Wednesday 11 January 2012

ஈரானிய அணு விஞ்ஞானி குண்டு வெடிப்பில் கொலை: அமெரிக்காவைக் குற்றம் சுமத்துகிறது ஈரான்.

ஈரானிய அணு விஞ்ஞானியான முஸ்தபா அஹ்மதி றொஸானன் என்னும் பல்கலைக்கழகப் பேராசிரியர் அவரது வாகனத்தில் இனம் தெரியாத இருவர் பொருத்திய குண்டினால் கொல்லப்பட்டார். இத்தாக்குதல் ஈரானின் அணுத் திட்டத்தில் வேலை செய்த முந்தைய விஞ்ஞானிகள் கொல்லப்படமை போன்றே அமைந்திருந்தன. இரண்டு வருடங்களுக்குள் ஈரானில் இது போன்ற தாக்குதல்கள் நான்கு இடம்பெற்றுள்ளன. அவற்றில் இரு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் தப்பிவிட்டார்.

கொல்லப்பட்ட 32 வயதான முஸ்தபா அஹ்மதி றொஸானன் Natanz uranium enrichment facility இல் மேற்பார்வையாளராகக் கடமையாற்றியவர். ஈரான் அணுக் குண்டு தாயாரிக்கப் போகிறது என்று அமெரிக்கா அண்மைக்காலமாக ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வந்த்துள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கின்றன.

வயதான முஸ்தபா அஹ்மதி றொஸானன் கொல்லப்பட்டமைக்கு ஈரான் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் குற்றம் சாட்டுகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...