இலங்கையில் சேமிப்புக் கணக்குக்களில் பணத்தை முதலீடு செய்து வைத்திருப்பவர்கள் பண இழப்பைச் சந்திக்க நேரிடலாம் என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.சைப்பிரஸ் நாட்டில் நடந்தது போல் இலங்கையிலும் வங்கிகள் நெருக்கடியை எதிர் கொள்கின்றன. சைப்பிரஸை ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாத்தது போல் இலங்கையைப் பாதுகாக்க யாரும் இல்லை.
இலங்கை வங்கிகளில் முதலீடு செய்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் வங்கிகள் முறிவடையும் நிலையை அடையலாம் என்ற அச்சமே இதற்குக்காரணம் என Lanka News இணையத் தளம் அறிவித்துள்ளது. உமர் குமார் சர்மா என்னும் பிரபல இந்திய முதலீட்டாளர் Nations Trust bank வங்கியில் தனது பங்குகள் அனைத்தையும் 04-04-2013-ம் திகதி விற்பனை செய்தது கொழும்பு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Alex Lowell என்னும் இன்னொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் இலங்கை வங்கிகளில் தனது சகல முதலீடுகளையும் விற்கவுள்ளார் எனச் சொல்லப்படுகிறது.
ஹட்டன் நஷனல் வங்கியினரின் தகவல்களின்படி வங்கியில் பணம் வைப்பிலிட்டவர்கள் தங்கள் வைப்புப் பணத்தை மீளப்பெறுவது வேகமாக அதிகரித்து வருகிறது. அதே வேளை வங்கியில் தற்காலிகக் கடன் பெற்றவர்களிடம் இருந்து கடனை அறவாக்குதல் பெருமளவில் குறைவடைந்துள்ளது. ஒரு வங்கியில் இருப்புக் குறைதலும் அது வழங்கிய கடன்களை அறவிடமுடியாமல் போவதும் அதன் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும். சொத்துக்களை ஈடாக வைத்து கடன் கொடுத்த வங்கிகள் கடன் அறவிட முடியாத நிலையில் சொத்துக்களை பொறுப்பேற்று விற்க முடியாத ஒரு நிலையில் இருக்கின்றன. மோசமான பொருளாதாரச் சூழலில் சொத்துக்களை விற்பது கடினமாக இருக்கிறது.
NRFC கணக்குகள் அம்போ ஆகலாம்.
ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை அரசு வாங்கிய கடன்கள் இதற்கு முன்னர் இருந்த எல்லா ஆட்சியாளர்கள் வாங்கிய கடனிலும் பார்க்க மூன்று மடங்கு என்கிறது Lanka News இணையத்தளம். இந்த நிலையை சைப்பிரஸ் நாட்டின் நிலைக்கு ஒப்பிடுகிறது Lanka News இணையத் தளம். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர் பலர் NRFC கணக்குகளில் பெரும் தொகைப்பணத்தை அதிக வட்டி பெறும் நோக்குடன் முதலிட்டுள்ளார்கள். இலங்கையில் வங்கிகள் முறிவடைந்தால் இவர்களில் முதலீடு ஆப்பத்திற்கு உள்ளாகலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment