Wednesday, 11 January 2012
இருவர் ஒருவராக...... வாய்கள் சொல்லாமலே....
முதற் சந்திப்பில்
நாலு விழிகளின் மோதலில்
வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
சரளி வரிசைகள்
இருமனங்கள்
இரட்டச்சுரங்களாய்
ஒருமனதாய் இணைய
வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
ஜண்டை வரிசைகள்
ஊடலும் கூடலும்
மாறி மாறி வர
இதயத்து ஏக்கங்களை
வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
தாட்டு வரிசைகள்
கிங்ஸ்ரனில் உணவகத்தில்
மெழுகு திரியொளியில்
இருவரையும் அலங்கரித்தன வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்த
அலங்கார வரிசைகள்
Chessington adventure parkஇல்
ரோலர் கோஸ்டரில்
பயத்தில் வந்த நெருக்கத்தில் வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
இனிய கீதம்
வெஸ்ற் எண்ட் தியேட்டரில்
பல வர்ண விளக்கொளியில்
கட்டி அணைக்கையில் வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
நின்னுக் கோரி வர்ணம்
என் தனி அறையில்
அந்த இரவில்
இருவர் ஒருவராக
வாய்கள் சொல்லாமலே
விழிகள் இசைத்தன
தோடியில் தில்லான
யாருக்கும் சொல்லாமல்
இருந்த உறவை
உலகறிய அரங்கேற்றுவோம்
மணவறையில்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...

No comments:
Post a Comment