Thursday, 7 June 2012

மானங்கெட்ட இந்தியன் பதவி விலக மாட்டான்

02-12-2010இலன்று பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச ஆற்ற இருந்த உரை இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அறிக்கை விட்ட அவர் தான் பிரித்தானியாவில் வேறு எங்காவது ஒரு இடத்தில் தனது உரையை நிகழ்த்துவேன் என்று சூளுரைத்திருந்தார்.  “I am very sorry this has had to be cancelled, but I will continue to seek venues in the UK and elsewhere where I can talk about my future vision for Sri Lanka.”அன்றிலிருந்து பல தரகு நிறுவனங்கள் மூலம் தனது முயற்ச்சியை மேற்கொண்டிருந்தார்.

2011 டிசம்பருடன் ஓராண்டு காலம் ஆகியும் தனது உரையாற்றும் ஆசை நிறைவேறவில்லை என்பதால் பெரும் விசனமடைந்த மஹிந்த கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்பது போல் இந்தியாவை நாடினார். இந்தியாவிற்கு கிடைத்த மேடை பொதுநலவாய நாடுகள். அதில் இந்தியரான கமலேஷ் ஸர்மா செயலாளராக இருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த நிகழ்ச்சி பிரித்தானிய அரசியாரின் முடிசூடிய வைரவிழாக் கொண்டாட்டம். பிரித்தானிய அரசியாரின் வைரவிழாக் கொண்டாட்ட ஏற்பாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடை பெற்றன. வைரவிழாவிற்கு வரும் மஹிந்த ராஜ்பக்ச வருகை தரும் போது பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஒரு வர்த்தக மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் மஹிந்த ராஜபக்சவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டை ஆரம்பித்து வைத்து மஹிந்த தொடக்க உரை ஆற்றுவதாக நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பிரித்தானிய அரசியாருக்கு பொதுநலவாய நாடுகளின் மார்ல்பரோ மாளிகையில் விருந்து கொடுப்பதாகவும் அதில் அரசியாருக்கும் மஹிந்தவிற்கும் ஒரே மேசையில் அமரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மஹிந்தவின் அற்ப ஆசை
மஹிந்த ராஜபக்ச தனது மந்திரி ஒருவரின் பிறந்த நாள் வைபவத்தில் கலந்து கொண்டு தனது நண்பர்களுடன் அரட்டை அடிக்கையில் தான் எப்படி இந்தியாவை ஏமாற்றுகிறார் என்பதைக் கூறித் தம்பட்டம் அடித்ததை கொழும்பில் ஊடகங்கள் அம்பலப்படுத்தி இருந்தன. இலங்கை எப்படி இந்தியாவை ஏமாற்றிவிட்டு சீனாவுடன் தனது உறவை பலப்படுத்தி வருகிறது என்பது உலகறிந்தது. தமிழர்களுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னர் இலங்கை இந்திய வர்த்தக ஒப்பந்தமான சீபாவில் கையொப்பமிடுவதை இலங்கை இழுத்தடித்து இந்தியாவை ஏமாற்றி வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது. இவ்வளவு இருந்தும் மஹிந்தவின் அற்ப ஆசையை நிறைவேற்ற ஏன் இந்தியா தனது அரச உபாயப் பலத்தைப் (diplomatic leverage) பாவித்து மஹிதவை மேடையேற்ற முயன்றது என்பது பெரும் கேள்வி. புது டில்லியில் நடந்த பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு மஹிந்தவின் வேண்டுகோளின் பேரில் அவருக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுத்தது. இந்தியா ஏன் இலங்கையின் கைக்கூலி போல் செயற்படுகிறது? இலங்கைப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களில் இந்தியாவிற்கும் பங்கிருப்பதை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் இலங்கை கையில் இருப்பதாலா? பிரபாகரன் குடும்பத்தில் அனைவரையும் கொல்லுங்கள் என்று இந்திய இளவரசர் சொன்னதை இலங்கை ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறதா?


மான பங்கப்படுத்தப்பட்ட பிரித்தானிய அரசி
பிரித்தானிய அரசியின் வைரவிழா இனிதே நிறைவேறியது. ஆனால் பிரித்தானிய அரசிக்கு பொதுநலவாய நாடுகளால் வழங்கப்பட்ட விருந்து உபசாரம் மட்டும். பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்வதும் கொடும்பாவிகள் எரிப்பதும் உருவப் பொம்மைக்கு காலணிகளால் அடிப்பதும் ஆயிரக்கணக்கில் பெருநகரக் காவல்துறையினரும் கலவரம் அடக்கும் படையினரும் குவிக்கப்பட்டதும் இதுவரை அரசியார் கலந்து கொள்ளும் எந்த ஒரு நிகழ்விலும் நடக்காத ஒன்று. பிரித்தானியா வாழ் தமிழர்களை வைரவிழாவிற்கு இலங்கை அதிபரை அழைத்தமை ஆத்திர மடையச் செய்யவில்லை. வர்த்தக மாநாட்டில் மஹிந்தவிற்கு முக்கியத்துவம் கொடுத்தமையே தமிழ் மக்களை ஆத்திரமடையச் செய்திருந்தது. இதனால் பிரித்தானியா வாழ் தமிழர்கள் ஐரோப்பியா வாழ் தமிழர்களையும் அழைத்து பெரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டக் காரர்களை கண்காணிக்க வந்த காவல் துறையினர் தாம் எதிரபார்த்ததிலும் அதிக மக்கள் கூடியிருந்தமையையும் அவர்கள் முகத்தில் தெரிந்த ஆத்திரத்தையும் பார்த்து கலவரம் அடைந்திருந்தமையை அவர்கள் முகங்களில் காணக் கூடியதாக இருந்தது. தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களில் முன்பு ஒரு போதும் இல்லாத அளவு கலவரம் அடக்கும் படையினர் தருவிக்கப்பட்டு முன்னணியிலும்  பின்னணியிலும் நிறுத்தப்பட்டனர். இவற்றிற்கு எல்லாம் காரணமான கமலேஷ் ஸர்மா பொதுநலவாய நாடுகளின் செயலாளர் பதவியில் இருந்து தானாகவே விலக வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்ய மாட்டார். அவர் ஒரு மானங்கெட்ட இந்தியர்.

1 comment:

Anonymous said...

இந்திய அரசியல்வியாதிகள் மட்டுமல்ல அரசின் உயர் மட்ட அதிகாரிகள் கூட மானம் கெட்டவர்கள் என்பது நீருபனம். கொலைவெறியரிடம் பரிசும் கையூட்டும் வாங்கிக் கொண்டு ஒரு இனத்தையே அழித்த பெருமை அவர்கள் அனைவரையும் சாரும். உதைக்க உதைக்க உதைத்த கால்களையே நக்கிப் பிழைக்கும் ஈனப் பிறவிகள். இவர்களும் சிங்கள கொலைவெறியருடன் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...