"இரு பெண்கள் அலறிய படி அருகிருக்க ஒரு கண்ணினூடாக துளைத்துச் சென்ற குண்டால் மூளை சிதறி இரத்த வெள்ளத்தில் அடையாளம் காணமுடியாதபடி இறப்பு வலியால் துடிதுடித்துக் கொண்டிருதார் பின் லாடன்" இது தான் பின் லாடனைக் கொன்ற அமெரிக்கக் கடற்படையில் சிறப்புப் பிரிவான Team - 6 எனப்பட்ட சீல் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறுவது. பின் லாடனைக் கொல்லும் பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பின் லாடனைக் கொன்றது பற்றி "ஒரு இலகுவான நாளல்ல" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அப்புத்தகம் செப்டம்பர் 11-ம் திகதி வர இருந்தது. புத்தகத்தை வாங்க அதிகமானோர் உத்தரவு வழ்ங்கியதால் இருவாரங்கள் முன்னரே புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.
பின் லாடன் மறைந்து வாழ்த மாளிகையில் சீல் படையினர் இறங்கித் தாக்குதல் நடத்தத் தொடங்கியவுடன் மூன்றாம் மாடி அறை ஒன்றில் ஒளித்துக் கொண்ட பின் லாடனை அவர் இருந்த அறைக்குள் தாக்குதல் அணி செல்ல முன்னரே அணியைச் சேர்ந்த குறிபார்த்துச் சுடும் வீரர் சுட்டுவிட்டார். அதற்கு முன்னதாக மாளிகையில் இறங்கியவுடன் பின் லாடனின் மகன் காலித் சுட்டுக் கொல்லப்பட்டார். மூன்றாம் மாடிக்கு ஏற இன்னும் ஐந்து படிகள் இருக்கும் நிலையில் நாம் சூட்டுச் சத்தத்தைக் கேட்டோம் என்றார் "ஒரு இலகுவான நாளல்ல" இன் ஆசிரியர். அவரின் இறப்பை உறுதி செய்ய மார்பில் பல தடவை இறுதியாகச் சுடப்பட்டது.
கையற்ற வெள்ளை ரீஷேர்ட்டும் மண்ணிற தளர்ந்த காற்சட்டையும் பின் லாடன் இறக்கும் போது அணிந்திருந்தார். இரத்த வெள்ளத்தில் தோய்ந்திருந்த அவரது தலையை ஒரு படுக்கை விரிப்பால் துடைத்த போது மிகவும் வெறுக்கப்படும் அந்த முகத்தைப் பார்த்தோம். சீல் படைப் பிரிவில் அரபு மொழி பேசத் தெரிந்த ஒருவர் அவர் பின் லாடனா என அவருடன் இருந்த இரு பெண்களைக் கேட்ட போது அவர்கள் மாறி மாறி வேறு பெயர்களை உளறினர். பின்னர் மொட்டைமாடியில்(பலகணி நடு நடுங்கிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களில் ஒரு சிறுமி முன் படையினர் ஒருவர் முழங்காலில் நின்றபடி இது யார் எனக் கேட்ட போது அச்ச்சிறுமி ஒசமா பின் லாடன் என்றாராம். உன்னால் அவர் ஒசாமா பின் லாடன் என நிச்சயமாகச் சொல்ல முடியுமா என்றபோது ஆம் என்று அச்சிறுமி கூறினார். அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து உலுப்பிய படி stop f--king with me, now tell me who is that என்று கேட்ட போது அப்பெண் ஒசமா என்றார். எந்த ஒசாமா என்றபோது ஒசாமா பின் லாடன் என்றார்.உடனே "ஜெரேனிமோ" இலக்கு தாக்கி அழிக்கப்பட்டது என்று அமெரிக்க மேலிடத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. பின் லாடனைக் கொல்ல அமெரிக்க உளவுத்துறை அவருக்கு ஜேரேனிமோ என்ற குறியீட்டுப் பெயரைச் சூட்டி இருந்தது. பின் லாடனின் வாயில் இருந்து இரண்டும் இரத்தத்தில் இருந்து இரண்டுமாக டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டன. இரண்டும் வேறு வேறு வான்கலங்களில் எடுத்துச் செல்லப்பட்டன. ஒன்று பாக்கிஸ்த்தானியரால் சுடப்பட்டால் மற்றதாவது எஞ்சும் என்பதற்காக அப்படிச் செய்யப்பட்டதாம். பின் லாடனின் மாளிகையில் இருந்த பதிவேடுகள் காணொளிப்பதிவுகள், கணனிகள் யாவற்றையும் சீல் படையினர் தம்முடன் எடுத்துச் சென்றனர்.
பாக்கிஸ்தானுக்குப் பொய் சொன்ன அமெரிக்கா
பின் லாடனைக் கொல்ல அனுப்பிய வான் கலங்கள் தமது தொலைந்து போன ஒரு ஆளில்லா விமானத்தைத் தேடி பாக்கிஸ்த்தான் வான் பரப்புக்குள் செல்கின்றன என்று அமெரிக்க அரசு பாக்கிஸ்த்தானுக்குப் பொய் கூறியது. அமெரிக்கக் கடற்படையில் சிறப்புப் பிரிவான Team - 6 பின் லாடனின் மாளிகைக்குப் போகும் போது கைத் தொலை பேசித் தொடர்புகளை துண்டிக்கும் கருவி தேவைப்படின் இலஞ்சம் கொடுக்க ஏராளமான பணம் ஒளிப்படப் பதிவுக் கருவிகள் போன்றவற்றை தம்முடன் எடுத்துச் சென்றன.
முறையான ஒத்திகை
பின் லாடன் இருந்த மாளிகை போல் ஒரு மாளிகையை அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் அமைத்தனர். அதன் சூழல் போல் அழுக்கான சுற்றாடனும் அமைக்கப்பட்டது. இரவு நேரத்த்தில் மாளிகையில் செய்த ஒத்திகைத் தாக்குதல்களை அமெரிக்க உயர் அதிகாரிகள் இரவில் பார்க்கும் கண்ணாடிகள் அணிந்தபடி பார்த்து தமது திருப்தியைத் தெரிவித்தனர். தாக்குதல் அணியிடம் கடைசியாகக் கூறியது: “Try not to shoot the motherf--ker in the face. Everybody is going to want to see his picture.”
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
2 comments:
Hmmmm Gud History hahahahaha
Hmmmm Gud History hahahahaha
Post a Comment