மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்ன்ர் சீனர்களும் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிரியர்களும் வேதியியல் படைக்கலன்கள் பாவித்துள்ளனர். தம்மை ஆக்கிரமித்து ஆட்சி செய்து கொண்டிருந்த ரோமானியர்களுக்கு எதிராக சிரியர்கள் வேதியியல் குண்டுகள் பாவித்தார்கள்.
க்ண்ணீர்ப்புகைக் குண்டுகளும் போர் முனையில் தடைசெய்யப்பட்டவையே. ஆனால் ஒரு நாட்டுக் காவற்துறையினர் கலவரம் செய்வோரை அடக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பாவிப்பது தடை செய்யப்படவில்லை.
மூன்று வகையான வேதியியல் குண்டுகள் இருக்கின்றன:
1. Choking Agents (e.g., phosgene, chlorine) இவை மூச்சுத் திணறச் செய்து கொல்லுபவை
2. Blister Agents (e.g., nitrogen mustard, Lewisite) - இவை தோலைத் தாக்கி கடுமையயன வலி ஏற்படுத்தி கொப்பளங்கள் வரச்செய்து உடம்பில் காயத்தை ஏற்படுத்தும்
3. Nerve Agents (e.g., Tabun, Sarin, VX) - இவை எமது உடல்களின் உறுப்புக்களுக்கு இடையிலான நரம்பு மண்டலத் தொடர்பாடுகளை இழக்கச் செய்து இதயம் போன்ற முக்கிய உறுப்புக்களை செயலிழக்கச் செய்து கொல்லும்.
பொதுவாக குண்டுகள் விழும்போது நாம் பதுங்கு குழிகளுக்குள் ஒளிவது வழக்கம். ஆனால் வேதியியல் குண்டுகளில் இருந்து தப்ப நாம் உயரமான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
வேதியியல் குண்டுகளுக்கு எதிரான பன்னாட்டு உடன்படிக்கை 1925இல் ஜெனிவாவில் கைச்சாத்திடப்பட்டது.
1993இல் மீண்டும் ஒரு வேதியியல் உடன்படிக்கையில் பல நாடுகள் கையொப்பமிட்டன. சிரியா, எகிப்து, வட கொரியா, அங்கோலா ஆகிய நாடுகள் அதில் கையொப்பமிடவில்ல. இஸ்ரேலும் பர்மாவும் கையொப்பமிட்டாலும் அந்த நாட்டு பாராளமன்றம் அவற்றை இன்னும் அங்கீகரிக்கவில்லை.
ஐக்கிய அமெரிக்கா, இரசியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தம்மிடம் வேதியியல் குண்டுகள் இருப்பதை ஒத்துக் கொண்டுள்ளன.
முதலாம் உலகப் போரில் ஜேர்மனி வேதியியல் குண்டுகள் பாவித்தது.
இரண்டாம் உலகப் போரில் இத்தாலி, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா வேதியியல் குண்டுகளைப் பாவித்தன.
1962இற்கு 1967இற்கும் இடையில் அமெரிக்கா வியட்னாமில் ஜெனீவா உடன்படிக்கையை மீறி வேதியியல் படைக்கலன்களைப் பாவித்தது.
1980இற்கும் 1988இற்கும் இடையில் நடந்த ஈரானுடனான போரின் போது ஈராக் பலதடவை பல வகையான வேதியியல் குண்டுகளைப் பாவித்தது.
1995இல் ஒரு மதவாதக் குழு ஜப்பானில் சரின் குண்டுத்தாக்குதல் செய்தது.
இலங்கையின் இறுதிப் போரின் போது மன்னாரில் இருந்து கிளிநொச்சி நோக்கி முன்னேற முடியத நிலை ஏற்பட்ட போது அரச படைகள் தடை செய்யப்பட்ட படைக்கலன்கள் அங்கு பாவிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவற்றை இந்தியாதான் இலங்கைக்கு வழங்கியது என சிலர் சந்தேகிக்கின்றனர். 2009 மே நடுப்பகுதியில் பின்புறமாக இருந்து தாக்கச் சென்ற ஒரு விடுதலைப் புலிகளின் படையணிமீது இலங்கைப் படையினர் தடை செய்யப்பட்ட படைக்கலன்களைப் பாவித்தனர் என்ற குற்றச் சாட்டும் உள்ளது.
சிரியாவிடம் ஆயிரம் தொன் எடையுள்ள வேதியியல் குண்டுகள் இருப்பதாக கருதப்படுகிறது. உலகெங்கும் 13,000 தொன் குண்டுகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனின் கணிப்பின் படி சிரியாவில் நிலைமை மோசமாகி அங்குள்ள வேதியியல் படைக்கலன்களும் மற்றப் படைக்கலன்களும் இசுலாமியப் போராளிகளின் கைகளுக்குப் போகாமல் இருக்க 75,000 அமெரிக்கப் படையினர் தேவை.
எல்லாவற்றிக்கும் கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment