இலங்கைச் சிங்களப் படையினர் என்னை நிர்வாணமாக்கி மிதித்தனர். மாறி மாறிக் கற்பழித்தனர். சிகரெட்டால் என் உடலில் சுட்டனர். மனித உரிமைக் கழகம் அம்பலப்படுத்துகிறது. ஆண்களையும் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய சிங்களப்படையினர்.
அமெரிக்காவில் இருந்து செயற்படும் மனித உரிமைக் கண்காணிப்பகம் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி அறிந்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பதிவு செய்து ஒரு 140 பக்க அறிக்கையைத் தயாரித்துள்ளது. "உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்" எனத் தலைப்பிடப்பட்ட அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் 22வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.75 பேரை மனித உரிமைக் கண்காணிப்பகம் பேட்டி கண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் சட்டவாளர்கள், மருத்துவர்கள், மற்றும் உறவினர்களைச் சந்திக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படாமல் தடுத்து வைத்திருந்து கொடுமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
"Sri Lankan security forces have committed untold numbers of rapes of Tamil men and women in custody," said Brad Adams, the group's Asia director.
இது நல்லிணக்கமல்ல; ஆனால் நாம் வென்று விட்டோம்; நீங்கள் தோற்றுவிட்டீர்கள்; உங்களுக்கு மேல்தான் நாம் என்று சொல்வதாகும். பாலியல் கொடுமைகள் ஒழுங்காக நடைபெற்றன. இது பாரிய துஷ்பிரயோகத்தின் ஒரு பகுதி மட்டுமே இது என்கிறார் ஜோன் சிஃப்ரன் என்னும் மனித உரிமைக்கண்காணிப்பகத்தின் ஆசிய அதிகாரி.
இலங்கையில் ஆய்வு செய்வதற்கு தாம் தடை செய்யப்பட்டதால் இலங்கியில் பாதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடை தாம் ஆய்வுகள் மேற்கொண்டதாகக் கண்காண்பிப்பகம் தெரிவிக்கிறது. இதனால் இது பரவலாக நடந்த ஒரு இனக்கொலையின் ஒரு சிறுபகுதியே இது எனக் கூறலாம்.
மனித உரிமைக் கண்காணிப்பகம் நான்கு ஆண்டுகளாக இது நடக்கிறது என்கிறது. ஆனால் தமிழர்களுக்கு எதிரான வன்முறை 1956இல் இருந்தே நடக்கிறது என்பதை மனித உரிமைக் கண்காணிப்பகம் அறியத் தவறிவிட்டது.
வெளிநாடுகளில் இருந்து தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட தமிழர்கள் பலர் பாலியல் கொடுமை முதல் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர் என்பதை மனித உரிமைக் கண்காணிப்பகம் கோடிட்டுக் காட்டுகிறது.
The violent 26-year war saw ethnic minority Tamil rebels fighting for their own homeland against troops from the Sinhalese majority government. More than 100,000 people were killed on both sides before the government crushed the rebels with a bloody push into rebel-controlled northern areas. A U.N. report has said tens of thousands of civilians were killed in the final five months of fighting alone.
இலங்கை அரசே இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகளான வடக்கிலும் கிழக்கிலும் 90,000 போர் விதவைகள் இருக்கின்றனர் என்று. இறந்த கணவன்மார்கள் மட்டும் 90,000 என்றால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 300,000இற்கு மேல் இருக்கவேண்டும் என்பது உறுதியாகிறது. மனித உரிமைக் கழகத்தின் 100,000 மேல் இருதரப்பிலும் கொல்லப்பட்டனர் என்பது மிகவும் தப்பான கணிப்பீடு.
அயோக்கிய இந்தியாவின் கேடு கெட்ட வெளிநாட்டமைச்சர் இதையும் தன்னால் நம்பகத்
தன்மை உறுதிசெய்யப்படாத ஒன்று என்று சொல்வாரா? இலங்கை தனது நட்பு நாடு
என்று பிதற்றுவாரா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
2 comments:
மற்றவர்களைக் குறை கூறித்திரிவதில் அர்த்தமில்லை. 1956ல் இருந்து தமிழர் அழிக்கப்பட்ட வரலாற்றை ஏன் எம் தமிழ் அறிஞர்கள் அரசியல வாதிகள் உலகிற்கு எடுத்துக் காட்டிவில்லை? எல்லாவற்றையும் வெளிநாடு செய்யும் என்று காத்திருப்பதில் எந்தவித பலனும் இல்லை. இனியாவது அன்மையில் நடந்தவைகளை மட்டுமின்றி காலாகாலமாக தமிழருக்கு சிங்கள இனவாத கொலைவெறியர் இழைத்த இன்னல்களையும் உலகின் முன் கொண்டுவர முயற்சிக்கட்டும். அதுவும் இனவழிப்பிற்கு ஒரு சான்றாக இருக்கும்.
1956 இல் இருந்து உலகிற்கு எடுத்துக் காட்டிக் கொண்டே இருக்கிற்றோம். கேடு கெட்ட் இந்தியா கெடுத்துக் கொண்டே இருக்கிறது.
Post a Comment