சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் மக்கள் தொகைக் கட்டமைப்பு மிகவும் இளமையானது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரத்திற்கு வளர்ச்சி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இந்தியக் கிராமங்களும் தொழில் நுட்பமும் வளர்வதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. இப்படி இருக்கையில் ரூபா ஏன் இப்படித் தலைகீழாக விழுகிறது. இந்திய ரூபாவின் மதிப்புச் சரிந்தமைக்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது:
1. அமெரிக்க டாலரின் மதிப்புக் கூடியது
இந்திய ரூபாவின் மதிப்பு குறைந்தமைக்கு ஐக்கிய அமெரிக்க டாலர் மதிப்புக் கூடியதால் எனக் காரணம் கூறப்படுகிறது. அண்மைக்காலங்களில் அமெரிக்க டாலரின் மதிப்பு 1.9 விழுக்காடு மட்டுமே உயர்ந்தது. ஆனால் இந்திய ரூபாவின் மதிப்பு அமெரிக்கப் பொருளாதாரம் 2013 இல் 1.7விழுக்காடு மட்டுமே வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியப் பொருளாதாரம் அதிலும் பார்க்க மூன்று மடங்கிற்கு மேல் 5.6 விழுக்காடு வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இருந்து முதலீட்டை விற்ற வெளி நாட்டு நிறுவனங்கள் ஐக்கிய அமெரிக்காவில் முதலிடாமல் லத்தின் அமெரிக்க நாடுகள்ல் முதலிடுகின்றனர்.
2. தங்க இறக்குமதி அதிகரித்தமை.
தங்க இறக்குமதி அதிகரித்தமைக்குக் காரணம் அரசு மக்கள் மத்தியில் புழங்கிய பணத்திற்கு சரியான முதலீட்டு வாய்ப்புக்களை கிராமங்கள் தோறும் வங்கிகளைத் திறந்து வங்கிப் பழக்கத்தை மக்கள் மத்தியில் வளர்க்காமல் விட்டதே.
3. இந்தியாவின் இறக்குமதி அதிகரித்தமை
இந்தியாவின் இறக்குமதி சடுதியாக அதிகரிக்கவில்லை. படிப்படியாகத்தான் அதிகரித்துக் கொண்டு போகிறது. ஆனால் ரூபாவின் மதிப்பு மூக்குடைபட விழுகிறது.
உண்மையான காரணம் - இந்தியா நாணயப் போர் செய்யவில்லை.
2010இல் இருந்து பல நாடுகள் தமது நாணயங்களின் மதிப்பை போட்டி போட்டுக் கொண்டு குறைத்தன. இதை நாணயப் போர் என பொருளியலாளர்கள் குறிப்பிட்டனர். ஒரு நாடு மற்ற நாடுகளில் தனது உற்பத்திப் பொருட்களை மலிவு விலையில்
சந்தைப் படுத்துவதற்காக தனது நாட்டின் நாணயத்தை மற்றைய நாடுகளின்
நாணயத்தினுடன் ஒப்பீட்டளவில் மதிப்பைக் குறைத்து வைத்திருக்க
விரும்புகிறது. இந்த சொந்த நாணய மதிப்புக் குறைப்பை பல நாடுகள் போட்டி
போட்டுக்கொண்டு செய்யும் போது நாணயப் போர் உருவாகிறது. இந்த நாணயப் போரை ஆரம்பித்ததும் சீனாதான் அதில் வெற்றி பெற்றதும் சீனாதான். ஆனால் இந்தியா தனது நாணயத்தின் மதிப்பை உண்மை மதிப்பிலும் பார்க்க அதிகமாக வைத்திருந்தது.
இந்தியாவில் இரு அதிகார மையங்கள்
இந்தியா ஏன் தன் ரூபாவின் மதிப்பை உண்மை நிலையிலும் அதிகமாக வைத்திருந்தது?
இந்த கேள்விக்கு விடையை அறிய இந்தியாவின் அதிகார மையங்களைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இரு அதிகார மையங்கள் இருக்கின்றன. ஒன்று மன்மோஹன் சிங் தலைமையிலான மந்திரி சபை. மற்ற அதிகார மையம் சோனியாவின் வீட்டில் இருக்கிறது. இதில் அவரது மலையாளி ஆலோசகர்கள் காங்கிரசுக் கட்சிக்கு நிதி உதவி செய்யும் பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். இந்தப் பெரும் பணக்காரர்கள் அதிகரித்த ரூபாவின் மதிப்பால் இரு வகையில் நன்மை அடைகிறார்கள். ஒன்று இந்தப் பெரும் பணக்காரர்களின் உற்பத்தித் துறைக்கு வெளிநாட்டில் இருந்து மலிவான விலையில் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு இந்திய ருபாவின் மதிப்பு அதிகரித்து இருத்தல் அவசியம். இரண்டாவது அந்தப் பெரு முதலாளிகள் ஈட்டும் இலாபத்தை கொண்டு போய் வெளிநாட்டு வங்கிகளில் போடுவதற்கு இந்திய ரூபாவின் மதிப்பு அதிகமாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டு நாணயங்களை மலிவாக வாங்கலாம். இந்த இரு காரணங்களுக்காக இந்திய ரூபாவின் மதிப்பை உண்மை மதிப்பிலும் பார்க்க அதிகமாக வைத்திருந்தார்கள். இது இந்தியப் பொருளாதாரம் 9 விழுக்காடு வளர்ச்சியடையும் போது தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் வளர்ச்சி 6விழுக்காட்டிலும் குறையும் போது தாக்குப் பிடிக்க முடியாத ஒரு நிலை வந்துவிட்டது. இதனால் இந்திய ரூபாவின் மதிப்பை நிதிச் சந்தை தானாகத் தீர்மானிக்கத் தொடங்கிவிட்டது.
நேர்மையான முதலாளித்துவப் பொருளாதாரமே நன்மை தரும்
முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வளங்கள் திறமையாக பயன்படுத்தப்படும் எனப்படுகிறது. வளங்கள் திறமையாகப் பயன்படுத்தப்படுவதற்கு நேர்மையான ஆட்சி அவசியம். ஊழல் நிறைந்த ஆட்சியின் கீழ் வளங்கள் பயன்படுத்தப்படுவதை இலஞ்சமே தீர்மானிக்கும். இதுதான் இந்தியாவில் நடக்கிறது. இந்தியப் பெரு முதலாளிகளின் அடுத்த தலைமுறையினர் இலண்டனிலோ லொஸ் ஏஞ்சல்ஸிலோ தான் குடியேறி வாழப்போகிறார்கள் அவர்களுக்கு இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலையில்லை.
இந்திய ரூபாவின் மதிப்பிறக்கம் நன்மை பயக்கும்
இந்திய ரூபாவின் மதிப்பு உரிய நிலையை அடையும் போது இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்ல வாய்ப்புண்டு. அதற்கு ஒரு நல்ல ஆட்சி அவசியம். இந்திய ஏற்றுமதிகள் அதிகரிக்கும். இந்தியா தொழில் நுட்பத் துறையில் முன்னேற வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பங்காளி அடிப்படையில் இணைந்து முதலீடுகள் செய்ய வேண்டும்.
இந்திய இளைய தலைமுறையாவது விழித்து எழுமா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment