Friday, 24 February 2012

நீதியை நோக்கிய நெடும் பயணம்

சிந்து நதிக்கரை தொடங்கிய பயணம்
தென்பொதிகை மலை தவழ்ந்த பயணம்
குமரி முனையையும் கடந்த பயணம்
கதிர மலையிலும் கமழ்ந்த பயணம்
பாரெங்கும் பயந்தொடிய பயணம்
இன்றும் தொடர்கின்றது
ஆங்கிலக்கால்வாயையும்
பனிமலைகளயும் தாண்டி
நீதிக்கான நெடும் பயணமாய்

உரிமையிழந்துவிட்டான் இவன்
உடமையிழந்துவிட்டான் இவன்
வீழ்ந்து விட்டான் இவன்
இனி எழும்ப மாட்டான் இவன்
Hobson choice என்னும்
கொடுத்ததை வாங்கும்
பிச்சைக்கார நிலை இவன் நிலை
என எள்ளி நகையாடிய
பார்ப்பனிய விமர்சகர்கள்
முகத்தில் கரி பூச
நீதியை நோக்கி கடமை கண்ணாக
நீண்ட நெடும் பயணம் தொடர்கின்றது

அடுத்துக் கெடுத்த அயல் நாட்டையும்
துணையென வந்து துரோகியானோரையும்
தீர்க்கவென வந்து தீர்த்துக் கட்டியோரையும்
எந்தையும் தாயும் தந்தை நாடென நம்பிய
பாரததேசம் பாதக தேசமானதையும்
சிந்தையில் சுமந்து கடமை கண்ணாக
நீண்ட நெடும்பயணத்தைத் தொடர்கின்றான்
நீதியை வேண்டி நடக்கின்றான்

எத்தனை தூரம் நடந்தாலும்
எத்தனை நாடுகள் கடந்தாலும்
எந்தனை மன்றுகளின் முன்றலில்
நின்று கூக்குரலிட்டாலும்
நான் வாழ்ந்த காலத்தில்
நம்மவர் மூன்று இலட்சம் பேர்
கொடூரமாகக் கொல்லப்பட
கையாலாகாதவனாய்
நின்ற என் பாவம் என்றும் தீராது

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...