தமிழர்கள் உலகெங்கும் பல நகர்களில் ஆர்ப்பாட்டங்கள் செய்வதுண்டு அதில் பலவிதமான பதாகைகள் தாங்கிச் செல்லப்படும். அதில் 04-3-213-ம் திகதி ஜெனிவா நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பணிமனைக்கு முன்னர் நடந்த பேரணியில் ஜெயலலிதாவின் படம் தாங்கிய பதாகையும் காணப்பட்டது.
இதற்கு முன்னர் ஒரு போதும் அண்ணா திரவிட முன்னேற்றக் கழக நாயகி ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றதில்லை. ஒரு மாவீரர் தின உரையில் அண்டன் பாலசிங்கம் ஜெயலலிதாவை குண்டம்மா என குறிப்பிட்டிருந்தார். தமிழிழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனக்குப் பிடித்த ஊடகவியலாளரான அப்துல் ஜபார் அவர்களுக்கு அளித்த விருந்தில் ஜெயலலிதாவைப் பற்றிச் சொல்லும் போது "அந்த மனுசிக்கு நாங்கள் என்ன பிழை விட்டனாங்கள். அவ ஏன் எங்களுக்கு எதிராகக் கதைக்கிறா?" என்று குறிப்பிட்டிருந்தார்.
2013 பெப்ரவரி மாத இறுதியில் இலண்டன் ஹரோவில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய இலங்கப் பாராளமன்ற உறுப்பினர் அண்மையில் நடந்த முக்கிய மான நிகழ்வுகள் பற்றி அடுக்கிக் கொண்டு போகையில் அன்னை ஜெயலலிதா தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் என்றார்.
ஈழத் தமிழர்கள் பெரிதும் விரும்பும் வை கோபாலசுவாமி அவர்களை ஜெயலலிதா சென்று சந்தித்தார். எமது மிக விருப்பத்திற்குரிய சீமான அவர்கள் ஜெயலலிதாவிற்கு சாதகமாக பேசுவதுண்டு. மாநிலங்களவை உறுப்பினர் மைத்திரேயன் ஆற்றிய உரை பல தமிழின உணர்வாளர்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.
ஆனால் செல்வி ஜெயலலிதா ஆலோசகர் சோ!!!!!!!!!!!!!
04-03-2013 ஜெனிவா பேரணியில் காணப்பட்ட இன்னொரு மாற்றம் அங்கு அமெரிக்கக் தேசியக் கொடிகளும் தாங்கிச் செல்லப்பட்டதாகும். இதற்கு முன்னர் பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா போன்ற நாடுகளின் தேசியக் கொடிகள் தாங்கிச் செல்வதுண்டு. இந்த முறைதான் முதல் தடவையாக அமெரிக்கத் தேசியக் கொடி தாங்கிச் செல்லப்பட்டது. முன்பு ஐக்கிய நாடுகள் சபையின் தேசியக் கொடி பறக்கும். இம்முறை அது இல்லை.
அமெரிக்க இரட்டக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்கா பன்னாட்டு ஒழுங்கை மாற்றியதும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதில் முன்னின்று செயல்பட்டதும் அறிந்ததே.
யார் குத்தியும் அரிசியாகட்டும் என
யார் யாரையோ எல்லாம் நம்பி
நண்பர்களாகி கைகொடுத்தோம்
கடைசியில் குத்து விழுந்தது
எம் முதுகில்
என்றோ ஒரு நாள்
எங்கிருந்தோ
வருவான் ஒருவன்
எமக்காக அரிசி குத்த
என இன்றும் நம்பியிருக்கிறோம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
எம் கையே எமக்குதவி என்பதனை எப்போது நாம் உணரப் போகின்றோம்? நம்பியவர் அனைவரும் கைவிட்டு விட்டு இன்று தமது அரசியல் இலாபங்களுக்காய் எம்மை ஏமாற்றிக் கொண்டு செயற்படுகின்றனர். எம் மக்களின் ஒற்றமையும் எழுச்சியுமே நிரந்தர தீர்விற்கு எமது இலட்சியத்திற்கு வழிசமைக்கும் என்பதனை இனியாவது உணருவார்களா?
Post a Comment