கொழும்பிற்கான நோர்வேத் தூதுவராக இருப்பவர் ஒரு பெண்மணி. அவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண் தூதுவர் தனது வாழ்க்கைத் துணையைக் கொழும்புக்க அழைக்க இலங்கை வெளிநாட்டமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது மஹிந்த ராஜபகசவை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது என lankanewsweb என்னும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக் குடியரசுத் தலைவரின் உறைவிடமான அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்த சிங்கள பௌத்த இனவாத அமைப்பான பொது பல சேனா நோர்வேத் தூதுவரின் திருமணத்தையும் அவர் தனது பெண் வாழ்க்கைத் துணையை இலங்கைக்கு அழைப்பது பற்றியும் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.
நோர்வேயில் ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் இலங்கையில் அதற்கு சட்டத்தில் இடமில்லை. 1964-ம் ஆண்டு 60 நாடுகள் வியன்னா உடன்படிக்கையில் கையொப்பமிட்ட போது தன்னினத் திருமணம் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. 12 ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்து முதல் முதலாக ஆண் ஆணையோ அல்லது பெண் பெண்ணையோ திருமணம் செய்ய அனுமதித்தது. கடைசியாக பிரன்ஸ் இதை அனுமதித்தது. கனடா, சுவீடன், ஐஸ்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், போர்த்துக்கல், டென்மார்க் ஆகிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவில் சில மாநில அரசுகளும் தன்னினத் திருமணத்தை அனுமதித்துள்ளன. ஆனால் இது இரு நாடுகளுக்கிடையிலான அரசதந்திரப் பிரச்சனையாக இலங்கையில் உருவெடுத்துள்ளது. வியன்னா உடன்படிக்கையின் 9வது பந்தியின்படி ஒரு நாட்டு அரசு தனது நாட்டுக்கு இன்னும் ஒரு நாடு அனுப்பிய தூதுவரை வரவேற்கப்படாத ஆள் (persona non grata) என்று சொல்லி அவரைத் திருப்பி அழைக்கும் படி அந்தத் தூதுவரை அனுப்பிய நாட்டைக் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் வியன்னா உடன்படிக்கையில் 22 பந்தியின் படி ஒரு நாட்டுக்குள் இருக்கும் வெளிநாட்டுத் தூதுவர் இல்லத்திற்கும் அந்த வெளிநாட்டுச் சட்டம்தான் செல்லுபடியாகும். அதற்கும் நடக்கும் குற்றத்தை அந்த நாட்டுச் சட்டப்படி அந்த நாட்டு அரசுதான் கையாள முடியும். நோர்வேத் தூதுவர் தனது துணைவியுடன் தூதுவர் இல்லத்திற்குள் வாழ்கை நடாத்தினால் அதை இலங்கை சட்டப்படி செல்லுபடியற்றது என்று சொல்ல முடியாது. நோர்வேத் தூதுவர் தனது வாழ்கைத் துணையை தனத் வேலைக்காரி எனக் கூறி இலங்கைக்கு அழைத்தால் இலங்கை அரசு அனுமதி வழங்கியே ஆக வேண்டும். நோர்வேத் தூதுவரை மஹிந்த ராஜபக்ச அரசு வெளியேற்றினால் உலகெங்கும் உள்ள தன்னினச் சேர்க்கையாளர்களின் கோபத்திற்கு உள்ளாக வேண்டி வரும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment