நாம் எல்லோரும் சில மனபாங்குகளைக் கொண்டுள்ளோம். எமது முயற்ச்சிகளிலும் அதனால் கிடைக்கும் வெற்றிகளிலும் எமது மனப்பாங்குகள் முக்கிய பங்காற்றுகின்றன. நாம் எல்லோரும் பிறக்கும் போது சில போக்குகளுடனும்(tendencies) சில சார்புநிலைகளுடனும்(Orientations) பிறக்கின்றோம். எமது ஆளுமைகளும் மனப்பாங்குகளும் எம்முடன் பழகுபவர்களிடமிருந்தும் எமது அனுபவங்களில் இருந்தும் உருவாகின்றன.
எம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையை நன்கு அவதானித்தால் அவர்களின் மனப்பாங்குகள் அவர்களின் வாழ்க்கையின் வெற்றி தோல்விகளில் ஆற்றிய பங்கை நாம் அறிந்து கொள்ளலாம். எமக்கு உந்து வலுவாக எமது நேர்மறையான மனப்பாங்குகளும் எமக்குத் தடைகளாக எதிர்மறையான மனப்பாங்குகளும் அமைகின்றன.
மனப்பாங்கு என்பது என்ன?
Psychologists define attitudes as a learned tendency to evaluate things in a certain way. This can include evaluations of people, issues, objects or events. Such evaluations are often positive or negative, but they can also be uncertain at times. For example, you might have mixed feelings about a particular person or issue.
மனப்பாங்கு என்பது எம் வாழ்க்கையில் எதிர்கொள்பவற்றை நாம் மதிப்பீடு செய்ய நாம் அறிந்து கொண்ட சார்புநிலையாகும். இவை நாம் சந்திக்கும் மனிதர்கள், பிரச்சனைகள், பொருட்கள், நிகழ்வுகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. அப்படிப்பட்ட மதிப்பீடு நேர்மறையானதாகவும் இருக்கலாம் அல்லது எதிர்மறையானதாகவும் இருக்கலாம் ஆனால் அந்த மதிப்பீடுகள் நேரத்திற்கு நேரம் வித்தியாசமானதாக இருக்கும். உதாரணமாக ஒருவர் பற்றிய உங்களது மதிப்பீடு காலத்திற்கு காலம் மாறுபடலாம்.
மனப்பாங்கு என்பது மூன்று கூறுகளைக் கொண்டது
1. உணர்வுகளைக் கொண்டபகுதி. (An Emotional Component): ஒருவரோ, ஒரு நிகழ்வ்வோ, ஒரு பொருளோ, ஒரு பிரச்சனையோ உங்களை எப்படி உணரவைக்கிறது என்பது.
2. அறிவுபூர்வமான பகுதி(A Cognitive Component): ஒருவரோ, ஒரு நிகழ்வ்வோ, ஒரு பொருளோ, ஒரு பிரச்சனையோ பற்றிய உங்களது அறிவு அல்லது நம்பிக்கை.
3. நடத்தை பற்றிய பகுதி ( A Behavioral Component): ஒருவரோ, ஒரு நிகழ்வ்வோ, ஒரு பொருளோ, ஒரு பிரச்சனையோ உங்கள் நடத்தையை எப்படிப் பாதிக்கிறது என்பது.
மனப்பாங்குகள் எப்படி உருவாகின்றன?
மனப்பாங்குகள் எமது அனுபவங்கள், அவதானிப்புக்கள், நாம் சந்திக்கும் மனிதர்கள், எம்மை வளர்ப்பவர்கள், எமக்குப் போதிப்பவர்கள் ஆகிய பல காரணிகளால் உருவாகுகிறது.
எமது மனப்பாங்குகள் சிறுபராயத்தில் இருந்தே உருவாகத் தொடங்குகிறது. பின்னர் அது பல மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்கிறது. உங்கள் மனப்பாங்க்குகளை மாற்ற சில வழிவகைகள்:
1. மாற்ற வேண்டிய மனப்பாங்குகளை அறிந்து கொள்ளுங்கள்.
முதலில் நோய் என்ன என்று அறிந்தால்தான் அதற்கான வைத்தியம் செய்ய முடியும். உங்கள் வாழ்க்கையில் வெற்றிக்குத் தடையாக இருக்கும் மனப்பாங்குகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு அவரின் வெற்றி தோல்விகளையும் உங்களது வெற்றி தோல்விகளையும் ஒப்பிடுங்கள். அவரின் வெற்றிகளுக்கு காரணமான மனப்பாங்குகள் என்ன என்ன என்பதையும் அவரின் தோல்விக்களுக்கு காரணமான மனப்பாங்குகள் என்ன என்ன என்பதையும் அறியுங்கள். இதன் மூலம் உங்களிடம் இருக்கும் உங்களுக்குப் பாதகமான மனப்பாங்குகளை அறிந்து கொள்ளலாம்.
2. உங்களுக்கு முன்மாதிரியானவர்களை(Role Models) தெரிவு செய்து கொள்ளுங்கள்
உங்களது மாற்றப்பட வேண்டிய அல்லது உருவாக்கப்பட வேண்டிய மனப்பாங்குகள் இருப்பவர்களை இனம் கண்டு அவர்களை உங்கள் வாழ்கையின் முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களின் வாழ்க்கை பற்றி நன்கு அறிந்து அவர்கள் செய்வதைப் போல நீங்களும் செய்யுங்கள்.
3. உங்கள் மனப்பாங்கு மாற்றம் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் மனப்பாங்கு மாற்றத்தால் நீங்கள் அடையும் நிலையைக் கற்பனை செய்து பார்த்து அந்த நிலையில் உங்களை நீங்களே உங்கள் மனத்திரையில் அமர்த்திக் கொள்ளுங்கள். அதில் கிடைக்கும் திருப்தி உங்கள் மனப்பாங்கை மாற்ற உந்து வலுவாக அமையும்.
4. சரியான நண்பர்களைத் தேர்ந்து எடுத்த்க் கொள்ளுங்கள்
மாற்றப்பட வேண்டிய மனப்பாங்க்கிற்கு உகந்த நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அந்த மனப்பாங்கிற்கு விரோதமான நடத்தை கொள்கை உடையவர்களுடன் பழகுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
5. உங்கள் மனப்பாங்கை மாற்றலாம் என நம்பிக்கை கொள்ளுங்கள்
எமக்கும் எமது வெற்றிக்கும் இடையில் பெரும்பாலும் இருப்பது எம்மிடமுள்ள தன்னம்பிக்கை இன்மையே. தன்னம்பிக்கை வளர்பதற்குரிய நூல்களைப் படியுங்கள். அதற்கான பயிற்ச்சிப்பட்டறைகளில் பங்கு கொள்ளுங்கள். தியானம் யோகா போன்றவை உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க பெரிதும் உதவும்.
6. உங்கள் இலக்குகளைப் படிப்படியாக நிர்ணயம் செய்து அவற்றை அடையுங்கள்
உங்களின் மனப்பாங்கை மாற்றச் செய்ய வேண்டியவற்றை பல இலக்குகளாகப் பிரியுங்கள். ஒவ்வொரு இலக்கையும் நீங்கள் அடையும் போது உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.
7. உங்கள் வாழ்க்கையின் கடந்த கால வெற்றி நிகழ்வுகளை உங்கள் மனத்திரையில் மீண்டு ஓட விடுங்கள்
கடந்த காலத்தில் நீங்கள் அடைந்த சிறு வெற்றிகளுக்கான காரணங்களையும் அதற்கான மனப்பாங்குகளையும் நீங்கள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த மனப்பாங்கை மீண்டும் உருவாக்க அல்லது மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.
8. இசையால் உங்களை நீங்களே வசமாக்குங்கள்
நீங்கள் கவலைப்படும் போது கவலையான பாடலகளைக் கேட்காமல் உங்களை ஊக்குவிக்கும் பாடல்களையும் இசையையும் கேளுங்கள். உங்கள் மனப்பாங்குகளை மாற்றக் கூடிய பாடல்கள் நிறை உள்ளன. அதே வேளை உங்களுக்கு தோல்வி மனப்பான்மையை நிரந்தரமாக உங்கள் மனதில் பதிக்கும் பாடல்களும் உண்டு. அப்படிப்பட்ட பாடல்களை கேட்கக் கூடாது.
9. உங்கள் தவறான மனப்பாங்குகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய் பாதிப்புகளை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை நன்கு அலசி ஆராய்வதன் மூலம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் வாழ்க்கையிஅ நன்கு அறிந்து கொள்வதன் மூலம் தவறான மனப்பாங்குகள் எப்படி தோல்வியை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.
உசாத்துணை:
Life Hack, Underground Success, Wiki How, about.com
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment