Thursday, 25 April 2013

சீனாவின் அடுத்த விமானம் தாங்கிக் கப்பல்

சீனாவின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பல் Liaoning
சீனா தனது இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கவிருக்கிறது என்று சீனக் கடற்படையின் 64வது ஆண்டு விழாவில் உரையாற்றிய இரண்டாம் நிலைத் தளபதி சாங் சூ தெரிவித்துள்ளார். இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பல் முந்தையதிலும் பெரிதாகவும் அதிக விமானங்களைக் கொண்டாதகவும் இருக்கும்.

சீனாவின் படைத்துறை முன்னேற்றங்கள்
உலகிலேயே அதிக அளவு படையினரைக் கொண்ட மக்கள் விடுதலைப் படை எனப்படும் சீனப் படை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் 2050 ஆண்டு உலகின் மிகப்பெரிய படையாகத் திகழும் நீண்டகாலத் திட்டத்தை ஆரம்பித்தது. அதன்பின்னர் விண்வெளிப்போர் முறை, இணையவெளிப்போர்முறை, உட்படப் பல துறையிலும் வேகமாக முன்னேறிவருகிறது. ஒரு Space Stationஐ அமைத்து அதில் விண்கலங்களை வெற்றிகரமாக இறக்கியது. அமெரிக்காவின் Global Positioning System (GPS)இற்குப் போட்டியாக 15 செய்மதிகளைக் கொண்ட Beidou GPS ஐ உருவாக்கி வருகிறது. உலக நாடுகளில் இரசியாவும் சீனாவும் மட்டுமே அமெரிக்காவின் GPS இல் தங்கியிருக்காத நாடுகளாகும். Global Positioning System (GPS) குடிமக்களுக்கும் படைத்துறையினருக்கும் பயன்படும் ஒரு வழிகாட்டி முறைமையாகும். சீனாவின் Global Positioning System (GPS) அமெரிக்காவிற்கு வர்த்தக ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் சவாலாக அமையும். உலகின் எந்தப் பகுதிக்கும் தனது படையினரை விரைவாக நகர்த்தக் கூடியதாக Y-20 என்னும் பாரிய போர்முனைப் போக்குவரத்து விமானத்தை உருவாக்கியது. ராடார்களுக்கு அகப்படாத stealth fighter விமானத்தின் தனது இரண்டாம் தலைமுறை J31 சீனா உருவாக்கி விட்டது. விண்வெளிப்பயணத்துறையில் பெரும் முன்னேற்றமாக சீனா தனது 120 tonnes rocket engineஐயும் வெற்றீகரமாகப் பரீட்சித்துவிட்டது. சீனா தனது  Z-10 தாக்குதல் உழங்கு வானூர்திகளை பாரிய அளவில்(mass production) உற்பத்திசெய்கிறத

நீர் மூழ்கிக் கப்பல்களில் அதிக கவனம் செலுத்தும் சீனா
சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்களின் வலுவைப் பொறுத்த வரை மற்ற நாடுகளை முந்த முயற்ச்சி செய்கிறது. சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நீர் மட்டத்தின் கீழ் 7000m (22600 feet) சென்று உலக சாதனை படைத்தன. இலங்கையின் மேற்குக் கரையில் தனது  பழைய காலத்தில் மூழ்கிய கப்பல்களை ஆய்வு செய்யவென சீனா இலங்கை அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. அது உண்மையில் இந்தியாவை ஒட்டிய கடற்பரப்பின் ஆழ அகல பரிமாணங்களை அறிந்து அதற்கேற்ப தனது நீர்மூழ்கிகளை வடிவமைக்கும் உத்தியே. இந்தியாவின் எதிர்பைக் கருத்தில் கொண்டு இலங்கை அதற்கு மறுத்து விட்டது. ஆனால் சீனாவால் அந்தத் தகவல்களை வேறு விதமாக இலங்கையில் இருந்து பெறமுடியும்.

சீனாவின் தற்போதைய விமானம் தாங்கிக்கப்பல
சீனாவின் தற்போதைய விமானம் தாங்கிக் கப்பல் Liaoning 50,000 தொன் எடையைக் கொண்டது. அதில் 30 விமானங்கள் இருக்கிறன. அதில் இப்போது சீனாவின் J-15 போர் விமானங்கள் விண்ணெழும்பவும் தரையிறங்கவும் பயிற்ச்சிகள் செய்யப்படுகின்றன.

சீனாவின் அடுத்த விமானம் தாங்கிக் கப்பல் அதனுடன் நீர்மூழ்கிக்கப்பல்கள், ஃபிரிக்கேட் கப்பல்கள், நாசகாரிக் கப்பல்கள், சேவைவழங்கு கப்பல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...