அவர் ஒரு மிகப் பிரபலமான சட்டவாளர். அவரது ஆண்டு வருமானம் பல இலட்சங்களைத்
தாண்டும். ஆனால் அவரிடம் நன்கொடை வாங்க பல தரும ஸ்தாபனங்கள் பகிரதப்
பிரயத்தனம் செய்து தோல் விகண்டன.
ஒரு அறக்கட்டளையைச் சேர்ந்த ஒருவர்
அவரிடம் எப்படியாவது நன்கொடை வாங்கியே தீருவேன் என்று அவர் வீடு
சென்றார். அவரிடம் நன்கொடை பற்றியும் அதன் அவசியம் பற்றியும் அதனால்
நன்மையடையப் போகும் அனாதைப் பிள்ளைகள் பற்றியும் அதனால் அவருக்கு
கிடைக்கும் புண்ணியம் பற்றியும் நீண்ட நேரமாக எடுத்து சொன்னார். சொன்ன
பின் சட்டவாளரிடம் நீங்கள் ஆண்டு ஒன்றிற்கு இலட்சக்கணக்கில் வருமானம்
பெறுகிறீர்கள் என அறிகிறோம். உங்கள்...... அவரை இடைமறித்த சட்டவாளர் எனது
அம்மா இரண்டு காலும் வழங்காமல் நடக்க முடியாமல் தவிப்பது உனக்குத் தெரியாமா
என்றார். அதற்கு அவர் இல்லை ஐயா என்றார் வியப்புடன். பின்னர் எனது தம்பி
புற்று நோய் வந்து தவித்துக் கொண்டிருக்கிறான் அது உனக்குத் தெரியுமா எனக்
கேட்டார். இல்லை ஐயா என்றார் நன் கொடை வாங்க வந்தவர். பின்னர் சட்டவாளர்
எனது அக்காவின் கணவன் அமைதிப் படையில் இலங்கை போய் இரண்டு காலகளையும்
இழந்து விட்டு வந்திருக்கிறான். அவர்களுக்கு 4 பிள்ளைகள் உனக்குத் தெரியுமா
என்றார். நன் கொடை வந்தவருக்கு ரெம்ப கவலையாகி விட்டது. இது ஒன்றும்
எனக்குத் தெரியாது என்றார் மனவருத்தத்துடன். இன்னும் கேள் என்ற சட்டவாளர்,
எனது தங்கையின் கணவன் விபத்தில் கொல்லப்பட்டு விட்டான். எனது தங்கைக்கு
மூன்று பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். அது உனக்குத் தெரியுமா என்றார்.
இப்போது நன்கொடை வாங்க வந்தவருக்கு கண் கலங்கி விட்டது. இந்தா பாரப்பா
இவர்களுக்கு ஐந்து காசு கூடக் கொடுக்காத நான் உனக்கு நன்கொடை தருவேன் என்று
எதிர்பார்க்கிறாயா என்றார். நன்கொடை வாங்க வந்தவர் எடுத்தார் ஓட்டம்!!
xxxxxxx
இந்திய ரூபா போல் என் கண்ணில் விழுந்தாள்
இந்தியாவில் ஊழல் போல் உளமெங்கும் நிறைந்தாள்.
விலைவாசி போல் நான் உயர்ந்தேன் வானில்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment