பிரித்தானிய மகராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்களின் கணித ஆசிரியராகக் கடமையாற்றியவர் இலங்கையில் முதன் முதலில் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பேராசிரியர் திரு சி. சுந்தரலிங்கம். மகராணியின் முடிசூட்டு விழா திருமணவிழா போன்றவற்றிற்கு திரு சுந்தரலிங்கமும் அழைக்கப்படுவதுண்டு. திரு சுந்தரலிங்கத்துடன் கைகுலுக்கும் போது மரியாதையின் நிமித்தம் மகராணியார் தனது கையுறைகளைக் கழற்றி விட்டுக் கைகுலுக்கினார் என்று கூறப்படுகிறது.
அரிச்சந்திர புராணம் கேட்டு அழுத மகராணி
காலயோகி ஆனந்தக்குமாரசாமி அவர்களிடம் பயிலும்போது அரிச்சந்திர புராணத்தைக் கேட்டு மகாராணியார் கண்ணீர் வடித்தார் என்றும் கூறப்படுகிறது
முன்னுக்குப் பின்னர் முரண்பட்ட கையொப்பங்கள்
இலங்கைக்கு சோல்பரிப் பிரபு 1946இல் எழுதிய சோல்பரி யாப்பில் பிரித்தானிய மகராணியார் இரண்டாம் எலிசபெத் கையொப்பமிட்டு அதை சட்டபூர்வமாக்கினார். சோல்பரி யாப்பின் 29-(2)வது பிரிவின் படி இலங்கைப் பாராளமன்றத்தில் சிறுபானமை இனங்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்ற முடியாது. ஆனால் இலங்கைப் பாராளமன்றம் தனிச்சிங்கள சட்டம் இயற்றியபோது அதிலும் பிரித்தானிய மகராணியார் இரண்டாம் எலிசபெத் கையொப்பமிட்டு அதையும் ஒரு சட்டமாக்கினார். அதற்கு எதிராக கோடிஸ்வரன் என்ற அரச ஊழியர் வழக்குக் தொடுத்த போது ஒரு குடிமகன் மகராணிக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாது என பிரபுக்கள் சபை தீர்ப்பு வழங்கியது. இதே போன்று இலங்கை மலையகப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட சட்டத்திலும் மகராணியார் கையொப்பமிட்டார். இச்சட்டமும் அப்போது அமூலில் இருந்த சோல்பரி யாப்பிற்கு எதிரானதாகும். 1972இல் இலங்கையை பிரித்தானிய மகராணியின் ஆட்சியில் இருந்து விலக்கி ஒரு குடியரசாக்கும் கொன்வின் ஆர் டி சில்வாவால் எழுதப்பட்ட அரசியல் யாப்பை அமூல் படுத்தும் போது அதை இலங்கைப் பாராளமன்றத்துக்குள் நிறைவேற்றாமல் இலங்கைப் பாராளமன்ற உறுப்பினர்கள் நவரங்ககலா என்ற மண்டபத்தில் ஒன்று கூடி நிறைவேற்றினார்கள். அந்த அரசியல் யாப்பு இலங்கைச் சிறுபான்மையினத்தினருக்கு எதிரானது என்றபடியால்தான் இப்படிச் செய்தார்கள்.
இன்றும் தமிழர்களை புறக்கணித்த மகராணி
இலங்கை அதிபர் மகிந்த ராஜ்பக்சவை தனது முடிசூடிய வைரவிழாவிற்கு அழைப்பதால் பல தமிழர்கள் மனமுடைந்துள்ளனர். அதற்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் ஆட்சேபனைக் கடிதங்கள் அனுப்புதல்கள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. அவை எதையும் மகராணி கண்டு கொள்ளவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment