Wednesday 24 April 2013

நகச்சுவைக் கதம்பம்


கண்ணா!!! நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்று உனக்கு எத்தனை தடவை சொல்றது?????

ஒருத்தி: எனது கணவர் ஒரு பிரபல பதிவர் (blogger). எந்த நேரமும் கணனியுடனேயே இருப்பார். உடற்பயிற்ச்சி செய்யக் கூட அவருக்கு நேரமில்லை.
மற்றவள்: என்னத்தைப்பற்றி அவர் எழுதுவார்.
ஒருத்தி: நோயற்ற வாழ்வைப்பற்றி 

சிரிப்பது நோய்க்கு மருந்தாகும். காரணமில்லாமல் சிரித்தால் அது மருந்து தேவைப்படும் ஒரு நோயாகும்.

I hate people who steal my ideas, before I think of them.

பணத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லாததால் பலர் ஏழைகளாக இருக்கிறார்கள். 

கவலைப்படும் போது பாட்டுப் பாடினால் கவலை போகும் என்றார்கள். பாடினேன் என் குரலைக் கேட்டு நானே மிகவும் கவலைப்பட்டேன்.

Silence is the best answer of all questions and Smile is the best reaction in all situations. Unfortunately both never help in VIVA & INTERVIEW.

மனச்சாட்சி பாவம் செய்வதைத் தடுப்பதில்லை. செய்த பாவத்திற்கு வருந்த வைக்கும்.

Love your neighbors who do not protect their wi-fi with password. 

கீழே சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் உண்மை:
மேலே சொல்லப்பட்டிருப்பது பொய்.

பிட் அடிப்பதிலும் பெயில் ஆவது மேல். அரியேர்ஸோடு அலைவதிலும் பிட் அடிப்பது மேல்.

பல டுவிட்டர்களைப் பொறுத்த வரை கணனியுகத்தின் மிகச்சிறந்த கண்டு பிடிப்பு  copy & paste.

வாழ்க்கையின் மோசமான காலம் என்பது ஞாயிற்றுக் கிழமைக்குப் பின்னர் வரும் 5 நாட்கள்.

I always learn from mistakes of others, who took my advice.

அழகி என்ற சொல்லிற்கு வரைவிலக்கணம்: என்னை விரும்பும் பெண்.

கடுப்பேறிய மை லார்ட்
ஒரு கோவிலின் அருகே மதுபானக் கடைதிறந்து நல்ல வியாபாரம் நடந்தது. கோவில் பூசாரிக்கு கடும் கடுப்பு. ஒவ்வொரு நாளும் பூசை செய்யும் போது அந்த மதுபானக் கடை சாம்பலாகப் போகட்டும் என்று வேண்டிக் கொள்வார். ஒரு நாள் மதுபானக் கடை தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிவிட்டது. தனது கடை எரிந்து சாம்பலாகட்டும் என்று பூசாரி பிரார்த்தனை செய்தபடியால்தான் தனது கடை எரிந்து என்று நீதிமன்றத்தில் மதுபானக்கடை முதலாளி வழக்குப் போட்டார். தனது கட்சிகாரரின் பிரார்த்தனையால் மதுபானக் கடை எரியவில்லை. அது ஒரு விபத்து என பூசாரியின் வழக்கறிஞர் நீதி மன்றில் வாதாடினார். கடுப்பேறிய "மை லார்ட்" பூசாரியின் பிரார்த்தனையில் பூசாரிக்கு இல்லாத நம்பிக்கை மதுக் கடைக்காரருக்கு எப்படி வந்தது?" என்றார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...