல விஜய் நம்பியார் இலங்கைக்கு ஐநாவின் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஆலோசனைக் குழுவை எப்படி தவிர்ப்பது என்பது பற்றி ஆலோசனை வழங்கும் சாத்தியமும் உண்டு என்றும் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.
பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்ட ராஜீவ் காந்தி
இந்திய "அமைதிப்படை" இலங்கையில் இருந்த வேளை ராஜீவ் காந்தி (எனப்படும் ராஜீவ் கான்) பிரபாகரனைக் பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்துக் கொல்ல உத்தரவிட்டதையும் அதை அமைதிப்படைக்குப் பொறுப்பாக இருந்த ஹரிக்கிரத் மறுத்ததையும் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சோனியாவின் பழிவாங்கல்
சோனியாவின் பழிவாங்கல் விடுதலைப்புலிகளை அழிப்பதற்க்கு மேலாக தமிழர் போராட்டத்தை ஒழிப்பது வரை சென்றது என்கிறார் கட்டுரையாளர் டில்லிப் பேராசிரியர் பிரம்மா செல்லனியை மேற்கோள் காட்டி.
பன்னாட்டு நீதி விசாரணை தேவை
கோத்தபாய ராஜபக்ச, சிவ் சங்கர மேனன், எம். கே. நாராயணன், விஜய் நம்பியார் ஆகியோர் அடங்கிய குழு 2009இல் நடந்த கொலைகளில் எப்படிச் சம்பந்தப்பட்டன என்பதை ஒரு பன்னாட்டு நீதி மன்ற விசாரணையால் மட்டுமே கண்டறிய முடியுமென்று தெரிவித்திருந்தார். சுப்பிரமணியம்.
2G அலைக்கற்றை ஊழலும் அடங்கிய திமுகவும்
2007இற்குப் பிறகு 2G அலைக்கற்றை ஊழலை வைத்து காங்கிரஸ் திமுகவை மிரட்டிப் பணிய வைத்துவிட்டதாம். பிரணாப் முகர்ஜீ கருணாநிதியைச் சந்தித்து மிரட்டி தமிழ்நாட்டில் எழும் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளை அடக்கும்படி கட்டளையிட்டாராம். (இப்போது தெரிகிறதா கலைஞர் ஆ ஊ என்றால் சீமானை ஏன் கைது செய்தார் என்று? இப்போது தெரிகிறதா கலைஞர் யாரை ஏன் சொக்கத் தங்கம் என்றார் என்று? ஏன் பாரதிராஜாவின் பணிமனை உடைபட்டது என்று? )இந்தச் சந்தர்ப்பத்தை சோனியா திமுக மீது தமிழர் நலன்பேணும் என்ற நம்பிக்கையைத் தகர்க்க சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். (ஐயா தந்தை பெரியார் அவர்களே உங்கள் வாரிசுகளின் சுயமரியாதை என்னாச்சு?)
- Thus the TN protests that gathered momentum in 2008 quietened. M’kal Narayanan also visited Chennai frequently to make clear to TN CM that Delhi’s pro SL stance even after the Mullivaykal massacres required the TN CM to keep Tamil sentiments calm even though Delhi diplomatically worked to stall the international UNHRC war crimes initiatives in May 2009. M’kal Narayanan and other South Block accomplices have a vested interest in stalling all war crimes initiatives.
போர்க்குற்றத்தில் நம்பியாரும் பங்காளி
வீ எஸ் சுப்பிரமணியம் அவர்களின் முக்கிய பந்திகளில் ஒன்று:
- Nambiar’s coziness with the Rajapakses resulted in his May 2009 involvement in the plot that led to the massacre of the ‘white flag’ waving resistance leaders - a war crime. The Rajapakses expectation that Nambiar’s membership in the Delhi South Block partnership in SL crimes will give them the leverage to extricate him and his partners from those crimes working from within the UN establishment. SL sees merits in dragging Delhi in, to share culpability for those crimes committed in SL. The Rajapakses expect overt assistance from Nambiar here.
கோத்தபாயவின் பொறிக்குள் இந்தியா
வீ எஸ் சுப்பிரமணியம் இத்துடன் நிற்கவில்லை எம் கே நாராயணன் இலங்கைப் போரில் இலங்கையோடு இணைந்து செயற்பட்டபடியால் கோத்தபாய ராஜபக்சவின் பொறிக்குள் இந்தியா அகப்பட்டுள்ளது என்கிறார்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தில் இந்தியாவின் சம்பந்தம் தொடர்ப்பன பதிவுகளை கோத்தபாய ராஜபக்ச வைத்துக் கொண்டு அவர் இந்தியாவை மிரட்டுகிறார் என்று கூறப்படுகிறது.
இலங்கையின் பணயக் கைதிகளாக நாராயணனும் நம்பியாரும்.
M’kal Narayanan was similarly entrapped by the Rajapakses in the M’kal massacres with Gothabhaya Rajapakse making explicit his ‘in the loop’ involvement charge. This explains Delhi over appeasing Colombo, post resistance. M’kal Narayanan was acting on the specific orders of his Delhi bosses (Sonia faction in the ruling Congress) for which he used his frequent visits to Colombo in early 2009 for the ‘in the loop’ sessions with the Rajapakses. It is not just coincidence that Nambiar joined M’kal Narayanan for the May 2009 ‘in the loop’ sessions that resulted not only in the white flag massacres but the equally severe Mullivaykkal massacres. By these acts M’kal Naraynan and Nambiar became hostages to the Rajapakse blackmail.
கொழும்பில் நிருபாமா பல்லை இளிப்பது ஏன்?
போர்க்குற்றத்தில் நாராயணனையும் நம்பிராரையும் சம்பந்தப்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இலங்கையைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்தியா போருக்குப் பின்னர் நடந்து கொள்கிறதா? இப்போது தெரிகிறது படங்களில் நிருபாம ராவ் ஏன் ராஜபக்சமுன் பல்லை இளித்துக் கொண்டு நின்றார் என்று.
2009இல் நடந்த லோக் சபா தேர்தலுக்கு முன் இலங்கைப் போரை முடிக்க வேண்டும் என்று டில்லி அவசரப்பட்டதாம். அதற்கான அழுத்தம் இலங்கைமீது இந்தியாவால் கொடுக்கப்பட்டதாம். அதற்காக இலங்கை பல நடவடிக்கைகளை மேற் கொண்டது. அவை போர்க்குற்றங்களாக கருதப்படக்கூடியவையாம். இலங்கை மீது வரும் போர்க்குற்றச் சாடுக்களை இந்தியா தடுத்தே ஆகவேண்டுமாம். அல்லது இந்தியாவும் போர்க்குற்றத்தில் சம்பத்தப்படுத்தப் படலாமாம். இந்த மாதிரிப் போகிறது கதை. தப்பித் தவறி தேர்தலில் தோல்வியடைந்தால் ராஜீவ் கான் குடும்பத்தின் பாது காப்பு எப்படியாகும் என்ற அச்சமோ?
போரின் இறுதிக்கட்டத்தில் பெரிய மனித அழிவு நிகழ்வதைத் தடுக்க விஜய் நம்பியாரை இலங்கை அனுப்பினார். அவர் சந்தித்தது தனது சகோதரரும் இலங்கையின் படைத்துறைக் கூலி ஆலோசகருமான சதீஸ் நம்பியார், கோத்தபாய, நாராயணன், சிவ்சங்கர மேனன் ஆகியோரச் சந்தித்தமையையும் வீ எஸ் சுப்பிரமணியம் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார்.
எஸ் சுப்பிரமணியம் அவர்களின் கட்டுரையின் மிக முக்கியமான வாசகம்:
sufficient details are out in the open now that Delhi knowingly partnered in the SL genocide and the massacres.
No comments:
Post a Comment