தேங்காய் எண்ணையில் இருக்கும் medium chain triglycerides(MCTs) என்னும் கொழுப்பு வயிற்றுப் பருமனைக் குறைக்கும் என பிரேசிலில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் செய்யப் பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
20இற்கும் 40இற்கும் இடைப்பட்ட வயதுடைய நாற்பது பெண்களை வைத்து இந்த ஆய்வு செய்யப்பட்டது. அவர்களுக்கு ஒரே அளவான கலோரிகளைக் கொண்ட உணவு வழங்கப்பட்டது. அவர்கள் நாளொன்றிற்கு 50 நிமிடங்கள் நடக்க வைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு தேங்காய் எண்ணையும் மறு பிரிவினருக்கு சோயா எண்ணையும் 12 வாரங்கள் கொடுக்கப்பட்டது. தேங்காய் எண்ணை உண்டவர்களின் உடலில் நல்ல கொழுப்பின்(HDL) அளவு கூடியும் கூடாத் கொழுப்பின்(LDL) அளவு குறைந்து இருக்கக் காணப்பட்டது. அவர்களின் வயிற்றின் சுற்றளவும் குறைந்திருக்கக் காணப்பட்டது.
வயிற்றுப் பருமனை தேங்காய் எண்ணை குறைப்பதுடன் அதில் இருக்கும் lauric acid உம் caprylic acid உம் எமது உடலின் நோய் எதிர்ப்பு வலுவை அதிகரிக்கிறது.
இந்த இரு அமிலங்களிலும் இருக்கும் anti-viral and anti-microbial properties நோய்களை எதிர்க்கக் கூடியது.
வயிற்றின் பருமனைக் குறைக்க நீங்கள் செய்ய வேண்டியது இரண்டு மேசைக் கரண்டி தேங்காய் எண்ணையைத் தினம் தோறும் சாப்பிட வேண்டியதுதான். அத்துடன் உங்கள் வழமையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்ச்சியையும் மேற்கொள்ள வேண்டும்.
மற்ற நல்ல கொழுப்புக்களைக் கொண்ட ஒலிவ் எண்ணை சோயா எண்ணை ஆகியவற்றிலும் பார்க்க தேங்காய் எண்ணை சிறந்த பயனைத் தரும் என பிரேசில் பல்கலைக் கழகத்தின் செய்யப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment