அம்புலிமாமா சஞ்சிகையின் பிரபல பாத்திரமான விக்கிரமாதித்தன் பெயர் கொண்ட இந்தியாவின் விமானம் தாங்கிக் கப்பலான INS Vikramaditya பலதடவை முருக்க மரம் ஏறி இப்போது இரசியாவின் Sevmash shipyardஇல் இறுதி வேலைகளை எதிர் கொண்டிருக்கிறது. இரசியாவின் விமானம் தாங்கிக் கப்பலான Admiral Gorshkov வை புதுப்பித்து பல நவீன போர் படைகலன்கள் தொடர்பாடற் கருவிகளையும் பொருத்தி விக்கிரமாதித்தயா உருவாகிக் கொண்டிருக்கிறது.
இரசியக் கடற்படையில் 1987இல் இணைந்து கொண்ட Admiral Gorshkov பனிப்போர் முடிவிற்கு வந்த பின்னர் பெரும் பராமரிப்புச் செலவைத் தவிர்ப்பதற்காக 1996இல் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டது என இரசியா சொன்னது. ஆனால் ஒரு தீவிபத்தில் சேதமடைந்த Admiral Gorshkov ஒரு கரையில் இருந்து துருப்பிடித்துக் கொண்டிருந்தது. இதில் இந்தியக் கடற்படையினர் தமது கண்ணை வைத்தனர். நீண்டகால பேச்சு வார்த்தைகளின் பின்னர் 2004-ம் ஆண்டு Admiral Gorshkov வை இரசியா புதுப்பித்து இந்தியாவிற்கு விற்பதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. Admiral Gorshkov வை இரசியா இந்தியாவிற்கு இலவசமாக வழங்கும் என்றும் புதுப்பித்தற் செலவாக 800 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பொருத்தும் படைக்கலன்களுக்கும் போர் விமானங்களுக்கும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களும் இந்தியாவிடமிருந்து இரசியா அறவிடுவதாகவும் ஒப்பந்தம் கூறியது. 12 ஒற்றை இருக்கை மிக்-29 விமானங்களும், 4 இரட்டை இருக்கை மிக்-29 விமானங்களும் விக்கிரமாதித்தியாவில் இருக்கும்.
விக்கிரமாதித்தியாவின் முக்கிய அம்சங்கள்
எடை 45,400 tons full load
நீளம்: 283.1 m
அகலம்: 51.0 m
ஆழம்: 10.2 m
உந்துவலு: 4 shaft geared steam turbines, 140,000 hp
வேகம்: 32 knots
வீச்சு: 13500 miles at 18 knots
சுடுகலன்கள்: 8 CADS-N-1 Kashtan CIWS guns
விமானங்கள்: 16 Mikoyan MiG-29K
உழங்குவானூர்திகள்:Ka-28 helicopters ASW, Ka-31 helicopters AEW, HAL Dhruv ஆகியவற்றில் பத்து.
விமானம் இறங்கும் இடம்: 273m flight deck
விக்கிரமாதித்தயாவின் மிகப்பெரும் பலம் அதன் கதுவித் (Radar) திறனாகும்.
முருக்க மரம் ஏறிய விக்கிரமாதித்தயா.
2008-ம் ஆண்டு கட்டி விக்கிரமாதித்தயா முடிக்கப்படுவதாக இரசியா உறுதி அளித்திருந்தது. இந்தியாவின் விராட் விமானம் தாங்கிக் கப்பலுக்கு ஓய்வு கொடுத்து அந்த இடத்தில் விக்கிரமாதித்தயா சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் 2008இல் விக்கிரமாதித்தயா தாயாரில்லை. தயாராக்க மேலும் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வேண்டும் என இரசியா அடம் பிடித்தது. இந்தியக் கணக்காய்வாளர்கள் விக்கிரமாதித்தன் வெள்ளை யானையாகிவிட்டான் என்றனர். இந்தியக் கடற்படையினர் எதையும் கருத்தில் கொள்ளாமல் மொத்தச் செல்வாக 2.35 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு முடிக்க ஒத்துக் கொண்டனர். 2012இல் விக்கிரமாதித்தயா தயாராகிவிடும் என இரசியா 2009இல் சொன்னது. பின்னர் இரசியா முடிவடையும் திகதி பற்றி எதுவும் சொல்லவில்லை என்றது.
2008-ம் ஆண்டு நீரில் இறங்கிய விக்கிரமாதித்தயா சரிவரச் செயற்படவில்லை. மீண்டும் காய்ந்த தளத்திற்கு (Dry Dock) திரும்பியது. 2012இலும் இதே கதைதான்.
இறுதியில் இரசியா விக்கிரமாத்திதயாவை 2013 நவம்பரில் விநியோகம் செய்வதாக உறுதி அளித்துள்ளது. உலக அயோக்கிய நாடுகளில் ஒன்றான இரசியா சொன்ன திகதிக்குப் பணிகளை முடிக்காமல் செலவை அதிகரித்து அதிக பணத்தை அறவிடும் என்பது உலகறிந்த உண்மை. தன் முயற்ச்சியில் இந்தியா சற்றும் மனம் தளராமல் இருக்கிறது. இரசியாவின் இழுபறியால் இந்தியா ஒரு கட்டத்தில் விமானம் தாங்கிக் கப்பல் ஏதும் இல்லாமல் இருந்தது.
விக்கிரமாதித்தயா கட்டப்படும் Sevmash shipyard இன் அளவு ஒரு பிரச்சனை விக்கிரமாத்தித்தியாவைப் பொறுத்த வரை சிறியதாகும். Sevmash shipyard இன்sluice gate ஆனது விக்கிரமாதித்தயாவின் அகலத்திலும் பார்க்க சில மில்லி மீட்டர்கள் மட்டுமே அகலமானது. விக்கிரமாதித்தயாவின் கட்டுமானத்தைக் கவனிக்கும் இந்திய அதிகாரிகளான Suraj Berryயும் Kudaravalli Srinivasம் கட்டுமானப் பணி சிறப்பாக நிறைவேற்றப்படுவதாகச் சொல்கின்றனர். 2010இல் இரசியா சென்ற சில அதிகாரிகளும் இதைத்தான் கூறியிருந்தனர். 2013 இறுதியில் இந்தியக் கடற்படையில் விக்கிரமாதித்தயா சேவையில் ஈடுபடுத்தப்படும்.
2011இல் 152 இந்தியக் கடற்படையைச் சேர்ந்த கப்பலோட்டும் தொழில்நுட்பவியலாளர்கள் இரசியா சென்று விக்கிரமாதித்தயாவை ஓட்டும் பயிற்ச்சி பெறுகிறார்கள்.
விக்கிரமாதித்தயாவைப் பற்றி அறிய முற்படுவதும் அம்புலிமாமாக் கதையில் புதையல் தேடிப் போவதைப் போலவே. புதையல் கிடைக்காமல் வேறு ஏதோ எதோ எல்லாம் கிடைக்கும். விக்கிரமாத்திதயாவைப் பற்றி அறிய முற்பட்டால் அதன் விநியோகத் திகதியுலும் மொத்தச் செலவிலும் இரசியா செய்யும் குளறு படிகள்தான் அதிகம் கிடைக்கும். இந்திய அதிகாரிகளுக்கு இரசியா கையூட்டுக் கொடுத்த கதை வேறு உண்டு. நான்கு ஆண்டுகளில் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்க வேண்டிய கப்பல் ஒன்பது ஆண்டுகளில் 2.35பில்லியன் டாலர் செலவில் முடிக்கப்படவிருக்கிறது.
விக்கிரமாதித்தயாவை பிரெஞ்சு விமானம் தாங்கிக் கப்பலுடன் சிலர் ஒப்பிடுவர்: The 43,000t FNS Charles de Gaulle nuclear-powered aircraft carrier is about the same size, with a 40-plane complement leans heavily to fighter jets. In contrast, Carriage ranges given for the refitted Vikramaditya seem to average 12-24 fighters and/or 4-16 of the compact Ka-28/31 helicopters; diagrams seem to suggest total stowage space for a “footprint” of no more than 15-16 MiG-29Ks, with each Kamov helicopter sporting a comparative footprint of about 0.4, and about 10 open footprint spots on deck.
பாக்கிஸ்த்தானிய இணையத் தளம் இந்தியாவின் விக்கிரமாதித்தியாவையும் சீனாவின் லியோனிங்கையும் இப்படி ஒப்பிடுகிறது:
And planned armament of Liaoning are,
- 4 x 18 cell FL-3000N (72 missiles)
- 3 x 30mm Type 1030 CIWS
- 2 x 240mm ASW launchers (10 barrels ea)
- 4 x Decoy/Chaff (24 barrels ea)
While Vikramaditiyas armaments are,
- 3 X 24 SA-N-9 SAM
- 4 X 32 CADS-N-1 SAM/CIWS
- 4 X AK-630 30mm CIWS
-2 X 12 ASW RBU-6000
தனது இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை சீனா உருவாக்க விருக்கிறது. சீனாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் நீண்ட கடல் எல்லையைக் கொண்ட் இந்தியாவிற்கு சீனாவின் முத்து மாலைத் திட்டத்தையும் இலங்கையில் சீனா அமைக்கும் லோட்டஸ் கோபுரத்தையும் சமாளிக்க வலு மிக்க கடற்படை இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது.
பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய பதிவு: நீர்மூழ்கி
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment