Friday, 23 August 2013
செங்கோட்டைத் தாண்டிய சிரியாவும் தன் கோட்டிற்குள் நிற்கும் அமெரிக்காவும்
சிரிய உள்நாட்டுப் போரில் அதிபர் பஷார் அல் அசாத் வேதியியல் படைக் கலன்களைப் பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும். அதன் பின்னர் அமெரிக்கா சும்மா இருக்க மாட்டாது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சரியாக ஓராண்டுக்கு முன்னரே தெரிவித்திருந்தார்.
ஆனால் பல தடவை சிரியா செங்கோட்டைத் தாண்டிவிட்டது.
2013 ஜூனில் சிரிய உள்நாட்டுப் போர் ஆட்சியாளர் அசாத்த்திற்கு சாதகமாக மாறி தற்போது ஒரு தேக்க நிலையில் இருக்கிறது.
சிரியாவில் சரின் குண்டுகள் பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை அங்கிருந்து கடத்தி வந்ததாக பிரான்ஸும் பிரித்தானியாவும் ஏற்கனவே தெரிவித்திருந்தன. அசாத்தின் படைகள் வேதியியல் படைக்கலன்களைப் பாவித்ததாக 2013 ஏப்ரல் மாதத்தில் இருந்து செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அசாத் வேதியியல் படைக்கலன்கள் பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டியதாக அமையும் என்று பலதடவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரித்திருந்தார். ஒரு துளி சரின் ஒரு ஆளைக் கொல்லக் கூடியது. ஆனால் அமெரிக்கா இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தி எக்கோனொமிஸ்ற் சஞ்சிகை ஆகஸ்ட் 21-ம் திகதி சிரியாவில் நடந்த வேதியியல் குண்டுத்தாக்குதல் செங்கோடு தாண்டுதல் இல்லை என்றால் எது செங்க்கோடு என்று கேள்வி எழுப்பியுள்ளது.
சிரியாவிற்கு எதிரான படை நடவடிக்கையை பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. ஆனால் அமெரிக்கா ஒரு படை நடவடிக்கை பற்றி எதுவுமே தெரிவிக்காமல் இருப்பதற்குப் பல காராணங்கள் இருக்கின்றன:
1. சிரியக் கிளர்ச்சிக்காரர்களிடை அல் கெய்தா ஆதரவு ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினரின் இருப்பது அமெரிக்காவின் தயக்கத்திற்குக் காரணம் எனச் சொல்லபடுகிறது. தனது தலையீடு இசுலாமியத் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் என அமெரிக்கா கருதுகிறது.
2. சிரியாவாலோ அதன் அதிபர் அசாத்தாலோ அமெரிக்காவிற்கு எந்த ஆபததோ எதிர்ப்போ இல்லை.
3. அசாத் ஆட்சியில் இருப்பதை இஸ்ரேல் விரும்புகிறது.
4. சிரியாவில் இருதரப்பல்ல பல தரப்புக்கள் இருக்கின்றன. சிரியக் கிளர்ச்சிக் காரர்களிடையே பல தரப்புக்கள் இருப்பது மட்டுமல்ல அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, துருக்கி, கட்டார், ஜோர்தான் ஆகிய நாடுகள் அமெரிக்காவிடமிருந்து வேறு வேறுபட்ட அணுகு முறைகளை எதிர்பார்க்கின்றன.
5. லிபியாவில் விமானத் தாக்குதல் செய்தது போல் சிரியாவில் இலகுவாகச் செய்ய முடியாது. சிரியாவிடம் இரசியாவிடமிருந்து வாங்கிய வலிமை மிக்க விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருக்கின்றன. தொலை தூர எவுகணைகள் பாவித்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவர்.
6. ஐநா பாதுகாப்புச் சபையில் சிரியாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சீனாவோ அல்லது இரசியாவோ அனுமதிக்காது.
7. அசாத் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பின்னர் அதிக இரத்தக் களரி ஏற்படும்.
அசாத் நீ அதிஷ்ட சாலியடா!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment