Thursday 8 August 2013

நகைச்சுவைக்கதை: நரகத்தில் குயலலிதாவும் குருணாநிதியும்

3ஜீராசா ஒரு விபத்தில் காலமாகி நரகத்திற்குப் போனார். அங்கு அவருக்கு ஊழல் புரிந்தமைக்காக தண்டனையாக ஒரு மிகவும் பருமனான ஐம்பது வயதுப் பெண்ணுடன் இல்லறம் நடத்த வேண்டும் என்றும் அப்பெண்ணை "எல்லா வகையிலும்" மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது.

மிகுந்த சிரமத்துடன் தனது நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த 3ஜீராசா ஒரு நாள் நரகத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றபோது குருணாநிதியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. குருணாநிதி 3ஜீராசாவிற்குக் கிடைத்த பெண்ணிலும் பார்க்க வயதில் கூடியவரும் அதிக பருமனானவரும் அதிக அசிங்கமானவருமான ஒரு பெண்ணை "எல்லா விதத்திலும்" மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தார். கொலைஞர் குருணாநிதி ரெம்பத்தான் நொந்து போய்க் கொண்டிருந்தார். இறக்க முன்னர் புஷ்ப்புவை வைத்துத் தடவிக்கொண்டிருந்த தன் தலைவருக்கா இந்தக் கதி என எண்ணி 3ஜீராசா ரெம்ப வருத்தப்பட்டார். ஆனால் இருவரும் ஒன்றாக நரகத்தில் ஏதாவது அலைக்கற்றை ஏலம் விடலாமா என அடிக்கடி கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தனர். ஒரு நாள் அலைக்கற்றை பற்றி கலந்து உரையாடிக் கொண்டு நடைபவனியாகச் சென்று கொண்டிருந்த போது. குயலலிதா மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதை அவர்கள் கண்டு பொறாமையும் ஆத்திரமும் அடைந்தனர். அவருடன் சரிசாந் ரெம்பக் கவலையுடன் காணப்பட்டார். 3ஜீராசாவும் குருணாநிதியும் மிகவும் ஆத்திரப்பட்டு நாங்கள் ஊழலுக்கு இலக்கணம் மட்டும் தான் வகுத்தோம் ஆனால் குயலலிதா ஊழலுக்கு இலக்கணம் மட்டுமல்ல இலக்கியமே படைத்தவர். அவர் மட்டும் எப்படித் தண்டிக்கப்படாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார் என நரகத்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதற்கு நரகத்து அதிகாரிகள் உங்களை யார் விளையாட்டுத் துறையில் ஊழல் புரிந்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் பகுதிக்கு போகச் சொன்னது என்று கேட்டு சவுக்கால் இருவரையும் அடி அடியென்று அடித்தனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...