கணவன் மனைவியிடையேயான இனிய தாம்பத்திய உறவு கட்டில் சுகத்தையும் கடந்து பல ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியது என விஞ்ஞானிகள் செய்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
1. மன அழுத்தம் குறையும். ஸ்கொட்டாந்தில் 24பெண்களிடையும் 22 ஆண்களிடையும் செய்த ஆய்வில் நல்ல தாம்பத்திய உறவு கொள்பவர்களிடையே மன அழுத்தம் குறைவாகக் காணப்படுவதாக கண்டறியபப்ட்டுள்ளது.
2. Diastolic blood pressure எனப்படும் கீழ் நிலை இரத்த அழுத்தம் நல்ல உடலுறவு கொள்பவர்களிடை குறைந்து காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
3. நோய் எதிர்ப்பு வலு. தாம்ப்பத்திய உறவில் திருப்தியடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு வலு அதிகரிக்கிறது. Immunoglbulin A எனப்படும் நோய் எதிர்ப்பு வலு வாரம் இரண்டு தடவையாவது உடலுறவில் ஈடுபடுவர்களிடை அதிகரித்து இருப்பதாக Wikes Universityஇல் செய்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பலரது உமிழ்நீரில் இருக்கும் Immunoglbulin Aஇன் அளவைப் பார்த்து இந்த ஆய்வு செய்யப்பட்டது.
4. கலோரிகள் எரிக்கப்படும். Los Angeles சேர்ர்ந்த பாலியல் நிபுணர் (Sexologist) Patti Britton உடலுறவு சிறந்த உடற்பயிற்ச்சியாகும் என்கிறார். இதன் மூலம் உடலில் இருந்து கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
5. இருதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். இருபது ஆண்டுகளாக தொடர்ந்து பிரித்தானியாவில் செய்யப்பட்ட ஆய்வின் படி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைக்கு மேல் உடலுறவு கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது
மற்றவர்களிலும் பார்க்க அரைப்பங்கு எனக் கண்டறியப்பட்டுள்ளது.
6. சிறைந்த தன்னம்பிக்கை. டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தில் நல்ல உடலுறவு கொள்பவர்களிடை அதிக தன்னம்பிக்கை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
7. வலி நிவாரணி. ஒரு கட்டியணைப்பில் உடலில் உள்ள Oxytocin அளவு அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது உங்கள் உடலில் ஒரு வலி நிவாரணியாகச் செயற்படும். அதிக Oxytocin தம்பதியர்களிடையான நெருக்கத்தையும் அதிகரிக்கும். அத்துடன் தயாள மனப்பான்மையையும் அதிகரிக்கும்.
8. Prostrate Cancerஇத் தவிர்க்கும். நல்ல உடலுறவு கொள்பவர்களிடையே Prostrate புற்று நோய் வருவது குறையும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
9. நல்ல உறக்கம். தாம்பத்திய உறவில் திருப்தியடைந்தவர்கள் நன்றாக உறக்ன்குகிறார்கள்.
10. அழகான தோற்றம். தாம்பத்திய உறவில் திருப்தியடைந்தவர்கள் முகத்தில் ஒருவகை பூரிப்பு உருவாகி அவர்களின் தோற்றத்தை அது அழகாக்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment