பேராசிரியர் ரொபேர்ட் புலோமின் என்னும் அமெரிக்க விஞ்ஞானி இலண்டன் Kings College இல் தேர்வு முடிவுகளைப் பாதிக்கும் காரணிகளைப் பற்றி ஆய்வு செய்து தனது முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
11, 100 இரட்டைப் பிள்ளைகளின் GCSE தேர்வு முடிவுகளை வைத்து அந்த மாணார்களின் திறமையையும் அவர்களின் பாடசாலை வசதிகளையும் ஆசிரியர்களின் திறமைகளையும் மாணவர்களின் பெற்றோர்களின் திறமையையும் பேராசிரியர் ரொபேர்ட் புலோமின் ஆய்வு செய்தார். இதில் எந்தக் காரணி மாணவர்களின் தேர்வு முடிவுகளுக்குப் பங்களித்தது என ஆய்வு செய்யப்பட்டது.
Kings Collegeஇன் Institute of Psychiatryஇல் அமெரிக்கப் பேராசிரியர் ரொபேர்ட் புலோமின் தனது ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். இவர் மரபியல் தொடர்பான ஒரு நிபுணராவார்.
ஆய்வின் முடிவுல் பேராசிரியர் ரொபேர்ட் புலோமின் மாணவர்களின் தேர்வு வெற்றிகளில் பெற்றோரின் விவேகம் பெரிய பங்காற்றுகிறது என அறியப்பட்டுள்ளது. பெற்றோரின் மரபணு பிள்ளைகளின் வெற்றியில் மூன்றில் இரண்டு பங்களிப்புச் செய்கிறது என பேராசிரியர் ரொபேர்ட் புலோமினின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வருங்காலத்தில் பிள்ளைகளின் மரபணுக்களை ஆய்வு (genetic scanning) செய்வதன் மூலம் அவர்களிடம் இருக்கும் தனிப்பட்ட திறமைகளை இனம் காணக்கூடியதாக இருக்கும் என்கிறார்.அத்துடன் வீட்டுச் சூழல் மாணவர் கல்வியில் சிறிய பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்கிறார்.
இளமையாக இருக்கும்போது பிள்ளைகளின் வெற்றியில் மூன்றில் இரண்டு பங்களிப்புச் செய்யும் அவர்களது மரபணு வளர்ந்த பின்னர் 80% பங்களிப்பைச் செய்கிறது என்றார்.
பாடசாலைக்கு நடந்து செல்லும் மாணவர்கள் வண்டிகளில் செல்லும் மாணவர்களிலும் பார்க்க சிறப்பாகச் செயற்படுகிறார்கள் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணி நடக்கும் போது கிடைக்கும் உடற்பயிற்ச்சியே.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment