Thursday, 1 August 2013

சீன அரசியல்வாதிகளைக் காட்டிக் கொடுக்கும் கள்ளக்காதலிகள்

நீண்ட காலமாக சீனப் பொதுவுடமைக் கட்சியின் பெரும் புள்ளிகள் பற்றிய தகவல்களை எடுப்பது நடக்காத ஒன்றாக இருந்தது. இப்போது சீன அரசியல்வாதிகளின் ஊழல்களை அவர்களின் கள்ளக்காதலிகள் காட்டிக் கொடுத்து வருகின்றனர். பொதுவுடமைக்கட்சியின் பெரும்புள்ளிகளின் திருகுதாளங்கள் இணையங்களில் அம்பலமாகின்றது.

ஜீ யிங்னன் என்னும் 26வது சீன அழகி நான்கு ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்த ஃபான் யூ என்னும் சீன அரச ஆவணக் காப்பகத்தின் துணை இயக்குனர் ஏற்கனவே திருமணம் செய்து வளர்ந்த மகன் ஒருவனின் தந்தை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தாள். தானும் ஃபான் யூவும் ஒன்றாக இருந்த பல படங்களை இணையத்தில் பதிவேற்றியதுடன் தனக்காக ஃபான் யூ செய்த ஆடம்பரச் செலவுகளைப்பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளாள்.

ஜீ யிங்னனிற்கு  ஃபான் யூ நாளொன்றிற்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுப்பாராம். முதலாவதாக இருவரும் கடைக்குச் சென்றபோது ஒரு பாவாடைக்கும் சிறுபணப்பையிற்கும் கழுத்துத் துண்டிற்கும் ஃபான் யூ பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் செலவழித்தாராம். அவர்கள் இருவரும் மாதம் $1,500இற்கு வீடு வாடகைக்கு எடுத்து படுக்கை விரிப்புகளுக்கு மட்டும் $16,000இற்கு மேல் செலவழித்தார்களாம்.  பின்னர் ஜீ யிங்னனிற்கு ஃபான் யூ $40,000இற்கு ஒரு வெள்ளி நிற Audi A5 கார் வங்கிக் கொடுத்தார். மொத்தமாக ஃபான் யூ செலவழித்தது ஒன்றரை மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமானதாகும். இந்த விபரங்களையில்லாம் கடித மூலம் பொதுவுடமைக் கட்சிக்கு ஜீ யினன் தெரிவித்தார்.

ஜீயிலும் பார்க்க 17வயது கூடிய ஃபான் தான் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வதாகப் பொய் கூறியுள்ளார். 

சீனாவின் முன்னாள் தலைமை அமைச்சர்  வென் ஜியாபோவும் அவரது குடும்பத்தினரும் அவரது பதவிக்காலத்தில் 2.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் செல்வம் சேர்த்தார் என்பதை அமெரிக்கப் பத்திர்கையான நியூயோர்க் ரைம்ஸ் அம்பலப்படுத்தியது. இதனால் அப்பத்திரிகை சினாவில் தடைசெய்யப்பட்டது அத்துடன் அப்பத்திரிகை இணையவெளித் தாக்குதலுக்கு உள்ளானது.

சீனாவின் எரிபொருள் வளத்துறை அதிகாரி லியூ ரினெனின் ஊழல்களையும் அவரது கள்ளக் காதலி அம்பலப்ப்டுத்தியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.

இப்போது சீனாவில் கள்ளக் காதலிகள் விவகாரங்கள் பெரிதாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது.  நாம் சின்ன வீடு என்பதை சீன மொழியில் “xiao san,” (“little third") சிறிய மூன்றாவது என அழைக்கின்றனர். சீனாவிலேயே மோசமான ஊழல் நடைபெறுவது ஊழல் ஒழிப்புத் துறையில் எனப்படுகிறது.

சீனாவின் ஊழல்களும் அது அம்பலத்திற்கு வருவதும் உலகப் பொருளாதாரத்திற்கு உகந்தவை அல்ல என பிரபல அமெரிக்க அரசியல் பத்தி எழுத்தாளரான தோமஸ் ஃபிரீட்மன் தெரிவித்துள்ளார். சீனாவின் பொருளாதாரம் வளர்ந்த அளவிற்கு அதன் அரச கட்டமைப்புக்கள் வளரவில்லை என்கிறார் அவர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...