Sunday, 10 March 2013

ஜெனீவாத் தீர்மானத்தை இலங்கைக்குச் சாதகமாக்கியது இந்தியா

ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் ஐநா மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் அமெரிக்கா கொண்டு வர விருக்கும் தீர்மான முன் மொழிவை இந்தியா மீண்டும் இலங்கைக்குச் சாதகமாக மாற்றியுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து பல தரப்பினரும் இந்தியாவை தமிழர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் படி வற்புறுத்திய போதிலும் இந்தியா இலங்கைத் தமிழர்களின் முதுகில் மீண்டும் குத்தியுள்ளது.

ஜெனிவாத் தீர்மானம் தொடர்பாக செய்தி வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திய வசனத்துடன் அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானம் (US tables Sri Lankan resolution with India line.) என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது:

  • The resolution seeks to ensure that “special procedure mandate holders” tasked to look into human rights violations, work only in consultation with and with the concurrence of Colombo. The provision for taking the Lankan government into confidence was part of the US resolution of March 2012 as well. It had been included at India’s insistence as New Delhi refused an intrusive resolution which could put Sri Lanka’s sovereignty into question.
மனித உரிமைக் கழகத்தின் சிறப்பு நடைமுறை அதிகாரத்துடன் செயற்படுவோர் இலங்கை அரசின் சம்மதத்துடனும் கலந்தாலோசனையுடனும் மட்டுமே செயற்படலாம் என்பதே இந்தியா திணித்த வாசகமாகும்.

இலங்கை அரசின் மீதான விசாரணை எதுவும் இலங்கையில் தலயிடும் தன்மையையோ அல்லது இறைமையைக் கேள்விக்குரியதாக்கக் கூடாது என இந்தியா கருதுகிறது. இந்தியா ஏன் இப்படிச் செயற்படுகிறது என்பதற்கான விடையை 27-02-2012 Times of Indiaஇல் வெளிவந்த செய்தி தருகிறது:

India has more problems with the report of the UN High Commissioner for Human Rights Navi Pillay. Her report, which the US has said it will support, calls for an "independent, international inquiry" into the Lankan actions during the concluding phase of the war against the LTTE. The report also calls for investigations of "violations" of international law. In addition, India is uncomfortable with the idea of special rapporteurs being appointed to visit Sri Lanka, fearing that at some stage it could come back to bite New Delhi.  

"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை மனித உரிமைக்கழகத்திற்கு சமர்பித்த அறிக்கையின் படி இறுதிப் போரில் பன்னாட்டுச் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்று வேண்டும் என்றார். இதற்காக சிறப்பு அதிகாரி இலங்கை செல்ல நியமிக்கப்பட்டால் அது இந்தியாவிற்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதுடன் ஒரு கட்டத்தில் புது டில்லியையும் தாக்கும் என இந்தியா அஞ்சுகிறது." என்கிறது  Times of India.

"இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை வந்தால் அது இந்தியாவையும் குற்றவாளியாகக் காணுமா?" இதற்கான பதில்:

இலங்கையில் 2009 மே மாதத்தில் போர் முடிந்தவுடன் இலங்கையைத் தன் வழிக்குக் கொண்டுவர தன்னிடம் இலங்கைப் படை செய்த போர் குற்ற ஆதாரங்கள் இருப்பதாக இந்தியா இலங்கையை மிரட்டியதாம். பதிலுக்கு மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய தன்னிடம் இந்தியா இலங்கையுடன் நடாத்திய உரையாடல்களின் ஒலிப்பதிவு இருப்பதாகவும் இந்தியா இலங்கையின் போர் குற்றங்களைப் பகிரங்கப் படுத்தினால் தான் அந்த உரையாடல் களைப் பகிரங்கப் படுத்துவேன் என்றும் பதிலுக்கு மிரட்டி இந்தியாவைப் பணியவைத்தாராம். இப்படி The Ground Report India என்னும் ஊடகத்தில் எழுதினார் வீ. எஸ்.சுப்பிரமணியம் என்னும் இந்திய ஆய்வாளர்.


இதில்  இன்னும் ஒரு செய்தியும் அடிபடுகிறது. அதன்படி புது டில்லியின் முடிக்குரிய இளவரசர் பிரபாகரனின் முழுக் குடும்பத்தையும் போட்டுத் தள்ளுங்கள் என கொழும்பை வேண்டியதை கொழும்பில் பதிவு செய்து வைத்திருந்து கொழும்பு மிரட்டுகிறதாம். அதைப் பகிரங்கப்படுத்தினால் இளவரசர் போர் குற்றத்திற்காக மின்சாரக் கதிரையை சந்திக்கலாம். அதுமட்டுமல்ல அவர் அரியணை ஏறவும் முடியாது.

ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறலாம். இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் வரை இலங்கையில் தமிழர்களுக்கு விடிவில்லை.

2 comments:

Anonymous said...

அன்றும் இன்றும் என்றும் இந்தியா ஈழத் தமிழருக்கு அநீதியையே இழைத்து வந்துள்ளது. இன்றும் அது தொடர்கதையே. ஆறரை கோடி தமிழர்களை எதிர்த்து இந்திய செய்யும் இந்தத் துரோகத்திற்கு தமிழத்தமிழர் தான் சரியான தண்டனை இந்திய அரசுக்கு கொடுக்க வேண்டும்.இனியும் நாம் இந்தியர் என்று தமிழர் சொன்னால் அது தமிழருக்கு அவமானம்.

எல்லாளன் said...

ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறலாம். இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் வரை இலங்கையில் மட்டுமல்ல தமிழ் நாட்டு தமிழர்களுக்கும் விடிவில்லை.

பார்ப்பனம் ஈழம் ஏற்பட்டால் தமிழ்நாடு பிரிந்து விடும் என்று பந்தா காட்டியே ஈழத்தை அழித்தது ஆனால் உண்மையில் தமிழ்நாடு பிரிந்தால் தான் ஈழம் உருவாகும் என்பதைத் தான் இந்தியா மறைமுகமாக காட்டியிருக்கின்றது

ஆகவே தமிழகம் சிந்திக்க வேண்டிய நேரம்

சிந்திக்கவும் உங்களுக்கு நன்றிகள்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...