கிழக்குச் சீனக் கடலிலே ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் பெரும் முறுகலை ஏற்படுத்திய தீவுக்கூட்டங்களிற்கு சீனா தனது மூன்று ரோந்துக் கப்பல்களை 31-12-2012இலன்று அனுப்பியுள்ளது. ஜப்பான் சென்காகு என்றும் சீனா டயோயு என்றும் அழைக்கும் தீவுக்கூட்டத்தை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களில் 1968இல் எண்ணெய் வளம் இருக்கலாம் எனக் கண்டறிந்ததைத் தொடர்ந்து சீனா அவற்றிற்கு உரிமை கொண்டாடி வருகிறது. கிழக்குச் சீனக் கடலில் மொத்தம் ஐந்து தீவுக் கூட்டங்களிற்கு சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வருகின்றன. 2012 டிசம்பர் ஆரம்பப்பகுதியில் இத் தீவுகளின் வான எல்லைக்குள் வந்த சீன விமானப்படை விமானங்களை ஜப்பானிய விமானங்கள் அலைவரிசைகளைக் குழப்பி திருப்பி அனுப்பின.
கிழக்குச் சீனக் கடலிலும் தென் சீனக் கடலிலும் உள்ள எல்லாத் தீவுகளையும் சீனா தன்னுடையது என்கிறது. இதனால் சீனாவிற்கும் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், தாய்வான், இந்தோனிசியா ஆகிய நாடுகளிற்கும் இடையில் கடும் முறுகல் நிலைகளை ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸுடன் உறுதியாக நிற்கும் அமெரிக்கா தென் சீனக்கடலை மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் என்கிறது.
ஜப்பானும் சீனாவும் இரு பெரும் பொருளாதார வல்லரசுகள். இதனால் சீனாவும் ஜப்பானும் மோதிக்கொள்ளுமா எனற கேள்வி எழுந்துள்ளது. சீனாவின் மோட்டார் உற்பத்தித் துறைக்கு ஜப்பானிய மோட்டார் உற்பத்தித் துறை பெரும் சவாலாக இருக்கிறது. சீனர்கள் தமது நாட்டில் உற்பத்தியாகும் மோட்டார் வண்டிகளிலும் பார்க்க ஜப்பானிய மோட்டார் வண்டிகளை அதிகம் விரும்புகின்றனர். மோட்டார் உற்பத்தித் துறையில் சீனா ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கியே இருக்கிறது. ஆனால் பல துறைகளில் சீனா ஜப்பானுக்கு பொருளாதார ரீதியில் பல சவால்களையும் கடும் போட்டிகளையும் உருவாக்கியுள்ளது. வேகமாக வளரும் சீனா தனக்கு பொருளாதார ரீதியாக மட்டுமல்ல படைத்துறை மற்றும் அரசியல் ரீதியாகவும் அச்சுறுத்தலாக அமையும் என ஜப்பான் கருதுகிறது. இதனால் சீன ஜப்பானிய முறுகல்கள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது.
இந்தியாவை தன்வசம் இழுக்க முயலும் ஜப்பான்
இந்தியாவுடன் தனது உறவுகளை வளர்த்து சீனாவுடனான முறுகலில் தனக்கு உதவியாக இந்தியா இருப்பதை ஜப்பான் விரும்புகிறது. இந்தியாவுடன் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல படைத்துறை ரீதியாகவும் உறவுகளை வளர்க்க ஜப்பான் விரும்புகிறது.
கிழக்கு சீனக் கடலில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் முறுகல்களை உருவாக்கியுள்ள பகுதி 210,000 சதுர கிலோமீட்டர்களைக் கொண்டது. இதில் 970 கி.மீ. நீளப்பகுதி ஒன்று, 495.5 பில்லியன் கன மீட்டர்கள் எரிவாயு மற்றும் 20 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஆகியவை இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறாது. சீனா 2008ம் ஆண்டு உடன்படிக்கையை முறிக்கும் விதத்தில் சர்ச்சைக்குட்பட்ட இடத்திற்கு அருகே தோண்டும் செயல்களைத் தொடங்கியுள்ளதாக டோக்கியோ குற்றம் சாட்டியுள்ளது. இது ஜப்பான் உரிமை கோரும் “பிரத்தியேக பொருளாதாரப் பகுதியில்” இருந்து எரிவாயுவை நிலத்தின் கீழாக உறிஞ்சிவிடும். 2010இல் ஜப்பானிய ரோந்துக் கப்பலுடன் மோதிய சீன மீன்பிடிக்கப்பல் தலைவனை ஜப்பான் கைது செய்தமையில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் மோசமடைந்தது.
கிழக்குச் சீனக் கடலில் சீன ஊடுருவலைக் கண்காணிக்க ஜப்பான் அமெரிக்காவிடம் இருந்து நவீன Global Hawk ரக ஆளில்லா விமானங்களை வாங்க எண்ணியுள்ளது. கிழக்குச் சீனக் கடலிலும் தென் சீனக் கடலிலும் சீனா தனது விரிவாக்கற் கொள்கையை உறுதி செய்ய முயல்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
ஒஸ்ரேலியப் பேராசிரியர் ஹுயூக் வைற் (Hugh White) சீனாவும் ஜப்பானும் 2013இல் மோதிக் கொள்ளும் என எதிர்வு கூறுகிறார். இரு நாடுகளிற்கும் இடையில் படைத்துறை உத்தி ரீதியான தொடர்பாடல் வசதிகளும் அனுபவங்களும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. இதானால் சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் ஜப்பானிற்கு பின் உதவியாக ஐக்கிய அமெரிக்கா இருந்து கொண்டு ஒரு மோதல் நடக்கும் சாத்தியம் அதிகம் உள்ளதாக பேராசிரியர் ஹுயூக் வைற் சொல்கிறார். ஆனால் ஜப்பானின் பொருளாதாரப் பிரச்சனையும் உலக பொருளாதார தேக்க நிலையும் ஒரு போர் செய்ய உகந்த நிலைமை தடுக்கின்றன. அமெரிக்காவின் பின்னணியுடன் கிழக்குச் சீனக் கடலிலும் தென் சீனக் கடலிலும் ஒரு போர் செய்யும் அனுபவம் சீனக் கடற்படைக்கு இல்லை. உலக வல்லரசுகளில் சீனக்கடற்படை மட்டுமே தற்கால கடற்போர் அனுபவம் எதுவும் இல்லாத ஒன்றாக இருக்கிறது. சென்ற ஆண்டுதான் சீனா முதல் முதலாக தனது கடற்படைக்கு விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றை இணைத்துக் கொண்டது. ஆனால் சீனாவால் எவ்வளவு காலம்தான் ஒரு கடற்போர் அனுபவமற்ற நாடாக இருக்க முடியும்?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
போர் என்கிற பெயரில் பாதிக்க படுவது அப்பாவி மக்களே!
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment