மொக்த்தர் பெல்மொக்த்தர் பொருட்களைக் கடத்துவது மட்டுமல்ல ஆட்களையும் கடத்தி வைத்து கப்பம் வசூலிப்பதிலும் பல கோடிகள் சம்பாதித்தவர். இசுலாமிய போராளி அமைப்புக்களிற்கு படைக்கலன்களைக் கடத்திக் கொடுப்பதையும் தனது தொழிலாகக் கொண்டவர் இந்த ஒற்றைக்கண்ணர். வட ஆபிரிக்காவில் செயற்படும் இசுலாமிய போராளிகள் பணயக் கைதிகள் மூலம் 250மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்துள்ளனர் எனக் கருதப்படுகிறது.
மொக்த்தர் பெல்மொக்த்தர் அல் கெய்தாவின் பிராந்தியத் தளபதியாக இருந்தவர். பின்னர் அல் கெய்தாவில் இருந்து விலக்கப்பட்டவர். அவர் தலைமையிலான் போராளிகள் தம்மை குருதிப் படையணியினர் என அழைத்துக் கொண்டு இந்த பணயக் கைதிகளை சிறைபிடித்துள்ளனர். தம்மிடம் ஒன்பது வெளி நாடுகளைச் சேர்ந்த 40 பேர் உட்பட பலரைத் தாம் சிறைப்பிடித்ததாகச் சொன்னார்கள். இவர்கள் தம்மிடம் உள்ள கைதிகளுடன் லிபிய அரச கட்டுப்பாட்டில் இல்லாத லிபியப் பிரதேசத்துக்குள் நுழைய முயன்றனர்.
BP எனப்படும் British Petroleum அலிஜீரியாவில் இயற்கை எரிவாயு எடுக்கும் தொழிற்சாலையின் பணியாளர்கள் 600இற்கு மேற்பட்டோரைஅல் கெய்தாவுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் Katibat Moulathamine என்னும் இசுலாமியப் போராளி அமைப்பு ஜனவரி 16-ம் திகதி இரவு பணயக் கைதிகளாக்கிக் கொண்டது. அவர்களின் நோக்கம் பணம் பெறுவதா அல்லது சிறையில் இருக்கும் தமது போராளிகளை விடுவிப்ப்பதா என்று இது வரை தெரியவில்லை. BPயின் இயற்கை எரிவாயு எடுக்கும் தொழிற்சாலை அலிஜீரியாவில் லிபிய எல்லைக்கு அருகில் உள்ள அமினா என்னும் இடத்தில் இருக்கிறது.
தமது நாட்டுக் குடி மக்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டிருக்கின்றனர் என அறிந்த பிரித்தானியா, அமெரிக்க்கா, ஆகிய நாடுகள் அல்ஜீரிய அரசுடன் தொடர்பு கொண்டு எதாவது படை நடவடிக்கை எடுப்பதாயின் தம்முடன் கலந்து ஆலோசிக்கும் படி கேட்டுக் கொண்டன. ஆனால் இந்த நாடுகளுக்குத் தெரியாமல் அல்ஜீரியா பணயக் கைதிகளை வைத்திருப்போர் மீது தாக்குதலைத் தொடுத்தது.
பணயக் கைதிகளை வைத்திருப்போர் மீது அல்ஜீரியப் படைகள் மேற்கொண்ட தாக்குதல் மிகவும் பணயக் கைதிகளுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருந்தது. இந்தப் படை நடவடிக்கையிட்டு அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அதிருப்தியடைந்துள்ளன. பிரான்ஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் மாலி நாட்டில் அல் கெய்தா தீவிரவாதிகலுக்கு எதிராகச் செய்த தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே பணயக் கைதிகள் சிறை பிடிக்கப்பட்டிருக்கின்ற்னர் என Katibat Moulathamine என்னும் இசுலாமியப் போராளி அமைப்புத் தெரிவித்துள்ளது. ஆனால் பணயக் கைதியாக சிறைபிடிக்கும் திட்டம் பிரான்ஸ் மாலியில் தாக்குதல் நடத்த முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என பல படைத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.
படங்கள் நன்றி: டெய்லி மெயில் |
ஒரு மணித்தியாலத்திற்குள் போராளிகளை அல்ஜீரியப் படையினர் சூழ்ந்து கொண்டனர். |
பிரித்தானியா, ஜப்பான், ருமேனியா, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், மலேசியா, நோர்வே மற்றும் ஐரிஸ் நாட்டவரும் பணயக் கைதிகளுள் அடங்குவர். ஐரிஸ் நாட்டவரை உடனேயே விடுவித்துவிட்டார்கள். அல்ஜிரியப்படைகளின் தக்குதலின் போது பல கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
மாலியில் அல் கெய்தா பற்றி அறிய இங்கு சொடுக்கவும்: மாலியில் அல் கெய்தா
அல்ஜீரியாவின் படை நடவடிக்கைகயின் போது என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அடிப்படைத் தகவல் கூட தம்க்குத் தெரிவிக்கவில்லை எனன அமெரிக்கா விசனம் தெரிவித்தது. அமெரிக்க ஆளில்லா வேவு விமானம் அல்ஜீரியாவில் வட்டமிடுகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் சார்பாக பணயக் கைதிகள்விவகாரத்தைக் கையாளும் ஐரோப்பிய ராசதந்திரி அல்ஜீரியா அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜப்பானிற்கு கொடுக்கும் தகவல்கள் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டதாக இருக்கின்றன என்கிறார்.
அல்ஜீரியாவின் படை நடவடிக்கைகளின் போது 35 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்ரன. எத்தனை போராளிகள் கொல்லப்பட்டனர் எனத் தெரியவில்லை. பல் வேறு இடங்களில் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருக்கின்றனர். பணயக் கைதிகளுடன் நாட்டை விட்டு வெளியேற போராளிகள் விடுத்த வேண்டு கோளை நிராகரித்த அல்ஜீரிய அரசு பணயக்கைத்களை விட்டுவிட்டு தனியாக வெளியேறலாம் என்றது. பணயக் கைதிகளுடன் வெளியேற முயன்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.
பொதுவாக பணயக் கைதிகள் பிடிபட்டிருக்கும் சூழ்நிலையில் பேச்சுவார்த்தை என இழுத்தடித்து சம்பந்தப்பட்டவர்களை களைப்பும் சலிப்பும் அடையச் செய்து விட்டு தாக்குதல் நடத்துவது வழமை. ஆனால் அல்ஜீரியா உடனே படை நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டது.
அல்ஜீரியா இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக எப்போதும் கடுமையாகவே நடந்து கொள்கின்றது.
இலண்டனில் COBRA எனப்படும் Cabinet Office briefing room A பணிமனையில் பிரித்தானிய அரசின் அவசர கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
பிந்திக் கிடைத்த செய்திகள்:
18/01/2013 GMT 12.10: போராளிகளுக்கு கடைசிச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக அல்ஜீரிய அரசு அறிவித்தது. போராளிகள் சரணடைய மறுத்தனர். அல்ஜீரிய அரசு எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத விதமாகதத் தாக்குவோம் என எச்சரித்தனர் போராளிகள். இதுவரை 18 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment