Monday 8 April 2013

ஈழத் தமிழர்களுக்கு இன்னும் ஒரு எதிரிக் கும்பல்

ஈழத் தமிழர்களுக்கு சிங்களவர்களிலும் மோசமான எதிரிகள் இந்தியாவில் இருக்கின்றனர். முதலில் காந்தி நேரு குடும்பம் தமிழர்களுக்கு எதிரிகளாக 1987இல் மாறினார்கள். அப்போது இருந்த இந்திய அதிகாரிகள் முதலில் விடுதலைப்புலிகளின் எதிரிகளாக மாறினார்கள். இவர்கள் அப்போதைய இலங்கை அதிபர் ஜே ஆர் ஜயவர்த்தன தன் பக்கம் பல வழிகள் மூலம் தன்பக்கம் இழுத்துக் கொண்டார். அங்கு "தட்சணை" முக்கிய பங்கு வகித்தது.

முதலாம் எதிரி பூனூல் கும்பல்கள்
ஜே ஆர் தன் பக்கம் இந்திய அதிகாரிகளை இழுத்துக் கொண்டது தமிழர்களுக்கு பேரிழப்பின் ஆரம்பக்கட்டமாக அமைந்தது. அதன் பாதிப்பு இன்றுவரை தொடர்கிறது. இந்த அதிகாரிகள் தந்திரமாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துக் கொல்ல முயன்றனர். அதன் பின்னரும் இவர்கள் பல வழிகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையை அழிக்க பல வழிகளில் முயன்றனர். இந்த அதிகாரிகளின் பின்னால் பலம் மிக்க ஒரு பார்ப்பனக் கும்பல் இருக்கின்றனர். இந்தக் கும்பல்களும் சில மலையாளிகளும் நெருங்கிச் செயற்படுகின்றனர். மலையாளிகள் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு உருவாகுவதை விரும்பவில்லை. இந்தக் கும்பல்கள் தங்கள் சாதிய நலன்களுக்காக இந்தியாவின் பிராந்திய நலன்களைப் பலியிட்டன.

இரண்டாம் எதிரியாக காந்தி நேரு குடும்பம்
இந்திய அதிகாரப் போட்டியின் அம்சமாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற பழி ஈழத்தமிழர்களின் தலையில் போடப்பட்டது. ராஜீவ் காந்தியின் கொலையில் ஈழத்தமிழர்கள் பாவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சோனியா காந்தி குடும்பம் ஈழத் தமிழர்களின் எதிரிகளாக மாறியது. வெளிநாட்டினரான சோனியா குடும்பத்தினர் தமது குடும்ப நலனுக்காக இந்தியாவின் பிராந்திய நலன்களைப் பலியிடுகின்றனர்.

புதிய எதிரிக் கும்பல்
ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகக் கூட்டங்களில் அமெரிக்கா சமர்ப்பித்த தீர்மானங்கள் தொடர்பாக இந்தியாவின் ராசதந்திரிகள் நடந்து கொண்ட விதம் நரித்தனத்தின் உச்சக்கட்டம். ஆனாலும் இலங்கை இந்தியா தனது பக்கம் முழுமையாக இருக்கவில்லை என்ற ஆத்திரமடைந்தது. தமிழ்நாட்டில் 2013 மார்ச் மாதம் உருவான மாணவர்களின் எழுச்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் கூட்டணியில் இருந்து வாக்கு வேட்டைக் காரணங்களுக்காக வெளியேறி காங்கிரசு ஆட்சியை ஆட்டம் காணவைத்தது. இத்துடன் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஐபிஎல் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கு பெறாமல் தமிழ்நாடு அரசு தீர்மானம் எடுத்தது சிங்களவர்களையும் பல இந்தியர்களையும் கடுமையாக ஆத்திரப்படுத்தியது. வட இந்திய ஊடகங்களில் பல ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரிகள், போன்ற பலர் மாணவர் எழுச்சி, திமுகாவின் புது நிலைப்பாடு, ஐபிஎல் தடை ஆகியவற்றால் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இவர்களின் ஆத்திரத்திற்கான காரணம் தேடுகையில் ஈழத் தமிழர்களுக்கு ஒரு புதிய எதிரிகள் உருவாகி இருப்பதை உணரக் கூடியதாக இருக்கிறது. அவர்கள்தான் 2009இன் பின்னர் இலங்கையில் முதலீடுகளைச் செய்த இந்திய முதலாளிகள். இவர்களின் முதலீட்டின் பாதுகாப்பிற்கும் இலாபத்திற்கும் இலங்கை இந்திய நல்லுறவு முக்கியம்.  இவர்களைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்களுக்கு கொஞ்சமாவது சாதகமாக இந்தியா நடந்து கொள்ளக் கூடாது. இலங்கை சீனாவின் பக்கம் சாயக் கூடாது என்ற விவாதத்தை வெற்றீகரமாக முன்வைத்த இந்த முதலீட்டாளர்கள்களின் கைக்கூலிகள் இப்போது புதிதாக ஒரு விவாதத்தையும் முன் வைக்கின்றார்கள். இலங்கையின் மனித உரிமை மீறல்களை இந்தியா தூக்கிப் பிடித்தால் காஷ்மீரில் இந்தியாவின் மனித உரிமை மீறல்களை பாக்கிஸ்த்தான் தூக்கிப் பிடிக்கும் என்பதே அவ்விவாதம். இது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு Same side goal அல்லது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போன்றதாகும். ஈழத் தமிழர்களின் எதிரிகளாக மாறியுள்ள இந்த இலங்கையில் முதலிட்டுள்ள இந்தியர்களின் கும்பல் தமது முதலீட்டை பாதுகாக்க இந்தியாவின் பிராந்திய நலன்களையும் பலிகொடுக்கின்றனர். இவர்களில் அநேகருக்கு இந்தியாவில் இரண்டாவது வதிவிடம் மட்டுமே இருக்கிறது. இவர்களின் முதலாவது வதிவிடம் இலண்டன் அல்லது நியூயோர்க்கில் இருக்கிறது. இவர்களது அடுத்த தலைமுறை இந்தியாவைப் பற்றிக் கவலைப்படாத ஒரு கும்பலாகவே இருக்கும். இந்திய வர்த்தக மற்றும் தொழிற் சபைகளின் கூட்டமைப்பு இந்தியப் பாராளமன்றக் குழுவினரை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்தது இந்த மூன்றாம் எதிரிகளின் ஒரு செயற்பாடே. இந்தப் பாராளமன்றக் குழுவில் ஆளும் கட்சியான காங்கிரசுக் கட்சியின் தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்கள் கூட இடம் பெற மாட்டர்கள். இந்தப் பாராளமன்றக் குழுவை இலங்கைக்கு அனுப்பி இலங்கை இந்திய உறவை இலங்கை அரசின் "கவனிப்பின்" மூலம் வளர்க்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த நடவடிக்கை தேர்தல் வாக்கு வேட்டையைப்பாதிக்கும் என்பதால் பின்னர் கைவிடப்பட்டதாக அறியப்படுகிறது.

இலங்கையில் இந்திய முதலாளிகளின் முதலீடு 2008இல் இருந்து பெரும் அதிகரிப்பைக் கண்டது. தமிழர்களுக்கு எதிரான இந்தியர்களின் நிலைபபாட்டுக்கும் இந்த முதலீட்டு அதிகரிப்புக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.


பிராந்திய நலன்கள் பலியிடப்பட்டதா?
பாக்கிஸ்த்தானைப் பிரித்து பங்களாதேசத்தை உருவாக்கியது, சீக்கிமை இந்தியாவுடன் இணைத்தது, பூட்டானை இந்தியாவின் ஒரு செய்மதி நாடாக்கியது நேப்பாளத்திலும் மாலைதீவிலும் தனக்கு சாதகமான ஆட்சியாளர்களை வைத்திருந்தது, அமெரிக்கக் காலூன்றலை தமிழ் போராளிகளுக்கு படைக்கலன்கள் பயிற்ச்சி போன்றவை வழங்கித் தடுத்தது  என இந்தியா தனது பிராந்திய ஆதிக்கத்தை 1987வரை வலுப்படுத்திக் கொண்டிருந்தது. 1987இன் பின்னர் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்தியாவை ஆளும் குடும்பம், இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள், இந்தியப் பெரு முதலாளிகள் ஆகியோர்  ஈழ விடுதலைக்கு மட்டும் எதிரிகள் அல்லர் இவர்கள் இந்திய நலன்களுக்கும் எதிரானவர்கள் என்பதை பாக்கு நீரிணையின் இரு புறத்திலும் இருக்கும் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் அவர்கள் தமது புதிய எதிரிகளான இலங்கையில் முதலீடு செய்துள்ள இந்தியக் கும்பல்களுக்கு எதிராகவும் போராட வேண்டும்.

1 comment:

Anonymous said...

MUTHAL ETHIRI VARALARU THERIYATHA TAMIL BARBARNARKALUM,AVARKALIN KAIKOOLIKALANA MALYALI VELIYURAVU THURAI ADHIKARIKALUM THAN,ITHAN VILAIVU INNUM SILA NATKALIL CHINAKARAN ILANKAIYAI AAKIRAMITHA PIRAKU THAN THERIYUM.IPPO YEPPADI KACHA THEEVU KODUTHU VITTHU THINARUKIROM ADHUPOLA VIRAVIL THINARUVOM

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...