2011-ம் ஆண்டு சீன வங்கி உலக வங்கிகளுக்கு வழங்கிய கடன் தொகை உலக வங்கியை மிஞ்சி விட்டது. உலக வங்கி 2009-2010இல் உலக நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கிய கடன் 100.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சீன வங்கி வழங்கிய கடன் 110 பில்லியன்கள். சீன வங்கியான சீன அபிவிருத்தி வங்கி உலகிலேயே பெரிய வங்கியாகும்.
ஐக்கிய அமெரிக்காவிற்கு சீனாவின் கடன்
சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு 2012இன் இறுதிய்யில் 3.31ரில்லியன் அமெரிக்க டாலர்கள். ஒரு ரில்லியன் என்பது 1,000,000,000,000. இவற்றை சீனா எங்காவது முதலிட வேண்டும் அல்லது யாருக்காவது கடன்கொடுத்து வட்டி வாங்க வேண்டும். ஐக்கிய அமெரிக்காவிற்கு அதிக கடன் கொடுக்கும் நாடாக சீன திகழ்கிறது. சீனா தனது அப்பாவி மக்களைச் சுரண்டி குறைந்த ஊதியத்திற்கு வேலை வாங்கி
குறைந்த உற்பத்திச் செலவுடன் பொருள்களை உற்பத்தி செய்து அதை உலகெங்கும்
ஏற்றுமதி செய்து 3.2ரில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலவாணி உபரியாக
வைத்துள்ளது. அதன் பெரும்பகுதியான 1.14ரில்லியன் டொலர்களை
அமெரிக்காவிற்கு கடனாகக் கொடுத்துள்ளது. இதன் வட்டிகளை செலுத்துவதனால்
அமெரிக்க பெரும் நிதி நெருக்கடியை எதிர் கொள்கிறது. சீனா தனது
3.2ரில்லியன் டொலர்கள் சொத்தை வைத்துக் கொண்டு உலக அரங்கில் தனது
செல்வாக்கை உயர்த்த முயல்கிறது. தனக்கு எதிரான மனித உரிமைக் குரல்களைத்
திசை திருப்பவும் முயல்கிறது.
ஆபிரிக்காவில் சீனா
1950களில் இருந்தே ஆபிர்க்காவின் சோசலிசக் கொள்கையுடைய ஆட்சியாளர்களுக்கு சீனா கடன் வழங்கி வருகிறது. இக்கடன்கள் இராசதந்திர நோக்கங்களுடனும் வர்த்தக நோக்கங்களுடனும் வழங்கப்பட்டன. கடன் வாங்கிய நாடுகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்தல், சீன அரச நிறுவனங்களுக்கு கடன் வாங்கிய நாடுகளில் முதலீடு செய்ய அனுமதியும் அரச திட்டங்களை நிறைவேற்றும் பணிகளில் ஈடுபடுத்துதலும் கடன் வழங்கும் ஒப்பந்தங்களின் முக்கிய அம்சமாக இருக்கும். இதனால் சீனா ஆபிரிக்காவிற்கான தனது ஏற்றுமதியில் ஐக்கிய அமெரிக்கா, பிரிட்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பின் தள்ளியது. மனித உரிமை மீறல்கள் போன்ற காரணங்களுக்காக உலக வங்கி மற்றும் சில மேற்கு நாடுகள் கடன் கொடுக்க மறுக்கும் நாடுகளுக்கு சீன அதிக வட்டியுடன் கடன் வழங்குகிறது. ஆபிரிக்க நாடுகளை சுரண்டுவதற்கென்று சீன அபிவிருத்தி வங்கி China-Africa Development Fund என்னும் நிதியத்தை உருவாக்கியுள்ளது.
பிரிக்ஸ் நாடுகளுக்கு சீனாவின் கடன்
2012இல் சீன வங்கி அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 1.1 பில்லிபன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியதும் இந்திய மத்திய வங்கியான ரிசேர்வ் வங்கி அதை அங்கீகரித்ததும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. BRICS எனப்படும் பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் சீனா மற்ற நாடுகளுக்கு கடன் வழங்கி வருகிறது. பிரேசிலும் இரசியாவும் சீனாவிடமிருந்து கடன் வாங்கியுள்ளன. இரசியாவின் எரிபொருள் நிறுவனமொன்று 2009இல் சீனாவிடமிருந்து 25பில்லியன் அமெரிக்க டாலர்களை வாங்கியது. கடனில் ஒரு நிபந்தனை சினாவிற்கு இரசியாவில் இருந்து நாளொன்றிற்கு மூன்று இலட்சம் பீப்பாய் எண்ணெய் 20 ஆண்டுகளுக்கு விநியோகிக்க வேண்டும். இரசிய நிறுவனம் அதிக வட்டி கொடுப்பதுடன் எரிபொருளின் விலை நிர்ணயம் தொடர்பாக சீனாவுடன் முரண்படுகிறது. பிரேசிலின் இரும்புத் தாது நிறுவனமான வேல் சீனாவிடம் கடனுக்கு கப்பல் வாங்கியது. கடன் ஒப்பந்தத்தின் படி அக்கப்பல்களில் சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்வதாக இருந்தது. ஆனால் இரும்புத் தாதுகளுடன் சென்ற பிரேசில் நிறுவனம் வேலின் கப்பல்களை சீனக் கப்பல் நிறுவனங்கள் சீனத் துறை முகத்தில் நங்கூர மிட அனுமதிக்க மறுத்தன. இந்தப் பிரச்சனை தீராமல் சில காலங்கள் இழுபட்டது.
லத்தின் அமெரிக்க நாடுகள்
லத்தின் அமெரிக்க நாடுகளுக்கும் சீனா கடன் வழங்கி அதன் மூலம் அந்த நாடுகளின் நிர்மானம் பணிகளில் சீன நிறுவனங்களை ஈடுபடுத்தியும் அங்குள்ள எரி பொருள் மற்றும் பல மூலப் பொருள்களை சீனாவிற்கு விநியோகிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. பல நிர்மானப் பணிகளிற்கு உள்ளூரில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தாமல் சீனாவில் இருந்து சீனர்கள் சென்று வேலை செய்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.......
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment