- ஜெனிவாவில் இந்த முறையும் சனல் - 4 தொலைக் காட்சியின் ஆவணப்படம் பல நாட்டுப் பிரதிநிதிகளையும் உலுக்கியுள்ளது. ஆனால் இது அவர்களின் வாக்களிக்கும் தீர்மானத்தில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. சனல் - 4 இன் No Fire Zone ஆவணப்படத்தைப் பற்றி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளேடு இப்படிச் சொல்கிறது:
- குறித்த ஆவணப்படத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த பன்னாட்டு இராஜதந்திரிகள் நெஞ்சை நெகிழவைக்கும் காட்சிகளால் கண்கலங்கினர். இதனால் ஐ.நா. சபை கண்ணீர்க் குளமானது.அதேவேளை, மோதல் தவிர்ப்பு வலயத்துக்குள் மக்கள் படும் அவலங்களை ஆவணப்படத்தின் ஊடாகப் பார்வையிட்ட இராஜதந்திரிகள் சிலர், சோகம் தாங்க முடியாததால் அறையிலிருந்து வெளியே சென்றனர்.
போர்க் குற்றங்களுக்கான ஆதாரம் என தயாரிப்பாளர் கலம் மக்ரே சொல்லித் திரையிட்ட சனல் - 4 இன் ஆவணப்படத்தைப் பார்த்து கண்கலங்கியவர்கள, பார்க்க முடியாமல் எழுந்து வெளியேறிவர்கள் என திரையிடப்பட்ட இடம் கலங்கியது.
நாடுகளின் வாக்களிக்கும் தீர்மானத்தை சனல் - 4 இன் ஆவணப்படம் பாதிக்குமா? உதாரணத்திற்கு பொய்லாந்து என்ற ஒரு நாடு இருக்கிறது என்று எடுத்துக் கொள்வோம். அதன் பிரதிநிதி சனல் - 4 இன் ஆவணப்படத்தைப் பார்த்து அழுகிறார். அதற்காக அவர் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை எதிர்க்க முடியாது. ஏனெனினில் அவரது நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே நல்ல உறவு உண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் பல உறுப்புகளில் பொய்லாந்து போட்டியிடும் போது இலங்கை அவர்களுக்காக வாக்களித்துண்டு. இனியும் அப்படி இலங்கை வாக்களிப்பதற்கு இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றே பொய்லாந்தின் வெள்யுறவுத் துறை அமைச்சு தீர்மானித்து விட்டது. இத் தீர்மானத்தை பொய்லாந்தின் ஐநா மனித உரிமைக் கழகத்திற்கான பிரதிநிதியால் சனல் - 4 இன் தீர்மானத்தைப் பார்த்து மாற்ற முடியாது.
இன்னும் ஒரு உதாரணத்திற்கு கொலைலாந்து என்ற நாட்டைப் பார்ப்போம். அந்த நாட்டின் ஐநா மனித உரிமைக்கழகத்தின் பிரதிநிதி சனல் - 4 இன் ஆவணப்படத்தைப் பார்க்க முடியாமல் இடையில் எழுந்து ஓடிவிட்டார். ஆனால் அவரது நாட்டில் இதிலும் மோசமான கொலைகள் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் நடக்கின்றன. அவற்றை அவர் நன்கு அறிவார். .அவற்றை எல்லாம் அவர் காணொளியில் பார்ப்பதுமில்லை. அந்த கொலைலாந்து அரசின் ஊழியர் அவர். அவரது நாட்டிற்கு எதிரான தீர்மானம் மனித உரிமைக்கழக்தில் வரும்போது இலங்கை பொய்லாந்திற்குச் சாதகமாக வாக்களிப்பதாகவும் பொய்லாந்து இலங்கைக்குச் சாதகமாக வாக்களிப்பதாகவும் ஏற்கனவே உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. பொய்லாந்துப் பிரதிநிதி சனல் - 4 இன் ஆவணப்படத்தைப் பார்த்து தனது வாக்களிக்கும் தீர்மானத்தை மாற்ற முடியாது.
இன்னும் ஒரு உதாரணமாக பனிசுலேவியா என்ற நாட்டைப் பார்த்துக்கொள்வோம். பனிசுலேவியாவின் ஐநா மனித உரிமைக் கழகத்திற்கான பிரதிநிதி ஒரு இளகிய மனம் படைத்த பெண்மணி. அவர் சனல் - 4 இன ஆவணப்படத்தைப் பார்த்து அழுத படி ஓடிவிட்டார். அவரைக் கருத்துக் கூற ஊடகவியலாளர்கள் கேட்ட போது எதுவும் சொல்லாமல் நழுவிக்கொண்டார். பனிசுலேவியப் பிரதிநிதி இரசியாவில் படிக்கும் போது ஒரு தமிழரும் அவருடன் படித்தார். அவருக்கு இலங்கைப் பிரச்சனை பற்றி நல்ல அழிவு உண்டு தமிழர்கள் மேல் நல்ல மதிப்புள்ளவர். தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என்ற கருத்து உள்ளவர். ஆனால் அவரது பனிசுலேவியா நாட்டு அரசு அமெரிக்காவை தனது எதிரியாகக் கருதுகிறது. அவர்களது ஆட்சியாளர்கள் பன்னாட்டு அரங்குகளில் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சிப்பவர்கள். எந்த ஒரு பன்னாட்டு அமைப்பிலும் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு எதிராக பனிசுலேவையப் பிரதி நிதி கடுமையாக எதிர்த்துப் பேசுவார். எதிர்த்து வாக்களிப்பார். இதனால ஐநா மனித உரிமைக் கழகத்திலும் பனிசுலேவியப் பிரதிநிதி அமெரிக்கா இலங்கைக்கு கொண்டு வரும் தீர்மான முன்மொழிவை எதிர்த்துப் பேச வேண்டும். இலங்கையில் போருக்குப் பின்னரான அபிவிருத்தியைப் பாராட்டிப் பேச வேண்டும். அமெரிக்கா இலங்கை மீது தனது ஏகாதிபத்திய வெறியைக் காட்டுகிறது என்று பேச வேண்டும். அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராகவும் இலங்கைகு ஆதரவாகவும் வெனிசுலேவியப் பிரதிநிதி வாக்களிப்பார்.
ஒஸ்ரியா, ஜேர்மனி, அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு தற்போது ஐநா மனித உரிமைக்கழகத்தில் வாக்களிக்கும் உரிமை உண்டு. இவர்கள் சனல் - 4 இன் படத்தைப் பார்த்தார்கள் இவர்களில் ஒருவர் இடையில் கலங்கிப் போய் தண்ணியடிக்கவும் இன்னொருவர் தம்மடிக்கவும் போய் விட்டனர். சென்ற மாதமே ஐரோப்பிய ஒன்றியம் தாம் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிப்பதாக முடிவு செய்து விட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களான ஒஸ்ரியா, ஜேர்மனி, அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகியவை அத்தீர்மானத்திற்கு ஏற்ப இலங்கைக்குப் பாதகமாகவும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களிப்பார்கள். இவர்களின் முடிவு சனல் - 4 இன் ஆவணப்படைத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல.
இலங்கைக்கு ஆதரவு அதிகரிக்கலாம்.
No comments:
Post a Comment