84வது ஆஸ்கார் விருதுகள் 24/02/2013 ஞாயிற்றுக் கிழமை அமெரிக்காவின் லாஸ்
ஏஞ்சல்லிஸ் நகரில் வழங்கப்பட்டன. இதில் அரசியலும் கலந்திருப்பதாகக் குற்றச்
சாட்டுகள் எழுந்துள்ளன. ஈரான் ஆர்கோ திரைப்படத்தை சிறந்த படமாகத் தெரிவு
செய்தது அமெரிக்க சிஐஏ உளவு நிறுவனத்திற்கு ஒரு விளம்பரம் எனக்
கூறியுள்ளது.
Academy Awards எனப்படும் ஆஸ்கார் விருது Academy of
Motion Picture Arts and Sciences (AMPAS) என்னும் அமைப்பினால்
வழங்கப்பட்டு வருகிறது. முதலில் 1929-ம் ஆண்டு இது ஆரம்பித்து
வைக்கப்பட்டது. ஹாலிவூட்டில் இருக்கும் ரூஸ்வெல்ற் ஹொட்டலில் முதலாவது
விருது வழங்கும் வைபவம் நடந்தது. ஆஸ்கார் விருது வழங்கும் வைபவம்
நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்புச் செய்யப்படும்.
Academy
of Motion Picture Arts and Sciences (AMPAS) இன் ஆறாயிரம் உறுப்பினர்கள்
விருதுகளுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த ஆறாயிரம்
உறுப்பினர்களும் அவர்களின் திரைப்பட பின்னணிக்கு ஏற்ப வேறுவேறு பிரிவினராக
வகுக்கப்பட்டுள்ளனர். இயக்குனர்களுக்கான பிரிவில் இயக்குனர்கள் மட்டும்
இருப்பார்கள், நடிகர்களுக்கான பிரிவில் நடிகர்கள் மட்டுமே இருப்பர். ஒருவர்
நடிகராகவும் இயக்குனராகவும் இருந்தால் அவர் ஒரு பிரிவில் மட்டுமே இருக்க
முடியும். சிறந்த நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் நடிகர்கள் மட்டுமே
வாக்களிப்பார்கள். சிறந்த இயக்குனருக்கான தேர்வில் இயக்குனர்கள் மட்டுமே
வாக்களிப்பார்கள். இப்படியே பிற பிரிவுகளுக்கும். வாக்களிப்பவர்கள் ஐந்து
பேர்களை விருப்ப அடிப்படையில் நிரைப்படுத்துவார்கள். குறித்த எண்ணிக்கையான
வாக்குகளுக்கு கூட எடுப்பவர்கள் பெயர்கள் விருதுக்கான பரிந்துரையாளர்களாக
(nominee) அறிவிக்கப்படுவர். பிறகு இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இந்தப்
பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் நடக்கும். இப்படி ஐந்து பேரைத்
தெரிந்து எடுக்கும் வரை வாக்கெடுப்புத் தொடரும். பின்னர் இந்த ஐந்து பேரும்
வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒருவர் விருதுக்குத் தேந்தெருக்கப்படுவர்.
தெரிவிற்கு அரசியல் கட்சித் தேர்தல் போல் தீவிரமான பரப்புரைகள்
செய்யப்படும். இதில் ஸ்ரிஃபன் ஸ்பைஸ்பெர்க் போன்ற பிரபலங்கள் அதிக
செல்வாக்குச் செலுத்துவர். வயது போனவர்களும், ஆண்களும், வெள்ளையர்களுமே
இதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒரு திரைப்படத்தின் கலைத்துவ
தராதரங்களிலும் பார்க்க அது ஏற்படுத்திய வசூலே அதிக தாக்கத்தை
ஏற்படுத்தும்.
அண்மைக் காலங்களாக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ
ஹாலிவூட் மூலமாக தன்னை ஒரு நல்ல பிள்ளையாகக் காட்ட முயல்கிறது. இதனைப் பல
திரைப்படங்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது.
ஆஸ்கார் விருது பெற்ற
ஆர்கோ திரைப்படம் ஈரானைக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஈரானுக்கு
எதிரான நடவடிக்கைக்கு ஹாலிவூட் நடசத்திரங்களை சிஐஏ பாவிப்பதுதான் கதை. இது
ஈரானின் புகழைக் களங்கப்படுத்துவதாகவும் சிஐஏயின் புகழை
மேம்படுத்துவதாகவும் இருக்கிறது. ஆர்கோவிற்கு விருது வழ்ங்கியதை ஈரானிய
ஊடகங்கள் சிஐஏயிற்கான விளம்பரம் எனக் கண்டிக்கின்ற்ன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment